ஜியோஸ்டார் (JioStar) மற்றும் TCCL இணைந்து தமிழகத்தின் 'கேபிள் டிவி' (Linear TV) கட்டமைப்பை வலுப்படுத்த புதிய முன்னெடுப்பு!
14,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் (LCOs) கைகோர்த்து மெகா முயற்சி.
தமிழகத்தின் முன்னணி கேபிள் டிவி சேவை வழங்கல் நிறுவனமான தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் (TCCL) மற்றும் ஜியோஸ்டார் (JioStar) ஆகியவை இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் (LCOs) ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன.
லீனியர் டெலிவிஷன் (நேரடித் தொலைக்காட்சி) கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தொலைக்காட்சி நுகர்வின் முதுகெலும்பாகத் திகழும் LCO-க்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த ஒருங்கிணைந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
"லீனியர் டெலிவிஷன் இன்றும் குடும்பங்களுக்குத் தரமான மற்றும் முழுமையான பொழுதுபோக்கை வழங்குகிறது" என்ற செய்தியை இந்தத் திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
• 15-க்கும் மேற்பட்ட நகரங்கள்: சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, இளையான்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உட்பட தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
• நேரடி கலந்துரையாடல்: கேபிள் ஆப்பரேட்டர்களுடன் நேரடித் தொடர்பு, அறிவுப் பகிர்வு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
• கிரிக்கெட் சீசன் தயார்நிலை: நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சீசனை முன்னிட்டு, இல்லங்கள் தோறும் தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஆப்பரேட்டர்களைத் தயார்படுத்தும் பணிகளும் இதில் அடங்கும்.
TCCL தலைவர் சகிலன் அவர்கள் கூறுகையில்:
ஜியோஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களை ஒன்றிணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஜியோஸ்டார் அறிமுகப்படுத்தியுள்ள தொலைநோக்குத் திட்டங்கள், தொலைக்காட்சி, பிராட்பேண்ட் மற்றும் IPTV ஆகிய துறைகளில் ஆப்பரேட்டர்களின் சேவையை விரிவுபடுத்த உதவும்.
மாறிவரும் ஊடகச் சூழலில், கேபிள் ஆப்பரேட்டர்கள் நிலையான வளர்ச்சியைப் பெற இத்தகைய கூட்டு முயற்சிகள் மிகவும் அவசியமானவை.
