Wednesday, August 21, 2024

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தமிழகத்தின் திருவள்ளூரில் ஒரு வெற்றிகரமான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை நடத்தியது

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தமிழகத்தின் திருவள்ளூரில் ஒரு வெற்றிகரமான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை நடத்தியது

2,500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கற்பித்த ஒரு பிரச்சாரம்

திருவள்ளூர், ஆகஸ்ட் 14, 2024  : ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம், தனிநபர் பாதுகாப்பின் தலையாய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மில்லியன் கணக்கான மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்புவதில் உறுதிபூண்டுள்ள HMSI, இந்தியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்துகிறது. திருவள்ளூர் நகரில் நடத்தப்பட்ட இந்த சமீபத்திய பிரச்சாரம், தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவாலா குன்னன் செட்டியின் மேல்நிலைப் பள்ளியின்  2,500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்பின் மூலம், ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

சாலைப் பாதுகாப்பு குறித்து இளம் மனங்களுக்குக் கற்பித்தல், எதிர்காலத்தில் சாலை விபத்துக்களில் ஒரு கணிசமான குறைப்பிற்கு வழிவகுக்கும் என்று HMSI நிறுவனம் உறுதியாக நம்புகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மீது கவனம் செலுத்துகின்றதன் மூலம், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பொறுப்பான சாலைப் பயன்பாட்டுப் பழக்கங்களைப் புகுத்துவதை HMSI நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள பலதரப்பட்ட நபர்களை சென்றடைவதற்காக, குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஊடாடும் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்த நிறுவனம் ஒழுங்கமைக்கிறது.

பாதுகாப்பான சாலை நடைமுறைகள் பற்றிய பங்கேற்பாளர்களின் புரிதலை மேம்படுத்துவதற்காக, வடிவமைக்கப்பட்ட ஒரு பல்வேறு ஊடாடும் செயல்பாடுகள் இந்த பிரச்சாரத்தில் இடம்பெற்றன. இந்தச் செயல்பாடுகள், வாய்மொழி பாதுகாப்பு சவாரி அமர்வு, ஆபத்து முன்கணிப்புப் பயிற்சி, சாலைப் பாதுகாப்பு பற்றிய வினாடி 


வினாக்கள், ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாகனம் ஓட்டும் பயிற்சி அமர்வுகள் ஆகியவற்றின் மூலம் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தன.

இந்த முயற்சியை வெற்றியடையச் செய்வதில் தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவாலா குன்னன் செட்டியின் மேல்நிலைப் பள்ளி வழங்கிய ஆதரவை HMSI பாராட்டுகிறது. பாதுகாப்பான சாலைகளை உருவாக்குவது மற்றும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பது ஆகியவற்றிற்கான இந்த பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு முக்கியப்படுத்திக் காட்டுகிறது.

தமிழ்நாடு மாநிலத்தில், HMSI நிறுவனம், பொறுப்பான சாலைப் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான சவாரி பழக்கத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தொடங்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 3  லட்சம் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்ப்பித்தலை வழங்கியுள்ளது 

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சாலைப் பாதுகாப்பிற்கான CSR அர்ப்பணிப்பு:

2021 ஆம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம், ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் சம்பந்தப்பட்ட பூஜ்ஜிய போக்குவரத்து மோதல் இறப்புகளுக்கு அது முயற்சிக்கின்ற 2050 ஆம் ஆண்டிற்கான அதன் உலகளாவிய தொலைநோக்கு அறிக்கையை உலகளவில் அறிவித்தது. இந்தியாவில் HMSI, இந்த தொலைநோக்கு மற்றும் 2030-க்குள் இறப்புகளை பாதியாக குறைக்கும் இந்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கான ஒரு முக்கியமான அம்சம், 2030 ஆம் ஆண்டிற்குள் சாலைப் பாதுகாப்பு குறித்த ஒரு நேர்மறையான மனநிலையை நம் குழந்தைகளிடம் வளர்ப்பதும், அதன்பிறகு அவர்களுக்கு தொடர்ந்து  கற்பிப்பதும் ஆகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாலைப் பாதுகாப்புக் கற்பித்தல் ஆனது விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இளம் உள்ளங்களில் ஒரு பாதுகாப்புக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி அவர்களைப் பாதுகாப்புத் தூதுவர்களாக மாற்றுவதும் ஆகும். இது வருங்கால சந்ததியினரை பொறுப்பானவர்களாக மாற்றவும், ஒரு பாதுகாப்பான சமுதாயத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவும் அதிகாரம் அளிக்கிறது.


HMSI, சமூகம் இருக்க விரும்பும் ஒரு நிறுவனமாக இருக்க விரும்புகிறது மற்றும் பள்ளி குழந்தைகள் முதல் பெரு நிறுவனங்கள் மற்றும் சமூகம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்துவமான யோசனைகளுடன் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் அதிக கவனம் செலுத்துகிறது. 

HMSI இன் திறமையான பாதுகாப்பு பயிற்றுவிப்பாளர்களின் குழு, இந்தியா முழுவதும் உள்ள எங்கள் 10 தத்தெடுக்கப்பட்ட போக்குவரத்து பயிற்சி பூங்காக்கள் (TTP) மற்றும் 6 பாதுகாப்பு ஓட்டுநர் கல்வி மையங்களில் (SDEC) சாலைப் பாதுகாப்புக் கல்வியை சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியினருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக தினசரி நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும் இந்த முயற்சி ஏற்கனவே 75 இலட்சம் இந்தியர்களை எட்டியுள்ளது. 

HMSI நிறுவனத்தின் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் கீழ்க்கண்டவற்றின் மூலம் கற்றலை வேடிக்கையாகவும் அறிவியல் ரீதியாகவும் ஆக்கியது:

விஞ்ஞானரீதியாக வடிவமைக்கப்பட்ட கற்றல் தொகுதி: ஹோண்டாவின் திறமையான பயிற்றுனர்கள், சாலை அடையாளங்கள் மற்றும் குறிகள், சாலையில் ஓட்டுநரின் கடமைகள், சவாரி கியர் மற்றும் தோரணை விளக்கம் மற்றும் பாதுகாப்பான சவாரி அனுசரணைகள் பற்றிய கோட்பாடு அமர்வுகளுடன் அடித்தளத்தை அமைத்துள்ளனர்.

நடைமுறைக் கற்றல்: உண்மையான சவாரிக்கு முன், 100க்கும் மேற்பட்ட சாத்தியமான சாலை அபாயங்களுக்கு அனைவரையும் வெளிப்படுத்த ஹோண்டாவின் மெய்நிகர் ரைடிங் சிமுலேட்டரில் ஒரு சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.


ஊடாடும் அமர்வு: பங்கேற்பாளர்களுக்கு Kiken Yosoku Training (KYT) எனப்படும் ஆபத்து முன்கணிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது, இது ரைடர்/டிரைவரின் ஆபத்துக்கான உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சாலைகளில் பாதுகாப்பான ஓட்டுநர் நடத்தையை உறுதி செய்கிறது.


தற்போதுள்ள ஓட்டுநர்கள் சவாரி செய்யும் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்: ஏற்கனவே ரைடர்களாக இருக்கும் 


மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் மெதுவாக சவாரி செய்யும் நடவடிக்கைகள் மற்றும் குறுகிய பலகைகளில் சவாரி செய்வதன் மூலம் தங்கள் சவாரி திறன்களை சோதித்து மெருகேற்றினர்.