அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘எண்டு-ஓ செக்’
In the presence of:
Dr. Venkat P – Senior Consultant, Surgical Oncology
Dr. Ajit Pai – Senior Consultant, Surgical Oncology
Dr. Ayyappan – Senior Consultant, Surgical Oncology
Dr. Madhu Priya – Senior Consultant, Surgical Oncology
Dr. Kumar Gubbala – Consultant, Gynaecological Oncology
Along with,
Mr. Harshad Reddy – Director, Group Oncology and International
Mr. Karan Puri – Chief Executive Officer
கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை புற்றுநோய்களுக்கு முன்கூட்டிய கண்டறிதல் மற்றும் நோயறிதல் திட்டம்
பெண்களுக்கு, குறிப்பாக மாதவிடாய் நின்றுவிட்ட வயது பிரிவிலுள்ளவர்களுக்கு இடர்வாய்ப்பு அடிப்படையிலான மதிப்பாய்வுகள், நோயறிதலுக்கான சோதனை மற்றும் அறிகுறிகள் மீதான ஆய்வை எண்டு-ஓ செக் திட்டம் வழங்கும்.
சென்னை: ஜுலை 30, 2025: பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) என்ற ஒரு செயல்திட்டத்தை இன்று தொடங்கியிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டம் இது. கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை ஆகியவற்றில் வரக்கூடிய மிகப்பொதுவான பெண் பிறப்புறுப்பு சார்ந்த இரு புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே மற்றும் பலனளிக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய காலகட்டத்திலேயே கண்டறிவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.
எண்டு-ஓ செக் என்ற பெயரிலான இச்செயல்திட்ட தொடக்கவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, சினைப்பை மற்றும் கருப்பையக வரிச்சவ்வு புற்றுநோய்கள் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக மருத்துவ நிபுணர்களின் விவாத அமர்வை அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஒருங்கிணைந்து நடத்தின. பெண்களுக்கு மேற்குறிப்பிட்ட புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் மீது இந்த விவாத அமர்வு சிறப்பு கவனம் செலுத்தியது. அத்துடன், உரிய நேரத்தில் சிகிச்சைப் பெறுவதை தாமதப்படுத்துகின்ற தவறான கண்ணோட்டங்களையும், நம்பிக்கைகளையும் பெண்கள் மனதிலிருந்து அகற்றுவதும் இந்த அமர்வின் குறிக்கோளாக இருந்தது. ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜித் பை, ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். வெங்கட் P மற்றும் APCC – ன் பெண் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர் டாக்டர். குமார் கப்பாலா, ACC – வானகரத்தின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மது பிரியா, ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் நிபுணர் டாக்டர் பிரியா கபூர், ஆகியோர் நிபுணர்களது விவாத அமர்வில் பங்கேற்று கலந்துரையாடினர். ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஐயப்பன் இந்நிகழ்வின் நெறியாளராக செயல்பட்டார்.
“சத்தமில்லாமல் கொல்லும்” நோய் என பெரும்பாலும் அழைக்கப்படும் சினைப்பை புற்றுநோயானது, 55 மற்றும் 64 ஆண்டுகள் வயதுக்கு இடைப்பட்ட பெண்களை பாதிக்கிறது. இந்நோய் பாதிப்பு கண்டறியப்படும் சராசரி வயது 63 ஆக இருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், சிகிச்சைக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 90% - க்கும் அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 1.57 மில்லியனாக அதிகரிக்கும் என முன்கணிக்கப்பட்டிருக்கிறது. பெண்களைப் பாதிக்கும் முதன்மையான ஐந்து புற்றுநோய்கள் பட்டியலில் சினைப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. வயது – நிலையான பாதிப்பு நேர்வு விகிதங்கள், சினைப்பை புற்றுநோய்க்கு2 ஒவ்வொரு 100,000நபர்களில் 4.6 மற்றும் கருப்பையக புற்றுநோய்க்கு ஒவ்வொரு 100,000 நபர்களில் 2.5 என மதிப்பிடப்பட்டிருக்கின்றன. இதற்கு பங்களிப்பு செய்யும் காரணிகளுள் இனப்பெருக்க பாங்குகளில் மாற்றங்கள், நகர்ப்புற வாழ்க்கை முறைகள் மற்றும் வளர்சிதை மாற்ற பாதிப்புகளில் அதிகரிப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. அதிக இடர்வாய்ப்புள்ள மக்கள் பிரிவினரில், இலக்குடன் நோயறிதலை மேற்கொள்ள அவசரத்தேவை இருப்பதை இது முன்னிலைப்படுத்துகிறது.
கருப்பையக உள்வரிச்சவ்வு புற்றுநோயானது, எதிர்பாராத இரத்தப்போக்கு அல்லது இயல்புக்கு மாறான திரவ வெளியேற்றம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகின்றபோது, ஆரம்ப நிலையிலேயே இந்த அறிகுறிகள் குறித்து மருத்துவரிடம் தகவலளிக்க பல பெண்கள் தவறிவிடுகின்றனர். இதனால், தாமதிக்கப்பட்ட நோயறிதல்களும் மற்றும் சிகிச்சையின் விளைவுகள் சரியாக பயனளிக்காத நிலையும் ஏற்படுகின்றன.
அதிக இடர்வாய்ப்புள்ள மக்கள் பிரிவினரில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிதல், அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உரிய நேரத்திற்குள் இடையீட்டு சிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தும் விதத்தில் எண்டு-ஓ செக் செயல்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்களது பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு தன்முனைப்பு நடவடிக்கைகளை பெண்கள் எடுப்பதற்கு இது ஆதரவளிக்கிறது.
இத்திட்டத்தின் தொடக்கவிழாவில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் பிரசிடென்ட் திரு. தினேஷ் மாதவன் கூறியதாவது: “புற்றுநோய் சிகிச்சையில் உயிர்பிழைப்பு விகிதத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதையும் எமது அதிக சக்தி வாய்ந்த தோழனாக ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது இருந்து வருகிறது. எண்டு – ஓ செக் என்பது, நோயாளிகள் தன்முனைப்புடன் எடுக்கும் ஒரு நடவடிக்கை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையிலிருந்து அதை கண்டறிவதற்கான அடிப்படை சோதனை மீதும் ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மீதும் சிறப்பு கவனத்தை மாற்றும் நடவடிக்கையாக இது இருக்கும். புற்றுநோய் சிகிச்சை மேலாண்மை குழுக்களால் உரிய நேரத்திற்குள் நோய் பாதிப்பை கண்டறிந்து, துல்லிய சிகிச்சை வழங்கப்படுவதை இது எளிதாக்கும்.”
அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் & அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சென்னையின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி பேசுகையில், “எண்டு – ஓ செக் செயல்திட்டத்தின் மூலம் முன்தடுப்பு புற்றுநோயியல் மீதான எமது பொறுப்புறுதியை நாங்கள் மேலும் வலுவாக்குகிறோம். மருத்துவ நெறிமுறைகள் என்பவற்றையும் கடந்ததாக இச்செயல்திட்டம் அமல்படுத்தப்படுகிறது;. விழிப்புணர்வை உருவாக்குவது, தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமையளிக்க பெண்களை ஊக்குவிப்பது, விரிவான ஸ்க்ரீனிங் செயல்முறைக்கு அணுகுவசதி கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை தொடர்பானதாக இத்திட்டம் இருக்கும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது, உயிர்களை காப்பாற்ற உதவுவதோடு, அதிகம் பயனளிக்கின்ற மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சைகளை நாங்கள் வழங்கி குணப்படுத்த எங்களை அனுமதிக்கிறது.” என்று கூறினார்.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது.
இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.