புதுடெல்லியில் இந்தியாவின் முதல் மிக நவீன ZF(புரோ) டெக் பிளஸ் பணிமனையைத் தொடங்கியிருக்கும்
ZF ஆஃப்டர்மார்க்கெட்
இப்பிராந்தியத்திலுள்ள ZF (புரோ) டெக் ஸ்டார்ட் பணிமனைகளின் வலையமைப்பில் இணையும் முதல் இந்திய ZF (புரோ) டெக் பிளஸ் பணிமனை (ஒர்க்ஷாப்)
அனைத்து மிக முக்கிய உதிரிபாகங்களுக்கும் உற்பத்தியாளர் நிபுணத்துவத்தை உறுதிசெய்து எதிர்கால பணிமனை பிசினஸ் நிறுவனங்களுக்கு விரிவான ஆன் – சைட் ஆதரவை ZF (புரோ) டெக் பிளஸ் வழங்குகிறது.
நாடெங்கிலும் பணிமனைகளை நிறுவுவதற்கான அடித்தளத்தை இந்த முதல் ZF (புரோ) டெக் பிளஸ் பணிமனையின் தொடக்கம் அமைத்துத் தருகிறது.
இந்தியா – பிப்ரவரி 21, 2025 – வாகன டிரைவ்லைன் மற்றும் சேசிஸ் தொழில்நுட்பத்திலும் மற்றும் செயலூக்கம் மிக்க மற்றும் அது இல்லாத பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும் உலகளவில் முதன்மை நிறுவனமாகத் திகழும் ZF குழுமம், இந்தியாவின் முதல் ZF (புரோ) டெக் பிளஸ் பணிமனையை புதுடெல்லியில் தொடங்குவதை பெருமிதத்துடன் அறிவிக்கிறது. இந்நாட்டில் தொழில்நுட்பத் திறன்களையும், உள்நாட்டு அளவிலான நிபுணத்துவத்தையும் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் நேர்த்தியையும் மேம்படுத்துவதற்கான ZF - ன் தொடர் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க இந்நிகழ்வு இருக்கிறது.
ZF ஆஃப்டர்மார்க்கெட், 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிமனைகளின் சிறப்பான பாரம்பரியத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த பணிமனையானது, ZF – ன் சிறந்த அங்கீகாரம் பெற்ற ZF (புரோ) டெக் வலையமைப்பின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம், 2012-ம் ஆண்டிலிருந்தே தொழில்நுட்ப அறிவு, பயிற்சி மற்றும் OEM களின் சர்வீஸ் வரவுகள் ஆகியவற்றை வழங்குவதன் வழியாக பணிமனைகளுக்கு திறனதிகாரத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லியில் நிறுவப்பட்டுள்ள பணிமனையை ZF ஆஃப்டர்மார்க்கெட் – ன் பிசினஸ் லைன் பயணியர் கார் பிரிவின் தலைவர் மற்றும் பிசினஸ் லைன் பயணியர் கார் IMEA - ன் தலைவர் திரு. விஜய் கோர்கேட் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈரோப்பியன் மோட்டார் ஒர்க்ஸ் – ன் தலைவரும் மற்றும் இந்த பணிமனையின் உரிமையாளருமான திரு. ரோலி சாத்தா, இந்த தொடக்கவிழா கொண்டாட்டத்திற்கு தலைமை வகித்தார். உலகெங்கிலும் உள்ள தனது பார்ட்னர்கள் திறனதிகாரத்துடன் சிறப்பாக செயல்பாடுமாறு செய்வதில் ZF – ன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், இந்த முன்னெடுப்பின் வெற்றியின் உலகளாவிய முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ZF ஆஃப்டர்மார்க்கெட் – ன் பிசினஸ் லைன் பேசஞ்சர் கார் பிரிவின் தலைவர் திரு. மார்கஸ் விட்டிக், பேசுகையில், “இந்தியாவின் முதல் ZF (புரோ) டெக் பிளஸ் பணிமனையின் இத்தொடக்கம் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய சந்தையில் எங்களது ஈடுபாடு மற்றும் பெருவிருப்பத்தை இது வலியுறுத்துகிறது. இந்த அமைவிடத்தின் வழியாக, எமது பணிமனை பார்ட்னர்களுக்கு நிகரற்ற ஆதரவை எங்களால் வழங்க இயலும்; இந்தியாவில் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ள அவர்கள் முழுத்திறன் கொண்டிருப்பதை உறுதி செய்வதும், அவர்களது திறன்களை மேம்படுத்துவதும் எமது செயல்பாடாக இருக்கிறது. இந்தியாவில் எமது பயிலரங்கு கருத்தாக்கத்தை நாடெங்கிலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் தொடக்கமாகவும் இது அமைகிறது.” என்று கூறினார்.
