Thursday, July 17, 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ் 

சென்னை 17 ஜூலை 2025 – இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது, இன்று தனது புதிய முதன்மை சலுகையான ‘பார்தி ஆக்ஸா ஆயுள் உத்தரவாத பச்சட் திட்டத்தை ( Guaranteed Bachat Plan) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் நடுத்தர வருமானம் கொண்ட இந்தியர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் சேமிப்பை உருவாக்க எளிய ஆனால் நம்பகமான தீர்வைத் தேடுபவர்களுக்கு ஏற்ற காப்பீடு திட்டமாகும். 

பார்தி AXA லைஃப் உத்தரவாத பச்சட் திட்டம் Protection bhi, Bachat bhi எனும்  வலுவான வாக்குறுதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வருடாந்திர பிரீமியத்தை விட 30 மடங்கு வரை (மற்றும் ரைடர்களுடன் 50 மடங்கு வரை) ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது, மேலும் உத்தரவாதமான வருமானத்தையும் வழங்குகிறது. இது இளம் தொழில் வல்லுநர்கள், வணிக உரிமையாளர்கள், சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மற்றும் இந்தியா முழுவதும் கட்டுப்பாடான, கவலையற்ற நிதி திட்டமிடலைத் தேடும் குடும்பங்களுக்கு ஒரு சிறந்த திட்டமாக அமைகிறது.

பார்தி AXA ஆயுள் உத்தரவாத பச்சட் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

அதிக பாதுகாப்பு: முதல் நாளிலிருந்து உங்கள் வருடாந்திர பிரீமியத்தை விட 30 மடங்கு வரை ஆயுள் காப்பீட்டுத் தொகை (பயனர் விருப்பங்களுடன் 50 மடங்கு வரை அதிகரிக்கலாம்)

உத்தரவாதமான வருமானம்: வாடிக்கையாளர்கள் உறுதியான சலுகைகளைப் பெறுதல் மற்றும் எதிர்கால தேவைக்கு  சேமிக்க உதவுகிறது. 

நெகிழ்வான கட்டண விருப்பங்கள்: உங்கள் தேவைகளின் அடிப்படையில் உங்கள் சலுகைகளை மொத்த தொகையாகவோ அல்லது சீரான வருமானமாகவோ பெறத் தேர்வு செய்யலாம். 

விருப்ப ரைடர்கள்: விபத்து மரணம், தீவிர நோய், மருத்துவமனை ரொக்கம் மற்றும் பிரீமியம் தள்ளுபடி போன்ற பல ரைடர் சேர்க்கைகள் மூலம் உங்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும்.

வரி சலுகைகள்: வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்களின்படி.

அறிமுக விழாவில் பேசிய பார்தி AXA ஆயுள் காப்பீட்டின் தலைமை வளர்ச்சி அதிகாரி திரு. பிரேரக் பர்மர் கூறுகையில்,  “பார்தி AXA ஆயுள் காப்பீட்டில், காப்பீடு எளிமையானதாகவும், நம்பகமானதாகவும், அன்றாட இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.  பார்தி AXA ஆயுள் உத்தரவாத பச்சட் திட்டம் என்பது எந்த ஆச்சரியங்களும் இல்லாமல், பாதுகாப்பு மற்றும் சேமிப்புகளை விரும்பும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.  உத்தரவாதமான வருமானம், நெகிழ்வான நன்மைகள் மற்றும் ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்புடன், இந்தத் திட்டம் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கனவுகளைப் பாதுகாக்கவும், நம்பிக்கையுடன் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடவும் அதிகாரம் அளிக்கிறது.”என்றார். 

பார்தி AXA ஆயுள் உத்தரவாத பச்சட் திட்டம் (UIN: 130N144V01) என்பது இணைக்கப்படாத, சந்தை முதலீட்டில் பங்கேற்காத தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேமிப்பின் முழு கட்டுப்பாட்டையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசி காலம், பிரீமியம் செலுத்தும் காலம், சலுகை செலுத்தும் விருப்பம் மற்றும் ரைடர் கவரேஜ் ஆகியவற்றை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். 

புரிந்துகொள்ள எளிதான, வாங்க எளிதான மற்றும் உண்மையான நிதித் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளுடன் - இந்தியாவிற்கு சேவை செய்யும் பார்தி AXA Life இன் நோக்கத்தில் இந்தத் திட்டம் ஒரு பெரிய படியாகும்.