Friday, July 25, 2025

இந்த நட்பு தினத்தில், ரஷ்மிகா மந்தனா & ஸ்னாப்சாட் இருவரும் இந்திய ஸ்னாப்சாட்டர்களுக்கு ஒரு பிரத்யேக ஸ்ட்ரீக் ரீஸ்டோரை பரிசளிக்கிறார்கள்

இந்த நட்பு தினத்தில், ரஷ்மிகா மந்தனா & ஸ்னாப்சாட் இருவரும் இந்திய ஸ்னாப்சாட்டர்களுக்கு ஒரு பிரத்யேக ஸ்ட்ரீக் ரீஸ்டோரை பரிசளிக்கிறார்கள்

CHENNAI -25.7.25 ஸ்னாப்சாட்-ஆனது, உலகளவில் முதன்முறையாக, நட்பு தினத்தைக் கொண்டாடும் விதமாக, இந்தியாவின் சிறந்த திரைப்பட நட்சத்திரமான ரஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து இந்திய ஸ்னாப்சாட்டர்களுக்கு ஒரு 'ஸ்ட்ரீக் ரீஸ்டோர்' வாய்ப்பை வழங்குகிறது. பரவலாக அறியப்பட்டபடி, ஸ்னாப் ஸ்ட்ரீக்ஸ் என்பது ஸ்னாப்சாட்டில் உள்ள ஒரு பிரபலமான தயாரிப்பு அம்சமாகும். இது நண்பர்கள் ஒருவருக்கொருவர் எந்தளவுக்கு அடிக்கடி ஸ்னாப்களை அனுப்புகிறார்கள் என்பதை முன்னிலைப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கிடையேயுள்ள தற்போதைய உண்மையான தொடர்புகளைக் கொண்டாடுகிறது. ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 3 வரை, இந்தியாவில் உள்ள ஸ்னாப்சாட்டர்கள், எந்த செலவும் இல்லாமல் ஐந்து சிறப்பு ஸ்ட்ரீக்குகளை அடைவதற்கான பிரத்யேக வாய்ப்பை வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு பெறுவார்கள். ஸ்ட்ரீக் ரீஸ்டோர் என்பது வழக்கமான ஸ்னாப்சாட் அனுபவத்தின் ஒரு பகுதி அல்ல. மற்றும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. உண்மையான, அர்த்தமுள்ள பிணைப்புகளைக் கொண்டாடுவதற்குப் புகழ்பெற்ற இந்தியாவின் அன்பான மற்றும் தேசிய ஐகானான ரஷ்மிகா மந்தனாவை விட சிறந்தவர் வேறு யார் உள்ளனர்.

மேலும், ஸ்னாப்சாட், 'பெஸ்டீஸ் பிட்மோஜி லென்ஸ்'-ஐயும் அறிமுகப்படுத்துகிறது. இது உங்கள் நெருங்கிய நண்பர்களை ஒரு விர்ச்சுவல் கோப்பையுடன் முடிசூட்ட அனுமதிக்கும் ஒரு விளையாட்டுத்தனமான புதிய AR அனுபவமாகும்; ஏனெனில், அன்பின் ஒரு சிறிய அடையாளம் இல்லாமல், என்ன நட்பு தினம்?


‘ஸ்னாப் வித் ஸ்டார்ஸ்’ எனும் மும்பையில் நடந்த ஒரு அன்யோன்யமான, மூடிய கதவிற்குள் நடந்த நிகழ்ச்சியில், ரஷ்மிகா மந்தனா, தனது புதிய வாசனை திரவிய பிராண்டான ‘டியர் டைரி’யை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்னாப்சாட்டின் முன்னணி ஃபேஷன் மற்றும் அழகு படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். #DearDiarySnapStarSquad இன் அதிகாரப்பூர்வ ஒரு பகுதியாகவும், இந்த பிராண்டிற்கான வழக்கமான உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுமான இந்த படைப்பாளிகள், இந்த நடிகையுடன் கடந்த கால மலரும் நினைவுகளையும், மனமார்ந்த ஒப்புதல் வாக்குமூலங்களையும் பகிர்ந்து கொண்டு யதார்த்தமான ஒரு மதிய நேரத்தைக் கழித்தனர். இந்த நிகழ்வானது இவ்வாசனை திரவியத்தின் பின்னணியில் உள்ள உத்வேகத்தைப் பிரதிபலித்ததுடன், மிகவும் முக்கியமான நினைவுகளைப் பாதுகாப்பது என்ற பகிரப்பட்ட கருப்பொருளில் கவனம் செலுத்தியது.