ACMA – ன் ஆய்வின்படி, இந்திய ஆட்டோமோட்டிவ் ஆஃப்டர்மார்க்கெட், நிதியாண்டு 2024 – ல், முந்தைய அளவான 10.6 பில்லியன் யுஎஸ் டாலரிலிருந்து, 11.3 பில்லியன் யுஎஸ் டாலராக 10% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. வாகன பாகங்களின் அதிகரிப்பு மற்றும் பழுதுநீக்கம், பராமரிப்பு சந்தையை முறைப்படுத்துதல் அதிகரித்திருப்பது ஆகியவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது.
IMEA – ன் பிசினஸ் லைன் பயணியர் கார் பிரிவின் தலைவர் திரு, விஜய் கோர்கடே இது குறித்து கூறியதாவது: “தொழில்நுட்பம் மற்றும் தரம் ஆகிய அம்சங்களில் பணிமனையின் எதிர்பார்ப்புகளுக்கு இந்தியாவில் ZF ஆஃப்டர்மார்க்கெட் தர அளவுகோலை நிறுவுகிறது. தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான சர்வீஸையும், ஆதரவையும் வழங்குவதற்கு எமது பார்ட்னர்களை நாங்கள் ஏதுவாக்குகிறோம். இந்திய ஆட்டோமோட்டிவ் சந்தையானது, ஒரு சிறப்பான பரிணாம வளர்ச்சியை அடையும் நிலையில் இருப்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். போக்குவரத்து செயல்பாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பாடுகளின் மூலம் பணிமனைகள் வேகத்திற்கு ஈடுகொடுப்பதற்கு ZF (புரோ) டெக் பிளஸ் கருத்தாக்கம் உதவுகிறது. இதன் மூலம் எதிர்கால தேவைகளை எதிர்கொள்ள திறன் கொண்டவர்களாக இக்கருத்தாக்கம் அவர்களை ஆக்குகிறது.”
இப்பணிமனையின் உரிமையாளரும், ஈரோப்பியன் மோட்டார் ஒர்க்ஸ் – ன் தலைவருமான திரு. ரோலி சத்தா அவரது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்திக் கூறியதாவது: “ZF குழுமத்துடன் பல ஆண்டுகளாகவே நாங்கள் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறோம். பாரம்பரியம் மிக்க ஒரு சிறந்த விநியோகஸ்தராக ZF ஆஃப்டர்மார்க்கெட் பிரதிநிதித்துவம் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் தரத்தினை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ZF (புரோ) டெக் பிளஸ் வலையமைப்பின் முதன் முதல் பணிமனையாக இருப்பதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம். ZF குழுமத்தால் வழங்கப்படும் விரிவான ஆதரவு மற்றும் நிபுணத்துவமானது, நிச்சயமாக எமது சர்வீஸ் தரநிலைகளை மேம்படுத்தும் மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்ற எங்களுக்கு உதவும்.”
நோக்கம் மற்றும் தாக்கம்:
ZF ஆஃப்டர்மார்க்கெட் “போக்குவரத்து சாதனங்கள் இயங்கும் நேரத்தை அதிகமாக்குவது” என்ற செயல்உத்தியை ZF ஆஃப்டர்மார்க்கெட் செயல்படுத்தி வருகின்ற நிலையில், பணிமனை பார்ட்னர்களுக்கு தொழில்நுட்ப அறிவு, பயிற்சி மற்றும் பொருத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்களை ZF (புரோ) டெக் பணிமனைகள் வழங்கும். தொழில்நுட்ப தரவு மற்றும் சர்வீஸ் திட்டங்களிலிருந்து, சந்தையாக்கல் ஆதரவு மற்றும் நவீன பயிற்சி திட்டம் வரை ZF ஆஃப்டர்மார்க்கெட் நிபுணர்களால் வழங்கப்படும் விரிவான ஆதரவினால் ZF (புரோ) டெக் – ன் அனைத்து பணிமனைகளும் ஆதாயமடையும். இந்த முழுமையான அணுகுமுறையானது, நவீன ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பத்தின் சிக்கல்களையும், நுட்பங்களையும் கையாள்வதற்கும் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதற்கும் பணிமனைகள் சிறந்த திறன் கொண்டவைகளாக இருப்பதை உறுதிசெய்யும். வினியோகஸ்தர்களுக்கு, பணிமனை அளவில் ZF புராடக்ட்களை ஊக்குவிப்பதன் வழியாக, இரண்டாம் நிலை விற்பனை புள்ளிகளை ZF (புரோ) டெக் பணிமனைகள் திரட்டுவதே நோக்கம். உயர்தர சேவை, உள்ளூர்மயமாக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் போக்குவரத்திற்கு நிலைப்புத்தன்மையுள்ள எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் ZF – ன் நீண்டகால செயல்உத்தியில் இப்பணிமனைகள் ஒரு மிக முக்கியப் பங்காற்றும்.
