Tuesday, December 3, 2024

Zomaland Season5 க்கான பெயரிடுகின்ற உரிமைகளை RuPay பெறுகிறது

Zomaland Season5 க்கான பெயரிடுகின்ற உரிமைகளை RuPay பெறுகிறது

சர்வதேச மற்றும் தேசிய சமையல் வல்லுனர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மெனுக்கள், புதிய டிக்கெட் வகைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய RuPay Zomaland Season5, ஏழு நகரங்களுக்கு பயணிக்கிறது


RuPay கார்டுதாரர்கள் நவம்பர் 29, 2024 அன்று மதியம் 12 மணி முதல் டிசம்பர் 4, 2024 அன்று மதியம் 12 மணி வரை முன்விற்பனை டிக்கெட்டுகளை District செயலியில் பிரத்தியேகமாக அணுகலாம்

சென்னை, நவம்பர் 28, 2024: இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உணவு மற்றும் பொழுதுபோக்கு திருவிழாக்களில் ஒன்றான RuPay Zomaland இன் ஐந்தாவது சீசனை Zomato Live அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு, உணவு, நேரலை பொழுதுபோக்கு, இசை மற்றும் விளையாட்டுக்கள் ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒன்றாகக் கொண்டுவருகிறது. Zomaland இன் முழு கட்டமைப்பிலும் ஒரு தனித்துவமான ஒத்துழைப்பைக் குறிக்கின்ற வகையில் அதன் பெயரை முழுமையாக ஒருங்கிணைத்த முதல் கூட்டாளர் RuPay ஆகும்.

ஒருங்கிணைந்த லோகோ யூனிட்டின் (Integrated Logo Unit (ILU) ஒரு பகுதியாக, Zomaland இன் இந்தப் பதிப்பில் புத்தாக்கம் மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டின் அர்ப்பணிப்பைக் காட்டுகினற RuPay-பிரத்தியேக மண்டலங்கள் மற்றும் பாதைகள் இடம்பெறும். இந்த கூட்டாண்மை RuPay ஐ ஒரு இளம், உற்சாகமான பார்வையாளர்களுடன் நேரடியாக இணைக்க அனுமதிக்கிறது மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறை தேர்வுகளை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

இந்த சீசனில், RuPay Zomaland ஜனவரி 18, 2025 அன்று டெல்லியில் தொடங்கும், மேலும் மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் உட்பட இந்தியா முழுவதும் ஏழு நகரங்களுக்கு பயணிக்கும். உணவு, பொழுதுபோக்கு, இசை மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையுடன் ஒரு மறக்க முடியாத அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

இந்த கூட்டாண்மை குறித்து பேசிய NPCI இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ரமேஷ் யாதவ், “புதுமை மற்றும் ஆழ்ந்த 


அனுபவங்களின் ஒரு கலவையை உறுதியளிக்கும் Zomaland இன் ஐந்தாவது சீசனுக்காக Zomato உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். RuPay-பிரத்தியேக மண்டலங்கள், எக்ஸ்பிரஸ் லேன்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் அனுபவங்கள் ஆகியவற்றுடன் நுகர்வோர் ஈடுபாட்டை மாற்றியமைக்க இது எங்களை அனுமதிக்கிறது. டிஜிட்டல் ஆர்வமுள்ள மற்றும் சமூக ஈடுபாடு கொண்ட பயனர்களுடன் இணைக்க ஒவ்வொரு தொடர்பு இடத்தையும் மாற்றியமைக்கின்றதில் நாங்கள் நம்புகிறோம். மறக்க முடியாத தருணங்களுடன் RuPay ஐ ஒத்ததாக மாற்றுவதற்கும் கார்டுதாரர்களுக்கு நல்ல வாழ்க்கை முறை தேர்வுகளை செயல்படுத்துவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை உறுதிப்படுத்துகிறது."என்று கூறினார். 

