Friday, March 7, 2025

அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் இடம்பெறுகின்ற புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை L'Oréal Paris வெளியிட்டது

அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் இடம்பெறுகின்ற புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை L'Oréal Paris வெளியிட்டது

சென்னை, மார்ச் 06, 2025 – உலகின் முதலிடம் வகிக்கும் அழகு பிராண்டான L'Oréal Paris, பாலிவுட்டின் அபிமான தம்பதியான அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் இடம்பெறுகின்ற ஒரு புதிய ஈர்க்கக்கூடிய டிஜிட்டல் பிரச்சாரத்தை வெளியிட்டது. அவர்களின் முதல் பிரச்சாரத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்த தம்பதி மீண்டும் ஒன்றிணைந்து மற்றொரு கவர்ந்திழுக்கின்ற டிஜிட்டல் படத்தில் தோன்றி, அவர்களின் தனித்துவமான அழகு மற்றும் வசீகரிப்புடன் ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.

சமீபத்திய டிஜிட்டல் படத்தில், சித்தார்த் ஒரு வேடிக்கையான ரீலுடன் இன்ஸ்டாகிராமில் தோன்றி, 2003ஆம் ஆண்டு அவரின் பாராட்டப்பட்ட கிளாசிக் திரைப்படமான "பாய்ஸ்" படத்தை நினைவூட்டும் வகையில் பார்வையாளர்களுடன் உரையாற்றுகிறார். ஒரு இலகுவான கணத்தில், அவர் பொதுவான முடி பிரச்சினைகளான முடியை பிசுபிசுப்புடன் தோற்றமளிக்கச் செய்கிற அதிக எண்ணெய் சேர்வதற்கு வழிவகுக்கின்ற அழுக்கு மற்றும் வியர்வை ஆகியவற்றை எதிர்கொள்வது பற்றி பேசுகிறார். இதைத் தொடர்ந்து, அதிதி தலையோட்டு பிரச்சினைகளை சமாளிக்க உதவும் ஒரு நம்பகமான தீர்வான L'Oréal Paris ஹயாலூரான் பியூர் ஷாம்பூவை அவரிடம் கொடுக்கிறார். இந்த ஜோடியின் தனித்துவமான வசீகரிப்பு, ஷாம்பூவின் முக்கிய மூலப் பொருட்களான சாலிசிலிக் அமிலம் மற்றும் ஹயாலூரானிக் அமிலம் பற்றிய ஒரு விளையாட்டுத்தனமான பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபடும்போது மிளிர்கிறது.

ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில், தலையின் மேற்பகுதியை புதியதாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒரு சவாலாக இருக்கலாம். L'Oréal Paris ஹயாலூரான் பியூர் ஷாம்பூ, எண்ணெய் தேக்கத்தை எதிர்த்துப் போராடவும், முடியை இலேசாகவும், சுத்தமாகவும், புதியதாகவும் உணர செய்யும் சரியான தீர்வாகும்.  

அவர் இந்த தயாரிப்பின் ஒரு ரசிகராக இருந்தாலும் அதிதி அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக உள்ளார் என்பதை சித்தார்த் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் நகைச்சுவையான கேலி தொடர்கிறது.

இந்த பிரச்சாரத்தைப் பற்றி பேசிய L'Oréal Paris இந்தியா நிறுவனத்தின் பொது மேனேஜர் டாரியோ ஜிஸ்ஸி கூறுகையில், “சித்தார்த்தின் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மற்றும் நகைச்சுவையை கருத்தில்கொண்டு, அவரை மீண்டும் எங்கள் டிஜிட்டல் படத்தில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கூடுதலாக, L'Oréal Paris குடும்பத்திற்கு அதிதி ராவ் ஹைதரி தொடர்ந்து செய்து வரும் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இந்த பிரச்சாரம் அவர்களின் இயற்கையான ஒப்பனையை மட்டுமல்லாமல், சாலிசிலிக் அமிலம் மற்றும் ஹயாலூரானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டு எங்கள் அறிவியல் ரீதியான மேம்பட்ட சூத்திரத்தின் மூலம் ஒரு பொதுவான தலைமுடி பிரச்சினையான எண்ணெய்த்தன்மையுள்ள தலையின் மேற்பரப்பு பிரச்சினையை நிவர்த்தி செய்வதையும் எடுத்துக்காட்டுகிறது. L'Oréal Paris நிறுவனத்தில், உண்மையான அழகு தீர்வுகளை வழங்கும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”   என்று கூறினார்.

இந்த சமீபத்திய டிஜிட்டல் படம் அதன் வெளியீட்டின் சில மணிநேரங்களுக்குள் மில்லியன் கணக்கானோரின் கவனத்தை ஈர்க்கின்ற ஒரு அபரிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜோடியின் ஈர்க்கக்கூடிய திரை இருப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர், இது பிரச்சாரத்தை ஒரு சமூக ஊடக பரபரப்பாக மாற்றியுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் நிபுணர்-ஆதரவு முடி பராமரிப்பு தீர்வுகளின் இணைந்த கலவையுடன், இந்த கூட்டுமுயற்சி, அழகு தொழிலில் ஒரு தலைவராக L'Oréal Paris இன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.  

வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

L'Oréal Paris நிறுவனம் பற்றி: 

லொரியல் பாரிஸ், உலகின் முதலிடம் வகிக்கும் அழகுப் பிராண்டாகும், இது 40 ஆண்டுகளுக்கும் மேலான முன்னோடி அறிவியல் ஆராய்ச்சி மரபைக் கொண்டுள்ளது மேலும் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் மிகவும் மேம்பட்ட அழகுப் பராமரிபின் ஒரு நுணுக்கமான தேர்வை இதன் நுகர்வோருக்கு வழங்குகிறது.

ஒப்பனைப் பொருட்களைத் தாண்டி, L'Oréal Paris எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் ஊக்குவிக்கும் வகையில் பாரிஸ் அழகின் ஒரு உலகத்தை உருவாக்குகிறது. நகரின் தெருக்களிலிருந்து ரன்வேக்கள் வரையிலான உரையாடலில், பாரிஸ் அழகு மற்றும் பெண்மையின் வெவ்வேறு கண்ணோட்டங்கள் தினமும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

"ஏனென்றால் நீங்கள் அதற்கு தகுதியானவர்." என்ற இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற முழக்கத்துடன், ஆரம்பம் முதல், L'Oréal Paris பெண்களை அவர்களின் சொந்த விதிகள் மற்றும் ஆசைகளின்படி அவர்களின் சிறந்த வாழ்க்கைகளை வாழ ஊக்குவித்துள்ளது. பெண்களை மேம்படுத்துவதற்கும், மிகவும் உள்ளடக்கிய நாளைய உலகை உருவாக்க அவர்களுடன் ஒத்துழைப்பதற்கும் ஒரு செழுமையான பாரம்பரியத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.