‘செக்-ஓலேட்’ (Check-Olate): சாக்லேட்டை சுகாதார நினைவூட்டியாக மாற்றிய அப்போலோ குழுமம்!
சென்னை அப்போலோ புற்றுநோய் மையம் மற்றும் அப்போலோ புரோட்டான்
புற்றுநோய் மையத்தின் இந்த முயற்சி உங்கள் உயிரைக் காக்க உதவும் ஓர் இனிமையான இடைநிறுத்தம்.
"இது வெறும் சாக்லேட் மட்டுமல்ல;
ஒவ்வொரு பெண்ணையும்
தனக்காக ஒரு கணம் ஒதுக்கிக்கொள்ளத் தூண்டும் ஓர் அக்கறையான நினைவூட்டல்."
Photo Caption: From Left to Right: Mr. Karan Puri, Chief Executive Officer, Apollo Proton Cancer Centre & Apollo Cancer Centre, Chennai, along with Dr. Rathna Devi, Senior Consultant – Radiation Oncology, Dr. Madhupriya R G S, Senior Consultant – Surgical Oncology, Dr. Manjula Rao, Consultant – Breast Oncoplastic Surgery, Dr. Asha Reddy, Consultant – Breast Surgery, and Ms. Devaki Vijayaraman, Winner of MasterChef India – Tamil (Season 1), jointly launched the “Check-O-Late” campaign today to mark Breast Cancer Awareness Month.
சென்னை: 31 அக்டோபர்
2025: மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் நிலையில், சென்னை,
அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து
ஒரு தனித்துவமான திட்டத்தை தொடங்கியுள்ளன. பலரும் விரும்பும் இனிய சுவையோடு விழிப்புணர்வை
கலந்து வழங்கும் ‘செக்-ஓலேட்’ (Check-Olate) என்பது, ஒரு சுவையான ட்ரீட் மட்டுமல்ல; அதைவிட இன்னும் இனிமையான
செய்தியான “உங்களுக்கென ஒரு கண நேரத்தை ஒதுக்குங்கள்”
(take a moment for yourself) என்ற நினைவூட்டலை எடுத்துச்
செல்லும் வழிமுறையாக இருக்கிறது.
GLOBOCAN
அமைப்பின் தரவின்படி, இந்திய பெண்கள் மத்தியில் புற்றுநோய்கள் மற்றும் உயிரிழப்பிற்கான
முன்னணி காரணமாக மார்பக புற்றுநோய் தொடர்ந்து நீடிக்கிறது. புதிதாக ஏற்படும் புற்றுநோய்களில் 13.5% மற்றும்
புற்றுநோயால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 10.6% என்ற பங்கையும் மார்பக புற்றுநோய்
கொண்டிருக்கிறது. இந்த பெரும்சுமை தொடர்ந்து
அதிகரித்துக் கொண்டே போகிறது என்றபோதிலும் கூட, மார்பக புற்றுநோய்க்கான அடிப்படை சோதனைகள்
செய்துகொள்ளும் விகிதம் வருத்தப்படும் வகையில் மிகக் குறைவாகவே இருக்கிறது. 30-69 ஆண்டுகள் வயதுக்கு இடைப்பட்ட பெண்களில்,
1.6% நபர்கள் மட்டுமே மார்பக புற்றுநோய்க்கான அடிப்படை சோதனையை எப்போதாவது செய்திருக்கின்றனர்
(NCBI). அதிகளவிலான விழிப்புணர்வு மற்றும் தன்முனைப்புடன்
கூடிய முன்தடுப்பு நடவடிக்கைகளுக்கான அவசரத்தேவை இருப்பதை நன்கு உணர்ந்திருக்கும் சென்னை,
அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஆகியவை ஒருங்கிணைந்து, இந்த புதிய முயற்சியான செக்-ஓலேட்
என்பதை தொடங்கியுள்ளன. சுய பராமரிப்பை இயல்பான செயல்பாடாக மாற்றுவதும் மற்றும் தங்கள்
மார்பகத்தின் மீது சுயபரிசோதனை செய்து கொள்வதை ஒரு மாதாந்திர வழக்கமாக மாற்றிக் கொள்வதற்கு
அவர்களுக்கு உதவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் காரணமாக, பெண்கள் அவர்களது ஆரோக்கியத்தின்
மீது ஆரம்ப நிலையிலேயே அக்கறையும், பொறுப்பும் கொண்டிருக்குமாறு செய்வது அப்போலோ –
ன் நோக்கமாகும்.
மார்பக புற்றுநோய் மீதான
விழிப்புணர்வையும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதையும் ஊக்குவிப்பதை இலக்காக
கொண்ட ஒரு முயற்சியான ‘செக்-ஓலேட்’ பரப்புரை திட்டம் மீது நிபுணர்கள் பங்கேற்ற ஒரு
விவாத அமர்வை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தின. கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை
நிபுணர் டாக்டர். ரத்னா தேவி நெறிப்படுத்தி வழங்கிய இந்த அமர்வில், அறுவைசிகிச்சை
புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். R G S மதுப்பிரியா, மார்பக ஆன்கோபிளாஸ்டிக்
அறுவைசிகிச்சையின் சிறப்பு நிபுணர் டாக்டர். மஞ்சுளா ராவ், மார்பக அறுவைசிகிச்சை நிபுணர்
டாக்டர். ஆஷாரெட்டி ஆகியோருடன் மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ் (சீசன் 1) – ன் வெற்றியாளர்
மிஸ் தேவகி விஜயராமன் ஆகியோர்பங்கேற்று சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபட்டனர். பெண்களின்
நலம் மற்றும் அவர்கள் விழிப்புணர்வோடு திறனதிகாரம் பெறுவது மீதான தங்களது சிறப்பான
கண்ணோட்டங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த
நிகழ்வின் ஒரு பகுதியாக, மார்பக புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க 1.5 அடி
உயரமுள்ள டார்க் சாக்லேட் சுவரை அழகாக உருவாக்கியிருந்த மிஸ். தேவகி அதை இதில் காட்சிப்படுத்தினார்.
