Saturday, January 25, 2025

ஆஸ்கார் விருதுக்காக இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு படத்தை சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டார்

ஆஸ்கார் விருதுக்காக இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு படத்தை சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டார்

ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், பாஜகவை சேர்ந்த  நடிகர் கோபி காந்தி ஆஸ்கார் விருதுக்காக தயாரித்து, இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு பட வெளியிட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இவ்விழாவில் "டொனேட்" விழிப்புணர்வு படத்தை நடிகர் கோபி காந்தி வெளியிட்டார். 

இது குறித்து படத்தின் இயக்குனர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஒரு பிச்சைக்காரனுக்கும் பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக படத்தை உருவாக்கியுள்ளேன்.  பிச்சைக்கார கதாபத்திரத்தில் முனிதேவன் என்கிற புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளேன். மேலும் விஜய் முருகன், திவ்யா, எம்.ஆர்.எம், பிரதாப் சிங், ஜெ.கே, சி.எம்,  உள்ளிட்ட புதுமுக கலைஞர்களுடன் ஸ்ரீவாணிஸ்ரீ, சுஜித், கோகுல்ராஜ், மணிகண்டன் போன்ற குழந்தை நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன். ஒளிப்பதிவாளராக குமரன் ஜி, படத் தொகுப்பாளராக ராம்நாத், இசையமைப்பாளரக கோபால் கிருஷ்ணன் ஆகியோர்கள் பணிபுரிந்து உள்ளனர். மேலும் பல்வேறு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். விருதுக்காக மட்டுமே இப்படத்தை இயக்கியுள்ளேன். அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். "டொனேட்" படம் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 97வது ஆஸ்கார் விருது போட்டி தேர்வுக்கு அனுப்பியுள்ளேன். மேலும் நார்வே, கேன்ஸ், பிரான்ஸ், பெர்லின்  உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு விழிப்புணர்வு படத்திற்கான விருது பிரிவின் கீழ் "டொனேட்" படத்தை அனுப்பி வைக்கப்பட உள்ளேன். இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி கூறினார். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.


https://youtu.be/oRNtsM-rErE?si=GDGJ8aF3zO-A49ZE