AM/NS இந்தியா நிறுவனம், இந்தியாவில் ஆட்டோமொடிவ் துறைக்கு மிக அதிக வலிமையான எஃகு-ஐ உற்பத்தி செய்யும் முதலாவதான அதிநவீன கண்டினுயஸ் கால்வனைசிங் லைனை (CGL) நிறுவுகிறது
இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, 1180 MPa வரை வலிமை கொண்ட உலகத் தரம் வாய்ந்த சிறப்பு, உயர் தர எஃகு-ஐத் தயாரிக்க வடிவமைக்கப்பட்ட புதிய தொழிற்சாலை
மாண்புமிகு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட, இந்நிறுவனத்தின் லட்சியமான ₹ 60,000 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தின் பகுதியான நவீன யூனிட்.
வளர்ந்த நாடுகளின் தரநிலைகளுடன் பொருந்தக்கூடியதும், 'புதிய இந்தியா'-வின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தயாரிப்புகள்
சென்னை: ஆர்சலர்மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா (AM/NS இந்தியா) இன்று, குஜராத்தின் ஹசிராவில் உள்ள அதன் பிரதான ஆலையில் ஒரு புதிய, அதிநவீன கண்டினுயஸ் கால்வனைசிங் லைனை (CGL) நிறுவுவதாக அறிவித்தது. இந்த மேம்பாடானது, AM/NS இந்தியாவை, 1180 மெகாபாஸ்கல் (MPa) வரையிலான வலிமை கொண்ட அட்வான்ஸ்டு ஹை-ஸ்ட்ரெங்த் ஸ்டீல் (AHSS)-ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நவீன CGL வரிசையைக் கொண்ட இந்தியாவின் ஒரே நிறுவனமாக நிலைநிறுத்துகிறது. இத்தகைய வலிமையானது, வளர்ந்துவரும் ஆட்டோமோட்டிவ் பயன்பாடுகளுக்கான அசாதாரண பாதுகாப்பு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு அவசியமானதாகும்.
இந்தத் தொடக்கத்தின் மூலம் நிறுவனம் மேல்நிலை, கீழ்நிலை மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹ 60,000 கோடி மதிப்பிலான ஒரு லட்சிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்திட்ட ரீதியாகச் செயல்படுத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த எஃகு ஆலையின் விரிவாக்கத் திட்டம், வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு எஃகு தரங்களில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்புதிய CGL-ஆனது, ஆர்செலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீல் ஆகிய அதன் தாய் நிறுவனங்களின் ஆழ்ந்த உலகளாவிய நிபுணத்துவத்திலிருந்து பெறப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்தர, சிறந்த எஃகுக்கு இறக்குமதிகளை பெரும்பாலும் நம்பியுள்ள ஆட்டோமொடிவ் துறைக்கு ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. இது ஆர்சலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீலின் உரிமம் பெற்ற தயாரிப்புகள் உட்பட கால்வனைஸ்டு (GI) மற்றும் கால்வன்னீல்டு (GA) பூச்சுடனான தட்டையான எஃகுகளை உற்பத்தி செய்யும். இந்த புத்தாக்கமான எஃகுகள் சிறந்த மறுசுழற்சி திறன், உயர்-வடிவமைப்பு, எடைகுறைப்பு மூலம் எரிபொருள் சிக்கனம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும். இப்பண்புகள் அனைத்தும், குறிப்பாக ஏப்ரல் 2027 இல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தியாவின் கார்ப்பரேட் அவரேஜ் ஃபியூயல் எஃபிஸியன்சி (CAFE) ஃபேஸ் III விதிமுறைகளுடன், நவீன மொபிலிட்டி தீர்வுகளுக்கான முக்கியத் தேவைகள் ஆகும்.
ஆர்சலர்மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியாவின் (AM/NS India) தலைமை நிர்வாக அதிகாரி திரு. திலீப் உம்மன் அவர்கள், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட எங்கள் விரிவாக்கத் திட்டத்தில், முதல் முறையாக தொடர்ச்சியான கால்வனைசிங் பாதையை இயக்குவது மற்றொரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது" என்று கூறினார். மேலும், “இந்த லட்சியத் திட்டத்தின் முயற்சிகள் இப்போது பலனளித்து வருகின்றன, மேலும் புதிய பாதை மற்றும் வரவிருக்கும் வசதிகள் வளர்ந்த நாடுகளில் தற்போது கிடைக்கும் தரத்திற்கு ஏற்ற எஃகு உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நாங்கள் பெருமையுடன் கூறலாம். 'விக்சித் பாரத்@2047' என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி முன்னேறும்போது, நாட்டிற்குத் தேவையான சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்றும் கூறினார்.
