SACAS Hosts HR Conclave 2.0: A Landmark Event in Career Development
On Feb 22, 2025, The Career Development Cell of S. A. College of Arts & Science (SACAS) successfully organized HR Conclave 2.0 on February 21st and 22nd, 2025. Held on campus, the event brought together over 20 HR professionals and industry leaders from top multinational corporations (MNCs) for an engaging panel discussion.
This conclave marked a significant milestone in SACAS history, providing students with invaluable industry insights and career guidance. The discussions were structured into four specialized sessions, catering to various academic disciplines:
Session 1: Visual Communication, English & Management
Session 2: Nutrition & Psychology
Session 3: Computer Science & Artificial Intelligence
Session 4: Commerce
The event served as a platform for students to interact with experts, understand industry expectations, and enhance their career prospects. Participants gained firsthand knowledge of emerging trends in HR, technology, and business, making the conclave an enriching learning experience.
SACAS remains committed to bridging the gap between academia and industry, ensuring students are well-equipped for the dynamic corporate world. HR Conclave 2.0 was yet another testament to the institution’s dedication to excellence in education and career development.
*எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித வள மாநாடு 2.0*
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில் மேம்பாட்டுப் பிரிவு, 'வளாகத்தில் இருந்து பெரு நிறுவனத்திற்கு - மனித வள மாநாடு 2.0'வை பிப்ரவரி 21, மற்றும் 22, 2025 ஆகிய இரு நாட்களில் கல்லூரிக் கலையரங்கில் நடத்தி, ஒரு புதிய சகாப்தத்தை அரங்கேற்றியது. மாணவர்கள் வேலைவாய்ப்பின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளுவதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட மனித வள நிபுணர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒருங்கிணைத்தது இம்மாநாட்டின் சிறப்பம்சம்.
மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற தொழில்துறை நுண்ணறிவு மற்றும் தொழில் வழிகாட்டுதலை வழங்கியது. கலந்துரையாடல்கள் நான்கு சிறப்பு அமர்வுகளாக அமைந்திருந்தன. முதல் அமர்வில் காட்சித் தொடர்பியல் துறை, ஆங்கிலத்துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் அமர்வில் ஊட்டச்சத்து மற்றும் உணவு மேலாண்மைத் துறை, உளவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். மூன்றாம் அமர்வு கணினி அறிவியல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. நான்காம் அமர்வு வணிகவியல் துறை மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மனிதவள நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளவும், தொழில்துறை எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தவும் ஒரு தளமாக அமைந்தது. பங்கேற்பாளர்கள் மனித வளம், தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய நேரடி அறிவையும், வளமான கற்றல் அனுபவத்தையும் பெற்றனர்.
கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் கல்லூரியின் நிலைப்பாட்டை மாநாடு எடுத்துரைத்தது. 'வளாகத்தில் இருந்து பெரு நிறுவனத்திற்கு - மனிதவள மாநாடு 2.0', கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு . உணர்வை சிறப்பாக விளக்குகிறது.