ZF (புரோ) டெக் ஸ்டார்ட் மற்றும் ZF (புரோ) டெக் பிளஸ். ZF (புரோ) டெக் ஸ்டார்ட் – ன் அனைத்து ஆதாயப்பலன்களுக்கும் கூடுதலாக, பிந்தைய திட்டம் மேலதிக பலன்களை சேர்த்து வழங்குகிறது. தனிப்பட்ட ஆன்சைட் ஆதரவு மற்றும் மாறுகின்ற தலைப்புகளிலும், பிரிவுகளிலும் தொழில்நுட்ப பயிற்சியில் வருடாந்திர பங்கேற்பு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவெங்கும் ஏற்கனவே 140-க்கும் அதிகமான ZF (புரோ) டெக் ஸ்டார்ட் பணிமனைகளின் வலையமைப்பு தற்போது இயங்கி வருகிறது. ZF (புரோ) டெக் ஸ்டார்ட் மற்றும் ZF (புரோ) டெக் பிளஸ் என்ற இரு வகையினங்களிலும் ZF (புரோ) டெக் கருத்தாக்கம் கிடைக்கப்பெறும். இந்த இரு வகையினங்களையும் சேர்ந்த பணிமனைகளின் வலையமைப்பை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கணிசமாக விரிவாக்கம் செய்ய ZF ஆஃப்டர்மார்க்கெட் திட்டமிட்டிருக்கிறது.
இந்தியாவில் அதன் இருப்பை விரிவுபடுத்தல்:
ZF (புரோ) டெக் பிளஸ் அறிமுகத்தின் மூலம் இந்தியாவில் தனது இருப்பினை விரிவுபடுத்தும் பணியை ZF ஆஃப்டர்மார்க்கெட் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தையும், நிபுணத்துவத்தையும் அவர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு போய் சேர்க்கிறது. புதுடெல்லியில் தொடங்கப்பட்டிருக்கும் ZF (புரோ) டெக் பிளஸ் பணிமனையானது, அடுத்த தலைமுறை மொபிலிட்டிக்கான ZF – ன் பயணத்தில், ஒரு முக்கிய மைல் கல்லாகும். இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வினியோகஸ்தர்களுக்கும், பணிமனைகளுக்கும் இன்னும் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதற்கு இது வழிவகுக்கும்.
மேலதிக தகவல்களுக்கு காணவும்: ZF [pro]Tech start
ஊடக தொடர்பிற்கு:
மல்லிகா ஆப்தே, ஹெட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பிஆர் இந்திய பிராந்தியம்
தொலைபேசி : +91 860 501 3528., மின்னஞ்சல்: Mallika.apte@zf.com
ZF குறித்து
பயணியர் கார்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் தொழில் தொழில்நுட்பத்திற்கு மிக நவீன மொபிலிட்டி தயாரிப்புகள் மற்றும் சாதனங்களை வழங்குகின்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக ZF இயங்கி வருகிறது. இதன் விரிவான புராடக்ட் தொகுப்பானது, வாகன உற்பத்தியாளர்கள், நகர்வுத்திறன் சேவை வழங்குனர்கள் மற்றும் போக்குவரத்து மற்றும் நகர்வுத்திறன் துறைகளிலுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆகியவற்றை முதன்மை இலக்காக கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான வாகனங்களுக்கு ZF ஆற்றலை வழங்குகிறது. இதன் தயாரிப்புகளின் வழியாக மாசு உமிழ்வுகளை குறைப்பதில் காலநிலையை பாதுகாப்பதிலும் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் சிறந்த பங்களிப்பை செய்து வருகிறது. பயணியர் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை உள்ளடக்கிய ஆட்டோமோட்டிவ் துறையுடன் சேர்த்து கட்டுமானப்பணி, வேளாண் இயந்திரம், காற்றாலை மின்சக்தி, மெரைன் புரோபல்சன், ரெய்ல் டிரைவ்கள் மற்றும் பரிசோதனை அமைப்புகள் போன்ற சந்தைப்பிரிவுகளுக்கும் ZF சேவையாற்றி வருகிறது.
உலகளவில் ஏறக்குறைய 168,700 பணியாளர்களோடு இயங்கும் ZF, 2023 நிதியாண்டில் €46.6 பில்லியன் என்ற விற்பனை அளவை பதிவு செய்திருக்கிறது. 31 நாடுகளில், 162 உற்பத்தி தொழிலகங்களை இந்நிறுவனம் நடத்தி வருகிறது.