Monday, August 4, 2025

வணிக டிஜிட்டல் மாற்றங்களைத் துரிதப்படுத்த ஏர்டெல்லின் டிஜிட்டல் பிரிவான எக்ஸ்டெலிஃபை முன்னோடி டிஜிட்டல் திறன்களை அறிமுகப்படுத்துகிறது

வணிக டிஜிட்டல் மாற்றங்களைத் துரிதப்படுத்த ஏர்டெல்லின் டிஜிட்டல் பிரிவான எக்ஸ்டெலிஃபை முன்னோடி டிஜிட்டல் திறன்களை அறிமுகப்படுத்துகிறது

• டெல்கோ கிரேட் நம்பகத்தன்மை வாய்ந்த முற்றிலும் புதியதும் ' இந்தியாவில் உருவாக்கப்பட்டதுமான' சாவ்ரின் கிளவுடை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் வணிகக் கிளவுட் செலவுகளை 40% வரை மிச்சப்படுத்துகிறது

• உலகளவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான அதிநவீன திறன்களைக் கொண்ட AI-யால் இயங்கும் மென்பொருள் தளத்தை அறிமுகப்படுத்துகிறது

• சிங்டெல், குளோப் டெலிகாம், ஏர்டெல் ஆப்பிரிக்கா ஆகியவற்றுடன் மென்பொருள் தளத்திற்கான உத்திசார்ந்த பங்காண்மைகளில் கையெழுத்திட்டுள்ளது

Chennai (இந்தியா), ஆகஸ்ட் 04, 2025: ஏர்டெல்லின் அனைத்து டிஜிட்டல் சொத்துக்களையும் திறன்களையும் உள்ளடக்கிய பாரதி ஏர்டெல்லுக்கு (‘ஏர்டெல்’) முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான எக்ஸ்டெலிஃபை இன்று ஒரு சாவ்ரின் டெல்கோ கிரேட் கிளவுட் தளமான ‘ஏர்டெல் கிளவுட்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஏர்டெல்லின் சொந்த பயன்பாட்டிற்காக நிமிடத்திற்கு 140 கோடி பரிமாற்றங்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாவ்ரின் கிளவுட் தளம் இந்திய வணிகங்களின் எப்போதும் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவு செய்வதாற்காக இப்போது விரிவாக்கப்படுகிறது. பொது-AI அடிப்படை வழங்கலுடன், அடுத்தத் தலைமுறை நிலையான தரவு மையங்களில் ஹோஸ்ட் செய்யப்பட்டு 300 சான்றளிக்கப்பட்ட கிளவுட் நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் மிகவும் பாதுகாப்பானதும் நம்பகமானதுமான ஏர்டெல் கிளவுட் IaaS, PaaS மற்றும் மேம்பட்ட இணைப்பை வழங்குகிறது. மேலும் பாதுகாப்பான இடப்பெயர்வு, எளிதான அளவீடு, குறைந்த செலவுகள் ஆகியவற்றோடு விற்பனையாளர் லாக்-இன்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. 

உலகம் முழுவதிலும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடிப்படை சிக்கலில் இருந்து விடுபடவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், குழப்பத்தைக் குறைக்கவும், ARPU ஐ உயர்த்தவும் உதவும் AI-யால் இயங்கும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மென்பொருள் தளத்தையும் எக்ஸ்டெலிஃபை அறிமுகப்படுத்தியுள்ளாது. தொலைத்தொடர்பு மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு அடுக்கையும் நிவர்த்தி செய்யும் வகையில் இந்தத் தீர்வு AI தலைமையிலான நுண்ணறிவுகள் மற்றும் பரந்த அளவிலான நுண்ணறிவுகளுக்கான ஒருங்கிணைந்த தரவு இயந்திரம், நிகழ்நேரப் பணிகளைச் சீரமைப்பதற்கான ஒரு பணியாளர் தளம் மற்றும் ஒரு டெல்கோவுக்கான வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு உறுப்புகளையும் நிர்வகிப்பதற்கான அனுபவத் தளம் ஆகியவற்றுடன் வருகிறது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தளத்திற்காக எக்ஸ்டெலிஃபை மூன்று உலகளாவிய கூட்டுமுயற்சி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


1. சிங்க்டெல்லுடன் இணைந்து எக்ஸ்டெலிஃபை ஒரு நிறுவனத் தரம்வாய்ந்த பிளக்-அண்ட்-ப்ளே உருமாற்றத் தளமான 'எக்ஸ்டெலிஃபை ஒர்க்' ஐ நிறுவும். இது சிங்கப்பூரில் உள்ள சிங்க்டெல்லின் கள குழுக்களை ஃப்ளீட் ஆப்டிமைசேஷன், தன்னியக்கப் பணி மேலாண்மை மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நிர்வாகம் போன்ற AI-யால் இயங்கும் திறன்களைக் கொண்டு அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும்.

