ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது
சென்னை, 04, டிசம்பர் 2025: இந்தியாவின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா PMFBY) கீழ், வரவிருக்கும் பயிர் காப்பீட்டு வாரத்தில் தீவிரமாக பங்கேற்க இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்துள்ளது. இந்த ஒரு வார கால கொண்டாட்டம், பயிர் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்த விவசாயிகளின் புரிதலை ஆழப்படுத்தவும், அவர்களின் விவசாய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க PMFBY திட்டத்தை சிறப்பாக பயன்படுத்த உதவுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்டம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் முழுவதிலும் பல்வேறு செயல்பாடுகளை இந்த நிறுவனம் நடத்தும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அம்சங்கள், காப்பீட்டு விவரங்கள், பதிவு விதிமுறைகள் மற்றும் இழப்பீடு கோரிக்கை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்த விவசாயிகளின் விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவர்களுக்கு கற்பிக்கவும் ஒரு விரிவான செயல்பாடுகளின் பட்டியல் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயிர் காப்பீட்டு வகுப்புகள் (பசல் பீம பாத்ஷாலா), விவசாயி கருத்தரங்குகள், கிசான் மேளாக்கள் மற்றும் பெண் விவசாயிகளை இலக்காகக் கொண்ட அவர்களை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விரிவான களத் திட்ட நடவடிக்கைகள் அடங்கும்.
விவசாயிகளிடையே விழிப்புணர்வை மேலும் ஊக்குவிக்க, எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வீடு வீடாக பிரச்சாரம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி நிகழ்ச்சிகள், இருசக்கர வாகன அணி வகுப்புகள், படகு பிரச்சாரம், தெரு நாடகங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் உள்ளூர் மயமாக்கப்பட்ட ஈடுபாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவில் இந்த பிரச்சாரத்தை வலுப்படுத்த, கையேடுகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பரவலான விளம்பர பலகைகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மூலமாக பரவலான வெளிப்புற விளம்பரங்களும் மேற்கொள்ளப்படும். இந்த தள நடவடிக்கைகளுக்கு துணையாக, பிராந்திய மொழிகளில் ஒரு வலுவான டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக பிரச்சாரம் இந்த முயற்சியின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
இந்த முன்முயற்சியைப் பற்றி பேசும்போது, எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, திரு நவீன் சந்திர ஜா, கூறுகையில், "எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் இல், நமது இலக்கு எப்போதும் இந்தியாவின் விவசாய சமுதாயத்தின் மீள்திறனையும் முன்னேற்றத்தையும் பலப்படுத்துவதாகும். விவசாயிகள் நமது நாட்டின் பொருளாதார அடித்தளமாக இருக்கிறார்கள் மேலும் அவர்களை ஆதரிப்பது நாங்கள் ஆழமாக மதிக்கும் ஒரு சிறப்பு வாய்ப்பாகும்.
பயிர் காப்பீட்டு வாரம், விவசாயிகளுடன் நெருக்கமாக இணைந்து ஈடுபடுவதற்கும், திட்டத்தைப் பற்றி அவர்களின் புரிந்துகொள்ளுதலை எளிதாக்குவதற்கும், அவர்களுக்கு கிடைக்கிற பாதுகாப்பு குறித்து நன்கு அறிந்தவர்களாய் இருப்பதை உறுதி செய்வதற்குமான ஒரு அர்த்தமுள்ள தளத்தை நமக்கு வழங்குகிறது. அரசாங்க அமைப்புகள் மற்றும் நிறுவன கூட்டாளர்களுடன் கூட்டாக பணியாற்றுவதன் மூலம், பதிவு செயல்முறை சீராக இருப்பதையும், களச் செயலாக்கம் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ளதாக இருப்பதையும் உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நம்பிக்கையை உருவாக்குவதற்கும், நிதி பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும், இந்திய கிராமப்புறங்கள் முழுவதிலும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான எங்களின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் தேசிய அளவிலான முன்முயற்சிகளில் நாங்கள் ஆண்டுதோறும் பங்கேற்கிறோம்.” என்று கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் மூலம், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், PMFBY-யின் ஏற்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு ராபி 2025–26 பருவத்தின் விவசாயிகளைச் சென்றடைவதில் கவனம் செலுத்தும். விவசாயிகளை மேம்படுத்துதல், விவசாய மீள்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் மற்றும் மீள்தன்மை கொண்ட விவசாயத் துறை என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சிகள் மறுஉறுதிப்படுத்துகின்றன.
