Saturday, December 20, 2025

2030-ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் இந்திய இளைஞர்களுக்கு AI சைபர்பாதுகாப்பு மற்றும் குவாண்டம் துறைகளில் திறன் பயிற்சி அளிக்க IBM உறுதியளிக்கிறது

2030-ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் இந்திய இளைஞர்களுக்கு AI சைபர்பாதுகாப்பு மற்றும் குவாண்டம் துறைகளில் திறன் பயிற்சி அளிக்க IBM உறுதியளிக்கிறது

புதுடெல்லி, இந்தியா — டிசம்பர் 19, 2025: IBM (NYSE: IBM) நிறுவனம், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5 மில்லியன் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI), சைபர்பாதுகாப்பு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் திறன் பயிற்சி அளிக்க இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. IBM SkillsBuild மூலம் வழங்கப்படும் இந்த முயற்சியானது, ஒரு சமமான, எதிர்காலத்திற்கு தேவையான பணியாளர் குழுவை உருவாக்குவதற்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் திறன்கள், வேலைவாய்ப்பிற்கான அணுகல் மற்றும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் IBM இன் நோக்கத்தை முன்னெடுத்து செல்கிறது.. 


இந்த முன்முயற்சியின் மூலம், IBM பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு சூழல் அமைப்புகள் முழுவதும் AI மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வியை விரிவுபடுத்தும். மேலும், All India Council for Technical Education (AICTE) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, செய்முறை கிமி கற்றல் வழிமுறைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பாடத்திட்ட ஒருங்கிணைப்பு, ஹேக்கத்தான்கள் மற்றும் உள்ளகப் பயிற்சிகளை முன்னெடுக்கும். 


“AI மற்றும் குவாண்டம் துறைகளில் உலகை வழிநடத்தும் திறமையும் லட்சியமும் இந்தியாவிடம் உள்ளது. அதிநவீனதொழில்நுட்பங்களில் உள்ள புலமை, பொருளாதார போட்டித்தன்மை, அறிவியல் முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றத்தை வரையறுக்கும்,” என்று IBM-இன் சேர்மன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  அர்விந்த் கிருஷ்ணா கூறினார். “ஐந்து மில்லியன் பேருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும். மேம்பட்ட திறன்களுக்கான அணுகலை அனைவருக்கும் வழங்குவதன் மூலம், இந்தியாவின் வளர்ச்சியை உருவாக்கவும், புதுமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் நாங்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாங்கள் வழி உருவாக்கி கொடுக்கிறோம்” என்றார்.


IBM சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களுக்கான AI பாடத்திட்டத்தை, AI Project Cookbook, Teacher Handbook மற்றும் விளக்க பாடத்திட்டங்கள் உள்ளிட்ட கற்பித்தல் பொருட்களை வழங்குவதன் மூலம், பள்ளி அளவிலான தயார்நிலையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள், கணக்கீட்டு சிந்தனை மற்றும் பொறுப்பான கிமி கொள்கைகளை ஆரம்பத்திலேயே புகுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஆசிரியர்கள் AI கல்வியை நம்பிக்கையுடனும் பரந்த அளவிலும் வழங்கவும் இது உதவுகிறது.


இந்த முன்முயற்சியின் மையத்தில், உலகின் மிகவும் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பக் கற்றல் சூழல் அமைப்புகளில் ஒன்றான IBM SkillsBuild உள்ளது. இந்த திட்டம், கற்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக AI சைபர்பாதுகாப்பு, குவாண்டம், கிளவுட், தரவு, நிலைத்தன்மை மற்றும் பணியிட தயார்நிலை ஆகியவற்றில் 1,000-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் 16 மில்லியனுக்கும் அதிகமான கற்பவர்களுடன், SkillsBuild மற்றும் பிற திட்டங்கள், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 30 மில்லியன் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் IBM-இன் நோக்கத்திற்கு மையமாக உள்ளன. இந்த லட்சியத்தை விரைவுபடுத்துவதில் இந்தியா மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது..

About IBM

IBM is a leading provider of global hybrid cloud and AI, and consulting expertise. We help clients in more than 175 countries capitalize on insights from their data, streamline business processes, reduce costs and gain the competitive edge in their industries. Thousands of government and corporate entities in critical infrastructure areas such as financial services, telecommunications and healthcare rely on IBM's technology to affect their digital transformations quickly, efficiently and securely. IBM's breakthrough innovations in AI, quantum computing, industry-specific cloud solutions and consulting deliver open and flexible options to our clients. All of this is backed by IBM's long-standing commitment to trust, transparency, responsibility, inclusivity and service.  For more information, visit www.ibm.com