DCB பேங்க், சென்னை அடையாரில் புதிய கிளையைத் திறக்கிறது.
ஒரு முக்கிய நகர்ப்புற நுண்-சந்தையில் அணுகலை மேம்படுத்துகின்ற வகையில் சென்னையில் தனது இருப்பை வலுப்படுத்துகின்றது.
DCB லெஜென்ட்ஸ் அக்கவுண்ட் மற்றும் DCB பிசினஸ் சேவர் அக்கவுண்ட் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட வழங்கல்கள் மூலம் சில்லறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன உறவுகளை ஆழப்படுத்துவதில் கவனம்.
சென்னை, ஏப்ரல் 09, 2026: ஒரு முன்னணி புதிய தலைமுறை தனியார் துறை வங்கியான DCB பேங்க், சென்னை அடையாரில் தனது புதிய கிளையின் தொடக்கத்தை இன்று அறிவித்தது. இந்த மூலோபாய விரிவாக்கம், தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த வங்கிச் சேவைகளை வழங்குகின்ற அதே வேளையில், முக்கிய நகர்ப்புற சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான இந்த வங்கியின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
சென்னையின் முக்கியமான குடியிருப்புப் பகுதியிலும், வளர்ச்சியடைந்து வரும் வணிக மையத்திலும் அமைந்துள்ள இந்த அடையாறு கிளை, சில்லறை மற்றும் வணிக வங்கிச் சேவைகள் மற்றும் திட்டங்களின் ஒரு விரிவான தொகுப்பை வழங்குகிறது. இக்கிளை, நுண் சந்தைப் பிரிவில் உள்ள தனிநபர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ந்து வரும் நிதி ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
இந்த வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இந்த வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட பலன்கள், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் முன்னுரிமை வங்கிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குகின்ற, மூத்த குடிமக்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு வங்கித் திட்டமான DCB லெஜெண்ட்ஸ் அக்கவுண்ட் உள்ளடங்கிய முதன்மையான சேவைகளை வழங்குகிறது. இதில் வீட்டு வாசலிலேயே வழங்கும் சேவைகள், DCB விசா பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு, DCB பேங்க் அட்டைகளைப் பயன்படுத்தி அப்பல்லோ மருத்துவமனைகளில் கிடைக்கும் பிரத்தியேக சுகாதாரப் பலன்களுக்கான அணுகல், மற்றும் பிற முதன்மையான சலுகைகளும் அடங்கும்.
DCB பிசினஸ் சேவர் அக்கவுண்ட். நிறுவனத்தின் மற்றொரு முதன்மையான வங்கித் திட்டமாகும். இது வணிகங்கள் தங்களது முதலீட்டு மூலதனத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவும், போட்டித்தன்மையான கணக்கு இருப்புத் தேவை மற்றும் மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனை வசதிகள் போன்ற கவர்ச்சிகரமான அம்சங்களின் பலன்களை அனுபவிக்கவும் உதவுகிற ஒரு தனிப்பயனாக்கப்பட்ட வங்கிக் கணக்காகும். DCB பிசினஸ் சேவர் அக்கவுண்ட் என்பது ஒரு இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கை கொண்டுள்ள ஒரு நடப்புக் கணக்கு ஆகும். இது, நடப்புக் கணக்கில் உள்ள கூடுதல் நிதியை, அதனுடன் இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கிற்குத் தானாகவே மாற்றிக்கொள்ள உதவுகிறது. முதலீட்டு வருமானத்தை அதிகரிக்கின்ற வகையில், இந்த இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் உள்ள இந்த இருப்புத் தொகை நாள்தோறும் வட்டியை ஈட்டுகிறது. நடப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படாது. இந்தத் திட்டம், வணிகத்திற்கான பணப்புழக்க மேலாண்மையை எளிமையாக்குகிறது.
சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட் , கேப்பிட்டல் கெய்ன்ஸ் அக்கவுண்ட், DCB ஃபிக்சட் டெபாசிட் டேக்ஸ் சேவர் ஃபிக்சட் டெபாசிட், வணிகக் கடன், அடமானக் கடன், வீட்டுக் கடன், தங்க நகை அடமானக் கடன் மற்றும் டிஜிட்டல் வங்கித் தீர்வுகள் போன்ற DCB கடன்கள் ஆகிய திட்டங்களை இந்த புதிய அடையாறு கிளையின் சேவைகளின் வரம்பு உள்ளடக்குகிறது. மேலும், வங்கி NRI வங்கிச் சேவைகள் மற்றும் வர்த்தக நிதித் தீர்வுகளையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் DCB வங்கியின் ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி செலுத்துதலுக்கான தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கிளையினுள் உள்ள ஆதரவுடன் வசதியையும் உறுதிசெய்கிற வெளிநாட்டிற்கு நிதி பரிமாற்றம் செய்யும் ஆன்லைன் சேவையான DCB ரெமிட் ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் சங்கர நேத்ராலயாவின் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கிரிஷ் ஷிவ் ராவ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, DCB பேங்க் இன் சுயாதீன இயக்குநர் திரு. பாலு சீனிவாசன் மற்றும் இந்த பேங்க் இன் செயல் இயக்குநர் திரு. ஸ்ரீதர் சேஷாத்ரி ஆகியோருடன் இணைந்து இந்த புதிய கிளையைத் திறந்து வைத்தனர்.
இந்த சமீபத்திய கிளை திறப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், DCB பேங்க் இன் நிர்வாக இயக்குநர் திரு. ஸ்ரீதர் சேஷாத்ரி கூறுகையில்,"சென்னைப் பகுதியில் DCB பேங்க் இன் வளர்ச்சிக்கு அடையாறு கிளையின் துவக்கமானது ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நிதிச் சேவைகளுக்கான உயர் வாய்ப்பு சந்தையாக சென்னை தொடர்ந்து விளங்குகிறது. வாடிக்கையாளர் மகிழ்ச்சிக்கான இந்த வங்கியின் அர்ப்பணிப்பானது, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக இருப்பதன் மூலமும், சுமூகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி விருப்பங்களை வழங்குவதன் மூலமும் சாத்தியமாக்குகின்ற தனிப்பட்ட அரவணைப்பு மற்றும் கனிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். புதுமையான தயாரிப்புகள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் உறவு சார்ந்த சேவை ஆகியவற்றின் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் அனுபவிப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஆழமான, மிகவும் அர்த்தமுள்ள வாடிக்கையாளர் ஈடுபாட்டை உருவாக்குவதற்கு நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம்.” என்றார்.
தொடர்ந்து விரிவடைந்து வரும் அதன் நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர் முதல் வங்கிச் சேவை என்ற வலுவான கவனத்துடன், DCB பேங்க், இந்தியா முழுவதும் ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தனித்துவமான நிதி தீர்வுகள் மூலம் பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவை செய்து வருகிறது.
.jpeg)