சென்னை - அப்போலோ கேன்சர்
சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் - ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி பேசுகையில்,
“பெண்கள் நலமோடு முன்னேற்றம் காண்கிறபோது நாடுகளும் செழுமை பெறுகின்றன. ஒரு பெண்ணின் நலவாழ்வானது, குடும்பங்களையும், சமூகங்களையும்
மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையுமே வலுப்படுத்துகிறது. சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ
புரோட்டான் கேன்சர் சென்டர் ஆகிய இரு சிகிச்சை
மையங்களிலும் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது, உரிய நேரத்திற்குள்
சிகிச்சை தொடங்குவதை ஏதுவாக்குவது மற்றும் தன்முனைப்புள்ள பராமரிப்பை இயல்பான விஷயமாக
கொண்ட ஒரு கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
‘செக்-ஓலேட்’ திட்டம் என்பது, இந்த பயணத்தில் மற்றுமொரு அர்த்தமுள்ள முன்னேற்ற நடவடிக்கையாகும்;
சுய பராமரிப்பு என்பது, சிறப்புரிமை அல்ல.
மாறாக, ஆரோக்கியமான, வலுவான மற்றும் அதிக வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான
ஒரு ஆற்றல் மையம் என்பதை இத்திட்டம் அழுத்தம் திருத்தமாக நினைவூட்டுகிறது.” என்று கூறினார்.
மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ்,
சீசன் 1 – ன் வெற்றியாளர் மிஸ் தேவகி விஜயராமன் பேசுகையில், “எல்லோருக்கும்
சாக்லேட் மிகவும் பிடிக்கும். நமக்கெல்லாம்
மகிழ்ச்சியையும், ஒரு இனிய தருணங்களையும் சாக்லேட் வழங்குவதை யாரும் மறுக்க இயலாது. சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ
புரோட்டான் கேன்சர் சென்டர் ஆகியவை இணைந்து
தொடங்கியிருக்கும் செக்-ஓலேட் ஒரு மிகச்சிறப்பான நடவடிக்கையாகும்; ஏனெனில், ஒரு எளிமையான மகிழ்ச்சியை இதயத்தை வலுவாகத்
தொடும் ஒரு நினைவூட்டியாக இது மாற்றுகிறது.
பெண்கள் தங்களது உடல்நலத்திற்கு பொறுப்பேற்று, தங்களையே சுயமாக பராமரித்துக்
கொள்வதன் அவசியத்தை இது தனித்துவமான முறையில் அவர்களுக்கு உணர்த்துகிறது.” என்று கூறினார்.
ஒவ்வொரு டார்க் சாக்லேட்
பாரிலும் (செக் – ஓலேட்) ஒரு QR குறியீடு இடம் பெற்றிருக்கிறது. இதை ஸ்கேன் செய்யும்போது மார்பக சுய பரிசோதனை செய்வது
மீதான பல்வேறு படிநிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக செயல்முறை விளக்கத்தின் மூலம் காட்டும்
ஒரு அனிமேஷன் வீடியோ தோன்றுகிறது.
செக் – ஓலேட் ' டார்க் சாக்லேட்டின் நிரூபிக்கப்பட்ட உடல்நல ஆதாயங்களை கருத்தில் கொண்டு,
விவேகமான சிந்தனையுடன் அதனைப்
பயன்படுத்துகிறது. NCBI
- ன் கூற்றுப்படி,
டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும்
ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கவும்,
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,
மனநிலையை உற்சாகப்படுத்தவும் உதவுகின்றன. மேலும்,
தோல், இருதயம், மற்றும்
வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் இது சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள்
சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இது புலன்களுக்கு ஓர் இனிய விருந்தாக மட்டுமின்றி,
'ஆரோக்கிய அக்கறையும் ஆறுதல் அளிக்கக்கூடியதே'
என்ற அர்த்தமுள்ள நினைவூட்டலாகவும் அமைகிறது.
'செக்-ஓலேட்'என்பது
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான ஒரு முன்னெடுப்பு மட்டுமல்ல; மாறாக, எளிய, அர்த்தமுள்ள
பழக்கவழக்கங்கள் மூலம் தங்கள் நல்வாழ்வை பெண்கள் மீண்டும் தங்கள் வசம் எடுத்துக்கொள்ள உதவும் ஒரு இயக்கமாகவும் இருக்கிறது.
ஓர் இனிமையான தருணத்தை, சுய-பராமரிப்புக்கான ஓர் அன்பான
தூண்டுதலாக மாற்றுவதன் மூலம், சுகாதாரத் தகவல்கள் எவ்வாறு
பரிவு, படைப்பாற்றல் மற்றும் சிறந்த
நோக்கத்துடன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புதிய வரையறையை வழங்குகிறது.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/
புற்றுநோய்
சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை
வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி
முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது.
இதற்கு
புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும்
மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான
புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும்
அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன.
திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல்
நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள்
வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற
ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு
உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.