"என் நண்பர்கள்தான் என்னுடைய அனைத்தும்; அவர்கள்தான் என் நிஜ வாழ்க்கையின் நாட்குறிப்பு. என்னுடைய புதிய வாசனை திரவியத்தின் பிராண்டான 'டியர் டைரி' மூலம், ஒரு நேசத்துக்குரிய நினைவின் அந்த தொட்டுணரமுடியாத உணர்வைப் பற்ற விரும்பினேன். நட்பு தினத்திற்கான ஸ்னாப்சாட்டுடனான இந்தக் கூட்டாண்மையானது, மிகவும் நிறைவாக உணரச் செய்கிறது; ஏனெனில், இதுவே நாம் அனைவரும் நம் அன்றாட கதைகளைப் பகிர்ந்து கொள்ளும், மற்றும் இந்நினைவுகளை காட்சியாக கட்டமைக்கும் ஒரு தளமாகும். ஒரு ஸ்ட்ரீக்கைப் பெற ஒரு சிறப்பு வின்டோ எங்களிடம் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது, வாழ்க்கை அதன் வழியில் செல்லக்கூடும் என்றாலும், உண்மையான தொடர்புகள் எப்போதும் ஒரு இரண்டாவது வாய்ப்புக்குத் தகுதியானவை என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்ளும் ஒரு சிந்தனைத் தொடுதல் ஆகும். ஸ்னாப்சாட் மற்றும் 'டியர் டைரி' ஆகிய இரண்டும் நாம் ஒருபோதும் மறக்க விரும்பாத தருணங்களுக்கான காதல் கடிதங்களாகும்." என்று ராஷ்மிகா மந்தனா கூறினார்.

ஸ்னாப் இங்க் இன்டியா-வின் கன்டென்ட் & AR பார்டனர்ஷிப்ஸ்-இன் இயக்குனர் சாகேத் ஜா சௌரப் மேலும் கூறுகையில், "ஸ்னாப்சாட்-இன் அடிப்படைக் கொள்கை நட்பு; மக்கள் தங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைவதற்கான இடம் எங்கள் தளமாகும். எனவேதான், உண்மையான இணைப்பின் உணர்வை உள்வாங்கும் ரஷ்மிகா போன்ற ஒரு அன்பான ஆளுமையுடன் கூட்டுச் சேருவது அர்த்தமுள்ளதாக இருந்தது. இந்த நட்பு நாளில், எங்கள் அன்பான ஸ்னாப் ஸ்டார் படைப்பாளர்கள் மற்றும் அவருடன், அவரது பிராண்டான 'Dear Diary'-ஐக் கொண்டாட நாங்கள் ஒன்றிணைந்தோம். மேலும், எங்கள் தளத்தில் மிகவும் விரும்பப்படும் அம்சமான ஸ்ட்ரீக்ஸ்-ஐ மீட்டமைப்பதற்கான ஒரு பிரத்யேக வாய்ப்பின் மூலம், எங்கள் சமூகம் அவர்களின் மிக முக்கியமான பிணைப்புகளை ஆழப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவற்றை நினைவுகூர்ந்தோம். இந்த ஸ்ட்ரீக்ஸ்-ஆனது எங்கள் தளத்தில் மிகவும் விரும்பப்படும் ஒரு அம்சம், மற்றும் ஒரு சிறப்பான சிறந்த AR லென்ஸ் ஆகும்." என்றார்.


எனவே, அது ஒரு பழைய ஸ்ட்ரீக்-ஐ மீண்டும் எழுப்புவதாக இருந்தாலும் சரி அல்லது என்றென்றும் உங்களின் நறுமணத்தைக் கண்டறிவதாக இருந்தாலும் சரி, இந்த நட்பு தினத்தில், ஸ்னாப்சாட்-ஆனது ஜென் Z தலைமுறைக்கு இணைப்பு, படைப்பாற்றல் மற்றும் ஒரு சிறிய ஏக்கம் ஆகிய மிக முக்கியமானவற்றை மீண்டும் கொண்டு வர உதவுகிறது.

💛 ஸ்னாப்சாட்-இல் நட்பு தின வேடிக்கை:

● ஸ்ட்ரீக் ரீஸ்டோர்: ஜூலை 30, 2025 முதல் ஆகஸ்ட் 3 வரை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஸ்னாப்சாட்டருக்கும் ஐந்து இலவச ஸ்ட்ரீக் மீட்டவைவுகள் கிடைக்கும்.

● ‘பெஸ்டீஸ் பிட்மோஜி லென்ஸ்’ - உங்கள் நண்பர்களிடம் உங்கள் அன்பைக் காட்ட ஒரு வேடிக்கையான வழி!