Zomaland Season 5 பற்றி கருத்து தெரிவித்த Zomato Live இன் தலைமை செயல் இயக்குனர் Zenah Vilcassim, "Zomaland இன் ஐந்து நம்பமுடியாத ஆண்டுகளைக் குறிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு திருவிழா மட்டுமல்ல, இது இந்தியாவின் பல்வேறு உணவு பாரம்பரியத்தின் ஒரு கொண்டாட்டமாகவும் மற்றும் நமது நவீன கலாச்சாரத்திற்கு இது எவ்வளவு ஒருங்கிணைந்ததாகவும் இருக்கிறது. நான்காவது சீசனின் வெற்றி ஒரு புதிய தரநிலையை அமைத்துள்ளது, மேலும் இந்த சீசனில் என்ன வரப்போகிறது என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்த சீசனில், நாட்டில் உள்ள சில அற்புதமான உணவகங்களால் வழங்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு ருசிகள், புதிய டிக்கெட் வகைகள் ஆகியவற்றுடன் மற்றும் ஒரு முக்கிய அரங்கம் மற்றும் புத்தம் புதிய கருத்தரங்கம் ஆகிய இரண்டின் பிரீமியம் அனுபவங்களை வழங்குகின்ற வகையில் நாங்கள் பெரியதாகவும் தைரியமாகவும் முன்னேறி இருக்கிறோம். பிரத்தியேகமான உண்ணும் அனுபவங்கள் முதல் பரவசமூட்டும் பொழுதுபோக்கு வரை, RuPay Zomaland Season 5, உணவு மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருக்கும். இந்த சீசனில் அனைவருடனும் ‘Feast Mode On’ செய்ய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்!”என்று கூறினார்.

மாஸ்டர் கிளாஸ்கள் மூலம் இந்திய அரங்கிற்கு தங்கள் உலகளாவிய நிபுணத்துவத்தை கொண்டு வருகின்ற பல்வேறு சமையல் நிபுணர்களை RuPay Zomaland Season 5 வழங்கும். அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு ஒரு உண்மையிலேயே தனித்துவமான மற்றும் மறக்க முடியாத உணவு அனுபவத்தை வழங்குவார்கள். திருவிழா அனுபவத்தை மேலும் உயர்த்துகின்ற வகையில், சுவை மொட்டுக்களை மகிழ்விப்பதற்கும் மற்றும் திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கான 


தனிப்பயனாக்கப்பட்ட மெனுக்களுடன் சிறந்த இந்திய மற்றும் சர்வதேச உணவு வகைகளைக் காண்பிப்பதற்கும், Zomaland, சிறந்த, உயர் தேர்வு மற்றும் புகழ்பெற்ற உணவகக் கூட்டாளர்களை இடம்பெறச்செய்யும்.

இந்த திருவிழாவிற்கான டிக்கெட்டுகளின் முன்விற்பனையானது   நவம்பர் 29, 2024 அன்று மதியம் 12.00 மணி முதல் டிசம்பர் 4, 2024 அன்று மதியம் 12 மணி வரை District செயலியில் RuPay கார்டுதாரர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கும்.

இதைத் தொடர்ந்து, டிக்கெட்டுகள் பொது வாங்குதலுக்கு டிசம்பர் 4, 2024 அன்று மதியம் 12 மணி முதல் District செயலியில் கிடைக்கும்.

District செயலியை இப்போது பதிவிறக்கவும்!

திருவிழா அட்டவணை:

ஜனவரி 18 & 19 -புது டெல்லி

பிப்ரவரி 1 & 2 - புனே

பிப்ரவரி 15 & 16 - மும்பை

பிப்ரவரி 22 & 23 -ஜெய்ப்பூர்

மார்ச் 1 & 2 - கொல்கத்தா

மார்ச் 15 & 16 - பெங்களூரு

மார்ச் 22 & 23 -இந்தூர்

NPCI பற்றி:

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) 2008 இல், இந்தியாவில், சில்லறை செலுத்துதல்கள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஒரு பரந்த அமைப்பாக இணைக்கப்பட்டது. NPCI   ஆனது நாட்டில் ஒரு வலுவான பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ரூபே கார்டு, இமீடியட் பேமென்ட் சர்விஸ் (IMPS), யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), பாரத்  இன்டெர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM), ஆதார் மூலம் செயல்படுத்தப்பட்ட செலுத்துதல் அமைப்பு(AePS) , நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (NETC Fastag)  மற்றும் Bharat BillPay. போன்ற சில்லறை செலுத்துதல் தயாரிப்புகளின் ஒரு தொகுப்பு மூலம் இந்தியாவில் பணம் செலுத்தும் முறையை இது மாற்றியுள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில்லறை செலுத்துதல் முறைகளில் புதுமைகளைக் கொண்டுவருவதில் NPCI கவனம் செலுத்துகிறது மற்றும் இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கு இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு 


முழுமையான டிஜிட்டல் சமூகமாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் அவாவை  மேம்படுத்தும் வகையில், குறைந்த செலவில் நாடு தழுவிய அணுகல்தன்மையுடன் பாதுகாப்பான செலுத்துதல் தீர்வுகளை இது எளிதாக்குகின்றது.

மேலும் தகவலுக்கு, https://www.npci.org.in/ இணையதளத்தைப் பார்க்கவும்