2. குளோப் டெலிகாமுடன் இணைந்து, எக்ஸ்டெலிஃபை அதன் அதிநவீன, அடுத்த தலைமுறை, AI-யால் இயங்கும் வாடிக்கையாளர் சேவைத் தளமான 'எக்ஸ்டெலிஃபை செர்வ்' ஐ பிலிப்பைன்ஸில் பயன்படுத்தும். இது குளோப் டெலிகாம் தன் வாடிக்கையாளர் அனுபவத்தை ஓம்னி-சேனல் சேவை உத்தரவாதம், வணிகச் செயல்முறைகளை நெறிப்படுத்துதல் மற்றும் புத்திசாலித்தனமான தரவு சார்ந்த செயல்பாடுகள் மூலம் அதிக அளவில் உயர்த்த உதவும்.

3. ஏர்டெல் ஆப்பிரிக்காவுடன் இணைந்து எக்ஸ்டெலிஃபை அதன் மென்பொருள் தளங்களை வழங்கும். இதில் டேட்டா எஞ்சின், ஒர்க் மற்றும் IQ ஆகியவை அடங்கும். எக்ஸ்டெலிஃபை டேட்டா எஞ்சின் மற்றும் எக்ஸ்டெலிஃபை ஒர்க்-ஐப் பயன்படுத்துவது 14 நாடுகளில் உள்ள ஏர்டெல் ஆப்பிரிக்காவின் 150,000-ஆற்றல் மிக்க களக் குழுவிற்கு மைக்ரோ-இலக்கு உத்திகளுக்கான சந்தை நுண்ணறிவுகளை வழங்கும் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் மற்றும் மோசடி பாதுகாப்பு போன்ற முக்கியமான பயன்பாடுகளை வழங்கும். எக்ஸ்டெலிஃபை IQ பாதுகாப்பான, நிகழ்நேர, ஓம்னிசேனல் வாடிக்கையாளர் ஈடுபாட்டை செயல்படுத்தும். சேவைத் தரத்தையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேம்படுத்தும்.


பாரதி ஏர்டெல்லின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல் பின்வருமாறு கூறினார்: "எங்களது உலகத் தரம் வாய்ந்ததும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதுமான ஏர்டெல் கிளவுட் மற்றும் மென்பொருள் தீர்வுகளை இந்தியாவில் நடைபெறும் வணிகங்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் எடுத்துச் செல்வதால் இது எங்கள் வரலாற்றில் மிக முக்கியமான தருணமாகும். சிங்டெல், குளோப் டெலிகாம் மற்றும் ஏர்டெல் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களுடன் ஏற்கனவே கூட்டாண்மைகளில் கையெழுத்திடும் நற்பேறு எங்களுக்குக் கிடைத்துள்ளது.”

“நிகரற்ற அளவில் எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ஏர்டெல்லில் நாங்கள் புதிய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பல ஆண்டுகளாகத் தீவிரமாகப் பயன்படுத்திவருகிறோம். இது 590 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பு புள்ளிகளுக்கு ஆற்றலளிப்பது மற்றும் உலகின் சில சிக்கலான தொலைத்தொடர்பு சவால்களைத் தீர்ப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் ஏர்டெல் கிளவுட் மூலம் இயங்குகின்றன. இதில் எங்கள் பயன்பாடுகள் மிகக் குறைந்த செலவில் இயங்குகின்றன. இன்று, எங்கள் டெல்கோ கிரேட், சாவ்ரின்-கிளவுட் தளத்தைக் கொண்டு இந்தியாவில் நடைபெறும் வணிகங்களை வேகமாகப் புதுமைப்படுத்தவும், சிறந்த முறையில் அளவிடவும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய டிஜிட்டல் நிலப்பரப்பில் பாதுகாப்பாக இருக்கவும் உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் கிளவுட்டின் அனைத்துக் கட்டுப்பாடுகளும் கண்டிப்பாக இந்த நாட்டிற்குள்ளேயே இருக்கும். இந்தியாவிற்கு வெளியில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் இந்தத் தரவு அல்லது அதன் செயல்பாட்டின் எந்தப் பகுதியையும் அணுக முடியாது என்பதை இது உறுதி செய்கிறது” என்று விட்டல் மேலும் கூறினார்.


