நிர்வகிக்க உணவுமுறை உதவும் என்பதை 82% சென்னை பெண்கள் அறியாமல் இருக்கிறார்கள்
சென்னை, மார்ச் 4, 2026: சர்வதேச மகளிர் தினம் மற்றும் உலக உடல் பருமன் தினத்தை இந்தியா கொண்டாடும் வேளையில், மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும், அவை எடை அதிகரிப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்கிற பெண்களின் ஆரோக்கியத்தில் மிகவும் ஒரு முக்கியமான ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அம்சம் கவனத்தை ஈர்க்கிறது.
சென்னையில் 40-60 வயதுடைய பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களில் 82% பேர் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும் அறிகுறிகளை அனுபவித்த போதிலும், மாதவிடாய் நிறுத்த மாற்றங்களைச் சமாளிக்க உணவுமுறை மாற்றங்கள் உதவும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நடுத்தர வயது சுகாதார சவால்
சென்னைப் பெண்களின் மாதவிடாய் நிறுத்த அனுபவங்களை ஆய்வு செய்த இந்த ஆராய்ச்சி, பெண்கள் சராசரியாக 45 வயதில் மாதவிடாய் நிறுத்தத்தை அடைவதாக கண்டறிந்துள்ளது. இது தேசிய சராசரியை விடவும், பல மேற்கத்திய நாடுகளின் போக்குகளை விடவும் குறைவான வயதாகும்.
இந்த மாற்றங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்த மாற்றத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய அல்லது தொடர்புபடுத்தாத அறிகுறிகளை முன்னிறுத்துகின்றன. கணக்கெடுக்கப்பட்ட பெண்களிடையே எளிதில் அடையாளம் காணப்பட்ட மற்றும் அடிக்கடி தெரிவிக்கப்படும் அறிகுறிகளில் எரிச்சல் (58%), தூக்கக் கலக்கம் (47.8%), பதட்டம் (45%) மற்றும் மனச்சோர்வு (49%) ஆகியவை அடங்கும்.
குறைவான கவனத்தைப் பெறுவது பல பெண்கள் அனுபவிக்கும் அதனுடன் கூடிய எடை அதிகரிப்பு ஆகும்.
உலகளவில், மாதவிடாய் நிறுத்த மாற்றத்தை அனுபவிக்கும் பெண்களில் ஏறத்தாழ 39% பேர் அதிக எடை அல்லது உடல் பருமனானவர்களாக உள்ளனர். மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்படும் எடை அதிகரிப்பை நேரடியாகக் கண்காணிக்கும் நீண்டகால இந்தியத் தரவுகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், கிடைக்கக்கூடிய ஆய்வுகள் தொடர்புடைய போக்குகளைக் காட்டுகின்றன. நான்கு முக்கிய இந்திய நகரங்களில் பெண்களிடையே உடல் பருமன் குறித்து நடத்தப்பட்ட வேறொரு ஆய்வு, அதிக உடல் பருமன் விகிதம் சென்னையில், குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே காணப்பட்டதைக் கண்டறிந்துள்ளது.
நடுத்தர வயதில் எடை மேலாண்மைக்கு கவனமான முயற்சி தேவை. "மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய இயற்கையான இடைநிலை கட்டம் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்தின் போது, குறையும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள், கொழுப்பைச் சேமிப்பது, பசி, ஆற்றல் செலவழிப்பு மற்றும் தூக்கம் ஆகியவற்றை உடல் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை மாற்றுகிறது" என்று, 17,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களைக் கொண்ட பொது சுகாதார ஆதரவாளர், இலாப நோக்கற்ற அமைப்பான பிசிஷியன்ஸ் கமிட்டி ஃபார் ரெஸ்பான்சிபிள் மெடிசின் உள் மருத்துவ மருத்துவர் டாக்டர் வணிதா ரஹ்மான், MD, DipABLM கூறுகிறார்.
"கொழுப்பு விநியோகம் அடிவயிற்றை நோக்கி மாறுகிறது, ஓய்வு நேர வளர்சிதை மாற்ற விகிதம் குறைகிறது, மேலும் வயது தொடர்பான தசை இழப்பு கலோரி எரிப்பை மேலும் குறைக்கிறது" என்று அவர் மேலும் கூறுகிறார். "இந்த மாற்றங்கள் உடலியல் ரீதியானவை மற்றும் ஆரோக்கியமான முதுமை மற்றும் நீண்டகால நல்வாழ்விற்கும் உணர்வுபூர்வமாக கவனிக்கப்பட வேண்டும். ஒரு கடினமான சுழற்சியை உருவாக்குகின்ற வகையில், உளவியல் மன அழுத்தம் மற்றும் சோர்வு பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான உணவு முறைகளுக்கும் குறைந்த உடல் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும். இது மன உறுதியைப் பற்றியது அல்ல, இது உயிரியல் மாற்றங்களைப் புரிந்துகொண்டு பொருத்தமான உத்திகளுடன் பதிலளிப்பதைப் பற்றியது ஆகும்."
தாவர அடிப்படையிலான உணவுமுறைகள் மாதவிடாய் நிறுத்த மாற்றத்திற்கு உதவக்கூடும்
இந்த மாற்றங்களை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய கருவியாக ஊட்டச்சத்து இருப்பதை, ஆராய்ச்சி பெருகிய முறையில் சுட்டிக்காட்டுகிறது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் சோயா உணவுகள் நிறைந்த ஒரு முழு உணவு தாவர அடிப்படையிலான உணவுமுறை, அறிகுறிகளை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்தும்.
“ஒரு குறைந்த கொழுப்பு, முழு உணவு தாவர அடிப்படையிலான உணவுமுறை உடன் தினமும் அரை கப் சோயாபீன்ஸ் சேர்த்து உட்கொள்வது, திடீரென்று ஏற்படும் காய்ச்சல் போன்ற உணர்வை 84% வரை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த உணவுமுறையின் இயற்கையான அதிக நார்ச்சத்து, வளர்சிதை மாற்றத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, எடை மேலாண்மையை ஆதரித்து இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்."என்று டாக்டர் ரஹ்மான் கூறுகிறார்.
உலகளவில் மாதவிடாய் நிறுத்தத்தில் நுழையும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது சுகாதார வல்லுநர்கள் ஆரம்ப விழிப்புணர்வு மற்றும் நடைமுறை வாழ்க்கைமுறை உத்தி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். நடுவயதில் ஏற்படும் எடை அதிகரிப்பானது, வாழ்க்கைமுறை தேர்வுகளால் மட்டுமல்ல, உயிரியல் மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, பெண்கள் முன்னதாகவே ஆதரவான பழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், நீண்டகால சுகாதார விளைவுகளைப் பாதுகாக்கவும் உதவும்.
82% பெண்களுக்கு உணவு உத்திகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்ற இந்த சென்னை ஆய்வின் கண்டுபிடிப்பானது, பெண்கள் இந்த முக்கியமான வாழ்க்கை கட்டத்தில் பயணிப்பதால், சிறந்த சுகாதாரக் கல்வி மற்றும் ஆதரவு அமைப்புகளுக்கான ஒரு அவசரத் தேவையைக் குறிக்கிறது.
.jpeg)
