தமிழ்நாட்டின் சென்னையில் இண்டஸ்இண்ட் பேங்க் அனைத்து மகளிர் வங்கிக் கிளையைத் துவக்கியது
ஐந்து அர்ப்பணிப்புள்ள பெண் வங்கியாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்தக் கிளை, வாடிக்கையாளர்களுக்கு சில்லறை வங்கிச் சேவைகளின் முழு வரம்பையும் வழங்குகிறது
சென்னை, ஜூலை 03, 2025: இண்டஸ்இண்ட் பேங்க், தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு அனைத்து மகளிர் கிளையை திறந்ததை அது அறிவித்துள்ளது. வேலப்பஞ்சாவடியில் உள்ள சவீதா டெண்டல் கல்லூரியில் அமைந்துள்ள இது, நாடு முழுவதும் இந்த வங்கி நிறுவிய 12-வது அனைத்து மகளிர் கிளையாகும். இந்த முயற்சியின் மூலம், இண்டஸ்இண்ட் பேங்க், வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு மிகவும் வசதியான மற்றும் சௌகரியமான இடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1300 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ள இந்த அனைத்தும் புதிய கிளை, ஐந்து அர்ப்பணிப்புள்ள பெண் வங்கியாளர்களைக் கொண்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகை, தொடர் வைப்புத்தொகை மற்றும் தனிநபர் கடன், வாகனக் கடன், அடமானங்கள் மற்றும் கார்டுகள் போன்ற கடன் வசதிகள் உள்ளிட்ட இண்டஸ்இண்ட் பேங்க் இன் சில்லறை வங்கிச் சேவைகளின் முழுமையான ஒரு தொகுப்பை இது வழங்குகிறது.
கௌரவ விருந்தினரும், சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸஸ் இன் நிறுவனர் மற்றும் வேந்தருமான டாக்டர் N.M. வீரையன் இண்டஸ்இண்ட் பேங்க் இன் அனைத்து மகளிர் கிளையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தி பியூபிள் சவீதா எக்கோ ஸ்கூல் இன் இயக்குநர் டாக்டர் சவீதா மற்றும் சவீதா ஸ்கூல் ஆஃப் இஞ்சினீரிங் இன் இயக்குநர் டாக்டர் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இண்டஸ்இண்ட் பேங்க் இன் பிரான்ச் பேங்கிங் மற்றும் ஹோம் மார்கெட்ஸ் தலைவர் திரு. வினீத் தார், "தமிழ்நாட்டின் சென்னையில் அனைத்து மகளிர் வங்கிக் கிளையைத் திறப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஒரு உள்ளடக்கிய மற்றும் சமமான வங்கிச் சூழலை உருவாக்குவதற்கான எங்கள்
நிலையான தொலைநோக்குப் பார்வைக்கு இந்த முயற்சி ஒரு சான்றாக இருக்கிறது. நிதிச் சூழலுக்குள் அதிக பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கின்ற இத்தகைய கிளைகள் மூலம், எங்கள் பெண் வாடிக்கையாளர்கள் ஒரு மிகவும் வசதியான மற்றும் சௌகரியமான இடத்தில் வங்கிச் சேவைகளைப் பெறக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதற்கு நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம்." என்றார்.
ஜலந்தர், சண்டிகர், டெல்லி, ஜெய்ப்பூர், புனே, புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இண்டஸ்இண்ட் பேங்க் 12 அனைத்து மகளிர் கிளைகளைக் கொண்டுள்ளது. மார்ச் 31, 2025 நிலவரப்படி, பிராந்தியத்தில் அதன் வலுவான மற்றும் வளர்ந்து வரும் இருப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற வகையில் தென்னிந்தியாவில் இந்த வங்கி 800 க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும், மக்களுக்கு மாற்றத்தக்க வங்கி சேவைகளை வழங்குவதில் அதன் நான்காவது தசாப்தத்தில் இந்த வங்கி நுழைகின்றபோது, அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வசதியான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்வதில் உறுதிப்பாட்டுடன் உள்ளது.