Thursday, November 20, 2025

மொத்தமாக காலியாகும் கிரிப்டோ கரன்சி சந்தை.. பிட்காயின் விலை வீழ்ச்சி.. என்ன காரணம் தெரியுமா?

மொத்தமாக காலியாகும் கிரிப்டோ கரன்சி சந்தை.. பிட்காயின் விலை வீழ்ச்சி.. என்ன காரணம் தெரியுமா?


இன்று இன்ட்ராடே டிரேடிங்கில் பிட்காயின் $91,500 க்குக் கீழே சரிந்ததால் கிரிப்டோ சந்தை பீதியில் உள்ளது. தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில், வர்த்தகர்கள் இப்போது $80,000 வரை விலை வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றனர். $90,000 மற்றும் $80,000 நிலைகளுக்கு இடையில் குறிப்பிடத்தக்க டவுன்சைட் பியரிஷ் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.


கிரிப்டோ சந்தையில் விற்பனை அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்டோபரில், கிரிப்டோ ஒரு பெரிய கலைப்பு அலையைக் கண்டது, இது சுமார் $19 பில்லியன் டிஜிட்டல் சொத்துக்களை அழித்துவிட்டது. இப்போது, மற்றொரு அலை அடிவானத்தில் உள்ளது, ஏனெனில் பிட்காயினின் சரிவு கிரிப்டோ முதலீட்டாளர்களை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


80,000 அமெரிக்க டாலர் வரை குறையும் பிட்காயின் விலை


Coinbase இன் Deribit பிரிவின் தரவுகளின்படி, downside protection-க்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் காலாவதியாகும் Put option-கள் அதிக அளவில் வர்த்தகம் செயயப்படுகின்றன. கடந்த ச few நாட்களில் மட்டும், இந்த ஒப்பந்தங்களில் $740 மில்லியனுக்கும் அதிகமாக வாங்கப்பட்டுள்ளன, இது பிட்காயினில் மேலும் சரிவைக் குறிக்கிறது.


தொடர் விற்பனை அழுத்ததில் பிட்காயின்!


பிட்காயினின் தொடர்ச்சியான சரிவு, அதிகப்படியாக வாங்கியதும், சரிவிற்கு மிகப்பெரிய காரணம் என்பதுதான் அதிர்ச்சியே. இது குறித்து மைக்கேல் சாய்லரின் ஸ்ட்ராடஜி இன்க் கூறுகையில், சமீபத்தில் முதலீட்டாளர்கள் $835 மில்லியன் மதிப்புள்ள பிட்காயினை வாங்கியிருந்தாலும், பல நிறுவனங்கள் தங்கள் இருப்புநிலைக் குறிப்பைப் பாதுகாக்க அழுத்தத்தின் கீழ் தங்கள் பங்குகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம்.


இன்றைய பிட்காயின் விலை நிலவரம்!


இன்று இகட்டுரை எழுதும் நேரத்தில் பிட்காயின் விலை 24 மணிநேரத்தில் 5.36% சரிந்து $90,046.18 ஆகவும், எதிரியம் காயின் விலை 5.58% சரிந்து $3,002.85-க்கும் விற்பனையாக வருகின்றன.