சாம்சங் ‘சால்வ் ஃபார் டுமாரோ’ போட்டிக்கு இறுதி அழைப்பு: உங்கள் யோசனை அடுத்த பெரிய தீர்வாகலாம்!
புது டெல்லி முதல் கோலாப்பூர் வரை, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர் – இப்போழுது, தைரியமான யோசனைகளுடன் நிஜ உலகப் பிரச்சனைகளைத் தீர்க்க, உங்களுக்கு ஒரு வாய்ப்பு – ஒரு கோடி ரூபாய் வெல்லவும் வாய்ப்பு! ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கவும்.
CHENNAI 02.07.2025
நகரங்கள் தோறும், வகுப்பறைகள் தோறும், புது டெல்லியின் மையப்பகுதியிலிருந்து கோலாப்பூரின் சந்துகள் வரை, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு துணிச்சலான நம்பிக்கையுடன் முன்வந்துள்ளனர் – “என்னால் நாளைய தினத்தை மாற்ற முடியும்.” சாம்சங் ‘சால்வ் ஃபார் டுமாரோ’ சாலை நிகழ்ச்சிகளின் இறுதிக்கட்டம் முடிவடையவிருப்பதால், இந்தியாவின் இளம் மாற்றியமைப்பாளர்கள் தங்கள் யோசனைகளைச் செயலாக்கப் போவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
14-22 வயதுடையவர்களுக்கான தேசிய கண்டுபிடிப்புப் போட்டியான சாம்சங் ‘சால்வ் ஃபார் டுமாரோ’ திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாகும். இப்போட்டி ஏற்கனவே நாடு முழுவதும் ஒரு இயக்கத்தைத் தூண்டியுள்ளது. ஏப்ரல் 29, 2025 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வடிவமைப்புச் சிந்தனைக் கருவிகள், சாம்சங் மற்றும் IIT டெல்லி வல்லுநர்களிடமிருந்து வழிகாட்டுதல், முதலீட்டாளர்களுடன் தொடர்பு, முன்மாதிரி தயாரிப்பதற்கான ஆதரவு மற்றும் ஒரு கோடி ரூபாய் வெல்லும் வாய்ப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
ஆனால், பரிசை விட, இத்திட்டத்தை உண்மையிலேயே வரையறுப்பது இதன் நோக்கமே.
கடந்த சில வாரங்களாக, திறந்த நிலை நிகழ்வுகள் மற்றும் சாலை நிகழ்ச்சிகள் அசாதாரண தொலைநோக்கு பார்வையுடன் மாணவர்களை ஒன்றிணைத்துள்ளன. டெல்லி-என்சிஆர்-ல், மாணவர்கள் மனநலப் பயன்பாடுகள் மற்றும் மாசுபாட்டிற்கான AI-இயக்கப்படும் தீர்வுகளைக் கனவு கண்டனர். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில், நிலையான பேக்கேஜிங், பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி தொடர்பான யோசனைகள் ஒரு மேடையைக் கண்டன. ஒவ்வொரு நகரத்திலும், ஒரு செய்தி தெளிவாக ஒலித்தது – இளம் இந்தியா நிஜ உலகப் பிரச்சனைகளுக்கு நிஜ உலகத் தீர்வுகளை உருவாக்கத் தயாராக உள்ளது.
இப்போது, இது உங்கள் முறை.
உலகில் ஏதேனும் ஒரு குறைபாட்டைப் பார்த்து, “இதை ஏன் யாரும் சரிசெய்வதில்லை?” என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால் – ஒருவேளை பதில்: நீங்கள் தான் அதை சரிசெய்ய வேண்டியவர் என்பதாக இருக்கலாம்.
விவசாயிகளுக்குச் சிறந்த நீர்ப்பாசனத்திற்கு உதவ விரும்பினாலும், பதின்ம வயதினருக்காக ஆன்லைனில் பாதுகாப்பான இடத்தைக் கட்டியெழுப்ப விரும்பினாலும், அல்லது உங்கள் நகரத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற விரும்பினாலும் – உங்கள் யோசனை இங்குதான் உள்ளது.
காஜியாபாத்தைச் சேர்ந்த மாணவி இஷிதா, “எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறாய் என்று என்னிடம் யாராவது கேட்டது இதுவே முதல் முறை. அது எல்லாவற்றையும் மாற்றியது,” என்று பகிர்ந்து கொண்டார்.
புனேவைச் சேர்ந்த மாணவர் ஆகாஷ் மேலும், “நான் ‘சரியான நேரம்’ வரும் வரை காத்திருப்பதை நிறுத்திவிட்டு உருவாக்க ஆரம்பித்தேன். சால்வ் ஃபார் டுமாரோ எனது யோசனைகளுக்கு மதிப்பு உண்டு என்று நம்ப வைத்தது,” என்றார்.
அவர்களின் கதைகள் ஒரு ஆரம்பம் மட்டுமே. அடுத்தது உங்களுடையதாக இருக்கலாம்.
சாம்சங் ‘சால்வ் ஃபார் டுமாரோ’ என்பது ஒரு சிறந்த கோடிங் நிபுணராகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுநராகவோ இருப்பதற்கானது அல்ல – இது பச்சாத்தாபம், ஆர்வம் மற்றும் முயற்சி செய்வதற்கான தைரியம் பற்றியது. இது ஒரு தூய்மையான நகரம், பாதுகாப்பான சாலைகள், ஆரோக்கியமான சமூகங்கள் மற்றும் எந்தக் குரலும் கேட்கப்படாமல் விடப்படாத ஒரு எதிர்காலம் குறித்து கனவு காணும் மாணவர்களுக்கானது.
நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், ஒருவேளை இது உங்களுக்கானதாக இருக்கலாம்.
ஜூன் 30, 2025-க்குள் விண்ணப்பிக்கவும்! உங்கள் யோசனையை ஒரு தாக்கமாக மாற்ற இதுவே உங்களுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு. [இப்போது விண்ணப்பிக்கவும் இணைப்பு]
வருங்காலத்தைக் கட்டியெழுப்புவோம் – ஒரே ஒரு துணிச்சலான யோசனையுடன். நாளைய தினத்திற்காகத் தீர்வு காண்போம்.
சாம்சங் நியூஸ்ரூம் இந்தியா