Friday, August 23, 2024

பாரத்பென்ஸ் ஹெவி-டூட்டி ரிஜிட் டிரக்குகள் புதிய எஞ்சின் மற்றும் பேலோட் பயன்பாடுகளுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது

பாரத்பென்ஸ் ஹெவி-டூட்டி ரிஜிட் டிரக்குகள் புதிய எஞ்சின் மற்றும் பேலோட் பயன்பாடுகளுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 

முற்றிலும் புதிய பாரத்பென்ஸ் 6.7-லிட்டர் பிஎஸ்விஐ ஸ்டேஜ் 2 டீசல் என்ஜினுடன் வருகிறது.

புதிய என்ஜின் அதிக ஹார்ஸ்பவர் மற்றும் டார்க் விருப்பங்களின் இரண்டு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

பிடுமின், பல்கர், மற்றும் பெட்ரோலியம் ஆயில் & லூப்ரிகனட்ஸ் (பிஓஎல்) பயன்பாடுகள் போன்ற பல புதிய பயன்பாடுகளுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட சேஸ் வடிவமைப்பு.

மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு நம்பகத்தன்மைக்காக 10-இலட்சம் கிமீ ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (ஏஎம்சி) அடங்கும் 


சென்னை - டெய்ம்லர் டிரக் ஏஜியின் ("டெய்ம்லர் டிரக்") முழுச் சொந்தமான துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (டிஐசிவி) (Daimler India Commercial Vehicles (DICV), பாரத்பென்ஸில் இருந்து புதிய அளவிலான ஹெவி-டூட்டி ரிஜிட் டிரக்குகளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தும் அறிவிப்பைச் செய்தது. உயர்ந்த நம்பகத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட புதிய ரிஜிட்கள், புதிய பாரத்பென்ஸ் பிஎஸ்விஐ-ஸ்டேஜ்2 6.7-லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும், தற்போதுள்ள பல்வேறு பேலோட் பயன்பாடுகளுக்கு கூடுதலாக, மேலும் பிட்யூமன், பல்கர், பெட்ரோலியம், ஆயில் & லூப்ரிகன்ட்ஸ் (பிஓஎல்) போன்ற புதிய பேலோட் பயன்பாடுகளை வழங்கும். புதிய ரிஜிட் வரம்பில் உள்ள அனைத்து-புதிய எஞ்சின் அதிக ஹார்ஸ்பவர் மற்றும் டார்க் உடன் இரண்டு கட்டமைப்புகளில் வழங்கப்படுகிறது – 250எச்பி மற்றும் 950என்எம் மற்றும் 306எச்பி மற்றும் 1200என்எம், வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். 


2826R (6x2), 3526R (8x2), 3832R (8x2), 4232R (10x2) மற்றும் 4832R (10x2) கட்டமைப்புகள் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து-புதிய பாரத்பென்ஸ் ஹெவி-டூட்டி ரிஜிட் வரம்பில் மாடல்கள் கிடைக்கும்.


இதன் அறிமுக விழாவில் பேசிய டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸின் தலைவரும் தலைமை வணிக அதிகாரியுமான திரு. ஸ்ரீராம் வெங்கடேஸ்வரன் அவர்கள் இவ்வாறு கூறினார், 'எங்கள் புதிய பாரத்பென்ஸ் ரிஜிட்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியப் போக்குவரத்துத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளை ஆதரிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த டிரக்குகள் கருவிகள் மட்டுமல்ல, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தின் ஆற்றல்மிக்க உலகத்தை திறம்பட வழிநடத்த வடிவமைக்கப்பட்ட நம்பகமான கூட்டாளிகள். அனைத்து புதிய 6D26 என்ஜின் மூலம் இயக்கப்படும், இந்த புதிய டிரக்குகள் எரிபொருள் திறன் மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு வருகின்றன, இது உரிமையாக்கு மொத்த செலவைக் குறைப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கிறது. இந்த என்ஜின்கள் குறிப்பாக கணிசமான பேலோடுகளை திறமையாக கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குறைந்த வேகத்தில் மென்மையான மாற்றங்களையும் அதிக டார்க் வினியோகத்தையும் அனுமதிக்கிறது. இவை பல கட்டமைப்புகளில் கிடைக்கின்றன, அவை மேம்படுத்தப்பட்ட ஆக்சிலெரேஷன் (முடுக்குவேகம்) மட்டுமல்ல, கிளாஸ்-லீடிங் பீக் மற்றும் பிளாட் டார்க்கையும் வழங்குகின்றன, இதன் விளைவாக அதிகபட்ச செயல்பாட்டுத் திறன் மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் வசதி, நீண்டதூரப் பயணங்களின்போது களைப்பைக் குறைக்கிறது.”


மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன்:

டிஐசிவி (DICV) சமீபத்திய பாரத்பென்ஸ் ரிஜிட் ஹெவி-டூட்டி டிரக்குகளில் எரிபொருள் சிக்கனத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது, இஎஃப்எஃப்ஐ+ (EFFI+) பேக்கேஜ் மற்றும் மல்டி டிரைவ் பயன்முறை செயல்பாடுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இஎஃப்எஃப்ஐ+ பேக்கேஜ், வேலையில்லா நேரத்தின்போது தேவையற்ற எரிபொருள் எரிப்பைக் குறைக்க, 'குறைந்தபட்ச நிறுத்தப்பட்ட மீளுருவாக்கம்' உட்பட பல முக்கியப் புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது; செயல்திறனுக்காக உகந்த ஆர்பிஎம் (RPM) வரம்பிற்குள் இயந்திர வேகத்தை தானாகவே பராமரிக்கும் ‘ஆட்டோ கிரீன் பேண்ட்’;  ‘ஆட்டோ ஐட்லிங் ஷட் டவுன்’, இது எரிபொருளைச் சேமிப்பதற்காக நீண்டநேரம் செயலற்ற நிலையில் இருக்கும்போது இயந்திரத்தைத் துண்டிக்கிறது; 'ஹார்ஷ் ஆக்சிலரேஷன் கண்ட்ரோல்', இது எரிபொருள் விரயத்தைத் தடுக்க ஆக்சிலரேஷன் விகிதங்களைக் கட்டுப்படுத்துகிறது.


மேலும், மல்டி-டிரைவ் பயன்முறை அம்சமானது, வெவ்வேறு லோடு நிலைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு இயக்க முறைகளுக்கு இடையே தேர்வு செய்ய டிரைவர்களை அனுமதிக்கிறது, பகுதி லோடு அல்லது லோடு இல்லாத செயல்பாடுகளின்போது செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பங்கள், மேம்பட்ட காமன் ரயில் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் லோடு அடிப்படையிலான வேகக் கட்டுப்பாடு (LBSC) ஆகியவற்றுடன் கூட்டாக செயல்திறனை மேம்படுத்துகிறது அத்துடன் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கிறது, இயக்கச் செலவு-செயல்திறனை உறுதி செய்கிறது. 


பல்வேறு பயன்பாடுகளுக்கான மேம்படுத்தப்பட்ட சேஸ்:

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜாகிள் பிரேம் சேஸ், ரிவெட்டட் இணைப்புகளுடன் கட்டப்பட்டது, பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. இந்த மேம்பட்ட சேஸ் வடிவமைப்பு, பிடுமின், பல்கர் மற்றும் பெட்ரோலியம் ஆயில் & லூப்ரிகன்ட்ஸ் (பிஓஎல்) பயன்பாடுகள் போன்ற பல புதிய பயன்பாடுகளை ஆதரிக்கும் வகையில் ஆழ்ந்து ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரக்குகளில் பாரபோலிக் வகை, கிரீஸ் இல்லாத சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது.


10 இலட்சம் கிமீ ஏஎம்சி உடன் நீண்டகால நம்பகத்தன்மை:

செயல்பாட்டு நம்பகத்தன்மையை ஆதரிக்க, டிரக்குகள் கவனத்தைக் கவரக்கூடிய 10 இலட்சம் கிமீ ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்துடன் (ஏஎம்சி) வருகின்றன. இந்தச் சலுகை டிஐசிவி தனது தயாரிப்புகளின் நீடித்துழைக்கும் தன்மை மீதான நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களை வெற்றிபெறச் செய்வதற்காக உரிமையாக்கு மொத்த செலவைக் குறைப்பதற்கு நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.



