சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் (IGCSE) உறைவிடப் பள்ளி (Residential School):
'சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே' தொடக்கம்
~ மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கு சிறப்பான இடவசதி, பாதுகாப்பு மற்றும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உறைவிடப் பள்ளி (Residential School) வளாகம் ~
சென்னை, டிசம்பர் 10, 2025: சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே பள்ளி (Sagehill Creative Pathway School), சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் (IGCSE) உறைவிடப் பள்ளி (Residential School) வளாகமாக தொடங்கப்பட்டிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. நீலகேசவ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் டிரஸ்ட் (Neelakesav Education and Research Trust) மூலம் நிறுவப்பட்டிருக்கும் இப்பள்ளி, குறிக்கோளுடன்கூடிய கற்றல் மற்றும் கட்டமைக்கப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னுரிமையுடன் கல்வி வாய்ப்பை வழங்குகிறது. தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் சுதந்திரமான கற்றலைப் பெறும் நபர்களாக மாணவர்களை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் இதன் இடவசதி, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெளிவான கற்றல் நோக்கத்தை மையமாகக் கொண்டு, மாணவர்களின் கூர்நோக்கம் மற்றும் ஆராய்ந்து அறிவதற்கான தேடலை ஆதரிக்கும் வகையிலான நவீன வகுப்பறைகள் (Studios) மற்றும் இடவசதிகளை இக்கல்வி வளாகம் கொண்டுள்ளது. இப்பள்ளியில் பின்பற்றப்படவிருக்கும் கல்வி அணுகுமுறையானது, கருத்துத் தெளிவு, தகவல் தொடர்பு மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய திறன் வளர்ச்சியை வலுப்படுத்த, கேம்பிரிட்ஜ் IGCSE கல்வி முறையை 'இன்டர்நேஷனல் கிரியேட்டிவ் பாத்வே' திட்டத்துடன் (International Creative Pathway Program) ஒருங்கிணைக்கிறது. இங்குள்ள உறைவிட விடுதிகள் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை கனிவான அக்கறையுடன் பின்பற்றி மாணவர்களின் நலனை பேணுவதோடு, அவர்களின் உடல்தகுதியை உறுதிசெய்ய சமச்சீரான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்குகின்றன. இது முறையான ஆதரவுடன் கூடிய சுயாதீன சிந்தனையையும், கனிவான பராமரிப்புடன் தைரியத்தையும், நம்பிக்கை உணர்வையும் மாணவர்களிடம் வளர்க்கிறது.
இப்பள்ளியின் தொடக்கம் குறித்து சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே பள்ளியின் இயக்குனர் திரு. சந்தீப் வாசு கூறியதாவது: "நவீன கால குழந்தைப் பருவத்திற்கும் மற்றும் தற்காலத்தில் பெற்றோர்களது குழந்தை வளர்ப்பின் எதார்த்த சூழலுக்கு ஏற்றவாறும் கல்வியை வழங்கும் நோக்கத்தோடு சேஜ்ஹில் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களின் உறைவிடப் பள்ளி மாதிரி, கற்றலில் நேர்த்தியான கட்டமைப்பையும், தெளிவையும் மற்றும் தொடர் செயல்பாட்டையும் கொண்டு வருகிறது; மேலும், அர்த்தமுள்ள வகையில் குடும்பங்கள் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய ஒரு சீரான வழிமுறையையும் இந்த அணுகுமுறை வழங்குகிறது. அமைதியான சிந்தனை, நிலையான வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ பண்பைப் பெற்று பிறருக்கு வழிகாட்டும் திறனை ஊக்குவிக்கும் சூழலை மாணவர்களிடம் உருவாக்குவதே எமது முக்கிய குறிக்கோளாகும்."
சேஜ்ஹில்லின் ஈடுபாட்டு மாதிரி (Engagement model), கற்றல் செயல்முறையில் குடும்பங்களுக்குத் தெளிவான, விளைவு அடிப்படையிலான கண்ணோட்டத்தை வழங்குகிறது. தொடர்புக்கான ஒவ்வொரு செயல்பாடும், அணுகுமுறையும் சிறந்த நோக்கமுள்ளதாகவும், மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும் இங்கு இருக்கும். பள்ளிக்கும், மாணவர்களின் குடும்பத்திற்கும் (வீட்டிற்கும்) இடையே ஒரு தொடர்ச்சியான இணைப்பு நிலையை உருவாக்குவதன் மூலம் மாணவர்களின் வளர்ச்சி நிலையாகவும், கல்வி நோக்கத்தோடு இணக்கமானதாகவும் இருப்பதை இந்த கட்டமைப்பு உறுதி செய்கிறது.
சென்னையின் புறநகர் பகுதியில், உறைவிடத் தொகுதிகள், கற்றல் ஸ்டூடியோக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் செயல்பாட்டுப் பகுதிகள் மற்றும் அழகான திறந்தவெளி அமைவிடங்கள், இயற்கை அழகுள்ள சூழல் ஆகிய சிறப்பம்சங்களுடன் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்ட ஒரே விசாலமான வளாகத்தில் சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே பள்ளி அமைந்துள்ளது. வரும் கல்வியாண்டில் இப்பள்ளி தனது கல்வி செயல்பாட்டை தொடங்கவிருக்கிறது.
