Pantomath இன் பாரத் வேல்யூ ஃபண்ட், INR 2350 மில்லியனை சிறுபான்மை பங்குகளுக்காக ஹல்டிராம் புஜியாவாலா நிறுவனத்தில் முதலீடு செய்கிறது
நவம்பர் 08, 2024, சென்னை : கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட், சிறுபான்மை பங்குகளுக்காக இந்த நிறுவனத்தில் INR 2350 மில்லியன் ஐ Pantomath இன் பாரத் வேல்யூ ஃபண்ட்(BVF) முதலீடு செய்துள்ளதுடன் அதன் தனியார் ஒதுக்கீட்டுப் பங்களிப்பு சுற்று வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்துள்ளது. ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட் தனது தயாரிப்புகளை "பிரபுஜி" என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான திண்பண்டங்கள் சந்தை, நிதியாண்டு 24 இல் INR 426 பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது நிதியாண்டு 32 க்குள் ஒரு 11% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) பதிவுசெய்கின்ற ~ INR 955 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தையில் ஒரு கணிசமான சந்தைப் பங்கை அனுபவிக்கிற ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள், இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரம், வசதி மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு ஒரு வலுவான அர்ப்பணிப்புடன் இணைந்த, தயாரிப்பு பல்வகைப்படுத்தலில் அவர்களின் தொடர்ச்சியான கவனம், எதிர்கால விரிவாக்கத்திற்கு அவர்களை நிலைநிறுத்தும்.
ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தின்பண்டங்கள் மற்றும் காரச் சுவையுண்டி தொழிலில் ஒரு வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை "பிரபுஜி" என்ற பிராண்ட் பெயரில் 100 க்கும் அதிகமான SKU களுடன் வெளிநாட்டு தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது, இது மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விரைவான சேவை உணவகங்களை நடத்துகிறதைத் தவிர வலுவான பிராண்ட் அங்கீகாரத்தை, குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய சந்தைகளில் பெறுகிறது. இந்த நவீன பிராண்ட் ஆன 'பிரபுஜி' என்பது இந்த நிறுவனத்தின் புது-யுக சந்தைப்படுத்தல் உத்தியால் ஆதரிக்கப்படும் சலசலப்பை ஏற்படுத்தும் வார்த்தையாக மாறியுள்ளது. பாலிவுட் பழம்பெரும் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பிராண்ட் அம்பாசிடர்களாக உள்ளனர்.
ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட் அதன் சில்லறை வணிகம் அதோடுகூட விநியோக வணிகத்தின் ஒரு சக்திவாய்ந்த கலவையைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம், நாடு முழுவதும் 200,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கு சேவை செய்கின்ற சுமார் 2000 விநியோகஸ்தர்களின் விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ளது. நிறுவனம் அதன் நேரடி நுகர்வோர் அணுகலை உருவாக்குகின்ற 19 சில்லறை விற்பனை நிலையங்களையும் 60 ஃபிரான்சைஸ் கடைகளையும் நடத்துகிறது. தற்போது, நிறுவனத்தின் சந்தைகளில் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு பகுதிகள் அடங்கும். இந்த நிறுவனம் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய சந்தைகளுக்கு வெளியே அதன் உற்பத்தி மற்றும் சந்தைகளை விரிவுபடுத்த இந்த நிதியைப் பயன்படுத்தும். ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட், ஆண்டுக்கு 6,035 மெட்ரிக் டன் (MTPA) ஒரு கூட்டுத்திறன் கொண்ட மூன்று உற்பத்தி வசதிகளை இயக்குகிறது.
இந்த நிகழ்வு குறித்து பேசிய ஹல்டிராம் பூஜியாவாலா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. மணீஷ் அகர்வால், “கடந்த 60 க்கும் அதிகமான ஆண்டுகளில், நாங்கள் சுவையான தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளை வழங்குவதன் மூலம் ஒரு விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் நிறுவனம் இந்தியாவின் உணவுப் பழக்கம் மற்றும் சுவைகளில் புரட்சியை ஏற்படுத்தி, ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது."என்றார்.
"BVF இன் ஆதரவுடன் இணைந்து எங்கள் தொழில்துறை நுண்ணறிவுகளை பயன்படுத்துவதன் மூலம், பங்குதாரர் மதிப்பை அதிகரிக்கவும் வளர்ச்சியை தூண்டவும் நாங்கள் மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளோம். இந்த கூட்டாண்மையானது, அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை உறுதி செய்கின்ற நீண்டகால பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது, " என்று திரு மணீஷ் அகர்வால் மேலும் கூறினார்.
ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட் நிறுவனத்தில் தனது முதலீடுகள் பற்றி பாரத் வேல்யூ ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி திருமதி மதுலுனாவத் கூறுகையில் "ஹல்டிராம் புஜியாவாலா லிமிடெட் நிறுவனத்துடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 1958 இல் ஒரு தனிஉரிமையாக நிறுவப்பட்டதிலிருந்து ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக சந்தை
நுண்ணறிவுடன் இந்த நிறுவனம், நுகர்வோர் நடத்தை மற்றும் சந்தை போக்குகள் பற்றிய ஒரு ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது. இந்த நவீன பிராண்டான ‘பிரபுஜி’ மீது புதிய தலைமுறையின் கூர்மையான கவனம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. உணவு, FMCG மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம், மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை அடைய ஹல்டிராம் சிறந்த நிலையில் உள்ளது."என்று கூறினார்.
நடுத்தர சந்தைத் துறையில் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றான BVF, நீண்ட கால வெற்றியை ஊக்குவிப்பதற்கு இலாபகரமான, வளர்ச்சி-நிலை நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது. ஹல்டிராம் நிறுவனத்தில் செய்யப்பட்ட இந்த முதலீடு கடந்த 3 மாதங்களுக்குள் BVF இன் 6வது ஒட்டுமொத்த முதலீடு மற்றும் நுகர்வோர் சந்தையில் 3வது முதலீட்டைக் குறிக்கிறது. கடந்த மாதத்தின் தொடக்கத்தில், BVF மற்றவைகளுடன், ஒரு தனிப்பட்ட சுகாதார பிராண்டான BumTum (மில்லேனியம் பேபிகேர் லிமிடெட்) மற்றும் நுகர்வோர் உபகரண பொருட்கள் நிறுவனமான அனிகேட் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தது.
Pantomath பாரத் வேல்யூ ஃபண்ட் பற்றி:
Pantomath கேபிடல் மேனேஜ்மென்ட், அதன் இந்தியா இன்ஃப்ளெக்ஷன் ஆப்பர்சூனிட்டி டிரஸ்ட் (IIOT) மூலம், அதன் இரண்டாவது மாற்று முதலீட்டு நிதியான (AIF) பாரத் வேல்யூ ஃபண்ட் (BVF) ஐ ஏப்ரல் 2024 இல் அறிமுகப்படுத்தியது. Pantomath குழுமத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியும் இணை நிறுவனருமான மதுலுனாவத் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிதியத்தின் முதலீட்டு உத்தியானது, இறக்குமதி மாற்றீடு, ஏற்றுமதி ஆதரவு மற்றும் கிராமப்புற நுகர்வு ஆகியவற்றில் ஒரு கவனம் செலுத்துதலுடன், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது" என்ற நெறிமுறைகளை உள்ளடக்கிய வணிகங்களை மையமாகக் கொண்டுள்ளது.