சிங்டெல் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி இங் தியான் சோங் கூறும்போது, “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்க எங்கள் களப் பொறியாளர்களைச் சிறப்பான வகையில் ஆயத்தப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம். இந்தத் தளம் AI-ஐ மையமாகக் கொண்டு எங்கள் ஒர்க் ஃப்ளோவை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. செயல்திறனையும் வாடிக்கையாளர் சேவையையும் மேம்படுத்துகிறது. அனுப்புதல் மற்றும் வள மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் எங்கள் பொறியாளர்கள் வாடிக்கையாளர்களை விரைவாகச் சென்றடையலாம், மிகவும் துல்லியத்துடன் சிக்கல்களைத் தீர்க்கலாம் மற்றும் எங்கள் ஒட்டுமொத்த கார்பன் தடத்தைக் குறைக்கலாம். உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தை வலிமைப்படுத்தவும் இறுதியில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கவும் எங்களால் முடியும்" என்றார்.


குளோப் டெலிகாமின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கார்ல் குரூஸ் கூறும் போது, “எப்போதும் அர்த்தமுள்ள, நம்பகமான, மனிதர்களை மையமாகக் கொண்ட அனுபவங்களை உருவாக்குவதன் மூலம் பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதே குளோபில் இருக்கும் எங்களுக்கு ஆழ்ந்த விருப்பமாக இருந்து வருகிறது. ஏர்டெல் மற்றும் எக்ஸ்டெலிஃபை- யுடனான இந்த கூட்டாண்மை அந்த விருப்பத்தில் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பரிவுடனும், புத்திசாலித்தனத்துடனும், வேகத்துடனும் சேவை செய்ய எங்களுக்கு வலிமை அளிக்கிறது. எக்ஸ்டெலிஃபையின் AI-யால் இயங்கும் நேர்வுகளை நிர்வகிக்கும் தளத்தை எங்கள் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் முதல் தொடர்புப் புள்ளியில் இருந்து இறுதித் தீர்வு வரை ஒவ்வொரு பயணத்திலும் சிறந்த சேவையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இந்த மாற்றம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வெளிப்படையான அனுபவத்தை மிகுந்த அளவில் வழங்குகிறது. பிரச்சினைகள் தெளிவுடனும் பொறுப்புடனும், உண்மையான அக்கறையுடனும் தீர்க்கப்படுகின்றன.” என்றார்.

“உலகளவில் வாடிக்கையாளர் அனுபவத்தில் உண்டாகும் தடையை நீக்குவதற்கு சமமாக உறுதிபூண்டுள்ள இரண்டு ஒத்த எண்ணம் கொண்ட பங்காளர்களான ஏர்டெல்லுடனும் எக்ஸ்டெலிஃபையுடனும் இணைந்து ஒத்துழைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒன்றாக, நாங்கள் ஒரு தளத்தை மட்டும் தொடங்கவில்லை, சிறப்பான சேவைக்கான ஒரு புதிய தரத்தை உருவாக்குகிறோம், இது மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட டெல்கோவின் எங்கள் பகிரப்பட்ட பார்வையை உறுதிப்படுத்த உதவுகிறது” என்று குரூஸ் மேலும் கூறினார்.


“எக்ஸ்டெலிஃபையை ஒரு முக்கியமான தொழில்நுட்ப பங்காளராகப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அர்த்தமுள்ள டிஜிட்டல் முன்னேற்றங்களை வழங்கவும் ஆப்பிரிக்கா முழுவதும் பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் இது எங்களுக்கு உதவுகிறது," என்று ஏர்டெல் ஆப்பிரிக்காவின் குரூப் தலைமை தகவல் அதிகாரி ஜாக் பார்குய்சென் கூறினார்.