டிரக் பாதுகாப்பில்  மற்ற அனைத்திற்கும் முன்னணியில் உள்ளது:

புதிய பாரத்பென்ஸ் ரிஜிட்ஸ் டிரக் பாதுகாப்பில் மற்ற அனைத்திற்கும் முன்னணியில் உள்ளது, கடுமையான இயு இசிஇ ஆர்29-02 (EU ECE R29-02) கேபின் பாதுகாப்பு விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குகிறது. ஏரோடைனமிகல் முறையில் வடிவமைக்கப்பட்ட ஏசி கேபின்கள் வாகனத்தின் வேகத்தைத் தக்கவைக்க உதவுகின்றன, அதே நேரத்தில் வசதியான ஸ்லீப்பர் பெர்த்கள் நீண்டதூர பயணங்களை ஆதரிக்கின்றன. மேம்பட்ட டிரைவர் நிலை கண்காணிப்பு அமைப்புகள், ஏஐ மற்றும் கணினி பார்வையைப் பயன்படுத்தி, ஓட்டுனர் கவனச்சிதறல், களைப்பு ஆகியவற்றை விழிப்புடன் தடுக்கிறது. மேம்பாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் பிரேக் சிஸ்டம், பிரேக்கிங் செயல்திறனை 28% உயர்த்துதல், மற்றும் பாதுகாப்பான பல்வேறு நிலைகளுக்கு எளிதாக செல்வதை எளிதாக்குவதற்கு மறுபக்க கேமராக்கள் ஆகியவை அடங்கும்.


திரு. ஸ்ரீராம் வெங்கடேஸ்வரன் அவர்கள் இவ்வாறு மேலும் கூறினார், “எங்கள் டிரக்குகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நகர்ப்புற விநியோகம் முதல் நீண்டதூர போக்குவரத்து வரை அனைத்தையும் கையாளும் திறன் கொண்டது. இந்தியச் சந்தையில் தேவை அதிகரித்து வருவதால், எங்களது பாரத்பென்ஸ் ரிஜிட் வரம்பு வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன, மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் செலவு-செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் உண்மையான நன்மைகளைப் பார்ப்பதை உறுதிசெய்கிறோம்.”


பாரத்பென்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் உயர் மதிப்பு முன்மொழிவுகள், தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் நீண்டகால சேவை எண்ணிக்கை, சிறந்த தொழில்துறை உற்பத்தியாளரின் உத்தரவாதம், அதன் ‘ரக்ஷனா’ முன்முயற்சியின் மூலம் 48 மணிநேரச் சேவை / பழுதுபார்க்கும் நேரம் மற்றும் எரிபொருள் திறன் மேம்பாடுகள்.  இவையும் இன்னும் பல காரணிகளும் பாரத்பென்ஸ் வணிக வாகனங்கள் ஒட்டுமொத்தமாக வழங்கும் உரிமையாக்கு மொத்த செலவுக்கு சிறந்த பங்களிக்கின்றன.


ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, பாரத்பென்ஸ் இந்திய வணிக வாகனத் துறையில் மாற்றத்தக்க சிவி பிராண்டாக இருந்து வருகிறது. அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்காக கட்டுமானம், சுரங்கம், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற இந்த பிராண்ட், டிரக் சந்தையில் முன்னணியில் உள்ள அதன் நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. பாரத்பென்ஸின் வெற்றியின் அடிக்கல்லாக, மிகச்சிறந்த சேவை பேணல் நிறுத்தம், நீண்டகால சேவை எண்ணிக்கைகள்,  இத்தொழில்துறையில் முன்னணி உத்தரவாதச் சலுகை ஆகியவை உள்ளன. டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்கி, அதன் நெட்வொர்க்கை நாடு முழுவதும் 360க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது, மேலும் 400க்கும் மேற்பட்ட வழங்குநர்களுடன் உறவுகளை உருவாக்கியுள்ளது.