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் பற்றி
எஸ்பிஐயின் வலுவான ஆதரவால் ஆதரிக்கப்படும், வேகமாக வளர்ந்து வரும் தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ஒரு பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறது. ஒரு ஆற்றல் மிக்க சூழலின் மத்தியில் இந்தியாவின் மிகவும் நம்பகமான பொது காப்பீட்டாளராக நாங்கள் எங்களை நிலைநிறுத்திக் கொள்கிறோம். 2009 இல் நாங்கள் நிறுவப்பட்டதிலிருந்து, 2011 இல் 17 கிளைகளிலிருந்து 146 கிளைகளுடன் ஒரு நாடு தழுவிய இருப்பாக வளர்ந்து வருகின்ற எங்கள் விரிவாக்கம் கணிசமாக இருந்து வந்துள்ளது. 2024-25 நிதியாண்டில், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், ஆண்டுக்கு ஆண்டு 11.1% வளர்ச்சியைப் பதிவு செய்கின்ற வகையில் ரூபாய் 14,140 கோடியின் ஒரு மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தை (GWP) பதிவு செய்துள்ளது.
பல்வேறு களங்களில் அதன் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிறுவனம் ஏராளமான மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்றது. Insurance Asia Awards 2025 சிங்கப்பூர் இல், ஆண்டின் உள்நாட்டு பொது காப்பீட்டாளர் – இந்தியா மற்றும் ஆண்டின் உரிமைகோரல் முன்முயற்சி – இந்தியா என பெயரிடப்பட்டது, Mint BFSI Summit & அவார்ட்ஸ் இல் பெரிய பொது காப்பீட்டு பிரிவு, சிறந்த உரிமைகோரல் தீர்வுக்கான 3rd InsureNext Awards 2024 மற்றும் 7th Insurance Conclave Awards இல் இந்தியாவின் சிறந்த பொது காப்பீட்டாளர் ஆகிய விருதுகள் முக்கிய கௌரவங்களில் அடங்கும். India Insurance Summit & Awards 2024 இல், ஆண்டின் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் காப்பீட்டில் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளவர் என்ற பட்டங்களை இந்த நிறுவனம் பெற்றது. கூடுதலாக, ET NOW Best BFSI Brands Conclave 2024 இல் சிறந்த BFSI பிராண்டாக கௌரவிக்கப்பட்டது மற்றும் BW BusinessWorld இல் இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 2024 இல் வேலை செய்ய சிறந்த இடமாக சான்றளிக்கப்பட்ட இந்த நிறுவனம், காப்பீட்டில் சிறந்த உரிமைகோரல் மேலாண்மை மற்றும் ஆண்டின் சிறந்த CSR பிரச்சாரத்திற்கான அங்கீகாரத்துடன் ETBFSI Exceller Awards 2024 இல் சிறந்து விளங்கியது, இது சமூகப் பொறுப்பு மற்றும் புதுமைக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
9,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு குழு மற்றும் வங்கி காப்பீட்டு நிறுவனம், முகவாண்மை, OEM, தரகு, சில்லறை நேரடி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்புகளை உள்ளடக்கிய எங்கள் பல-விநியோக மாதிரியுடன், எங்கள் அனைத்து நுகர்வோருக்கும் சுரக்ஷா மற்றும் பரோசா இரண்டையும் வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 22000 க்கும் மேற்பட்ட SBI கிளைகள், முகவர்கள், நிதி கூட்டணிகள், OEMகள் மற்றும் டிஜிட்டல் கூட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு பரந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, இந்தியாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்கும் கூட எங்கள் சேவைகளை விரிவுபடுத்துகிறோம். எங்கள் வழங்கல்கள் சில்லறை விற்பனை, கார்ப்பரேட், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற பிரிவுகளுக்கு சேவை செய்கின்றன, மேலும் எங்கள் மாறுபட்ட தயாரிப்பு போர்ட்ஃபோலியோ டிஜிட்டல் மற்றும் நேரடி சேனல்கள் மூலம் அணுகலை உறுதி செய்கிறது.