"எங்கள் தாய் நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆதரவுடன், நாங்கள் புதிய பென்ச்மார்க்-குகளை நிர்ணயித்துள்ளதுடன், ஆட்டோமோட்டிவ் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்தியாவில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிக அதிக வலிமை கொண்ட எஃகு உட்பட, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். இந்த தனித்துவமான லைனிலிருந்து வரும் உள்நாட்டு உற்பத்தியானது, இந்நாட்டின் தற்சார்பு இலக்கை நோக்கிய அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும்." என்று மேலும் கூறினார்.
இந்த நவீன கால்வனைசிங் யூனிட்-ஆனது, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதற்கான இந்நிறுவனத்தின் கீழ்நிலை திறன்களில் குறிப்பிடத்தக்க ஒரு பாய்ச்சலைக் குறிக்கிறது. இந்த CGL-ஆனது, 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' ஆகிய முன்முயற்சிகளுக்கு AM/NS இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை எஃகு-க்கு இந்தியா வளங்குன்றா நிலைக்கு மாறுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இறக்குமதிக்கான மாற்றுத் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், உள்நாட்டு தேவைக்கும் உயர்தர எஃகு கிடைப்பதற்கும் இடையிலான அவசிய இடைவெளியைக் குறைக்க இந்நிறுவனம் போராடுவதன் மூலம், உலகளவில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் இது, PLI திட்டம் உட்பட பல்வேறு முன்முயற்சிகள் மூலம் கீழ்நிலை திறன்களை உருவாக்குவதன் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட எஃகு-இன் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
நவீன சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த உற்பத்தி மையமானது, வழக்கமான CGL-களுடன் ஒப்பிடுகையில், CO₂ உமிழ்வுகளின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது, புத்தாக்கமான கழிவு வெப்ப மீட்பு, நவீன வெப்ப ஆற்றல் கட்டுப்பாடு, ரீஜெனெரேட்டீவ் எலக்ட்ரிகல் டிரைவ்கள் மற்றும் மின்னாற்பகுப்பு H2 பயன்பாடு போன்றவற்றால் அடித்தளமைக்கப்பட்டுள்ளது. இது AM/NS இந்தியாவின் கிரீன் ஸ்டீல் டாக்ஸோனோமி (Green Steel Taxonomy)மற்றும் பரந்த நிலைத்தன்மை இலக்குகளுடன் ஒத்திருப்பதை ஆதரிக்கும்.
இவ்விரிவாக்கத் திட்டமானது, இந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை, அதன் ஹசிரா ஆலையில் 24 MTPA ஐ எட்டும் இலக்குடன், தற்போதைய 9 MTPA இலிருந்து 15 MTPA ஆக உயர்த்துவதில் சிறப்பாக முன்னேறி வருகிறது. இதில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை ஆகிய இரு எஃகு உற்பத்தி திறன்களும் அடங்கும்.
இந்நிறுவனம், ஆந்திரப் பிரதேசத்தில் தனியாக ஒரு ஒருங்கிணைந்த எஃகு ஆலையை அமைப்பதற்காக, அங்கு ஏற்கனவே நிலம் கையகப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட ஒடிசாவில் ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளை அமைப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், எஃகு தயாரிப்பில் டிகார்பனைசேஷனை விரைவுபடுத்துவதில் இந்நிறுவனம் தனது கவனத்தை மையப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதன் எரிபொருள் கலவையில் ஒருங்கிணைத்தல், ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் இணக்கத்துடன், குறைந்த கார்பனுக்கான வழிமுறைகளை ஆராய்தல் ஆகியவற்றை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ABOUT ARCELORMITTAL NIPPON STEEL INDIA (AM/NS India):
ArcelorMittal Nippon Steel India (AM/NS India) is a joint venture between ArcelorMittal and Nippon Steel, two of the world’s leading steel manufacturing organisations. A leading integrated flat carbon steel producer in India, the company has a crude steel capacity of 9 million tonnes per annum with state-of-the-art downstream facilities. It produces a fully diversified range of flat steel products, including value-added steel, and has a pellet capacity of 20 million tonnes.