Friday, October 11, 2024

மல்டி-சிட்டி MSME கான்க்ளேவ் நடத்தும் டிரான்ஸ்யூனியன் சிபில் ; சென்னையில் நடந்த ‘இந்தியாவை மேம்படுத்த கடனை சாத்தியாக்கும் கருத்தரங்கு

மல்டி-சிட்டி MSME கான்க்ளேவ் நடத்தும் டிரான்ஸ்யூனியன் சிபில் ; சென்னையில் நடந்த ‘இந்தியாவை மேம்படுத்த கடனை சாத்தியாக்கும்  கருத்தரங்கு

சென்னை, 9 அக்டோபர் 2024: 2030 ஆம் ஆண்டுக்குள் 7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகரும் நிலையில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கு தடையின்றி கடன் விநியோகமாவது மிக அவசியமான ஒன்று. இந்த வணிகக் கடன் வழங்கப்படும் நோக்கத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) நிறுவனம் இன்று சென்னையில் மல்டி-சிட்டி  ‘MSME கான்க்ளேவ்: இந்தியாவை மேம்படுத்த கிரெடிட்டை சாத்தியமாக்கல்’ எனும் கருப்பொருளுடன் கருத்தரங்கை நடத்தியது. 

டிரான்ஸ்யூனியன் சிபில் நடத்திய பிரம்மாண்டமான MSME மாநாடானது, வேலைவாய்ப்பை உருவாக்குதல், பிராந்திய வளர்ச்சியை ஊக்குவித்தல், வருமான இடைவெளியைக் குறைத்தல் மற்றும் புதுமை & தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் MSME துறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதோடு, MSME கடன் போர்ட்ஃபோலியோ வளர்ச்சியை உறுதி செய்யும் அதே வேளையில் MSME களுக்கான நிதி தேவையை செயல்படுத்துவதற்கான தகவல் மற்றும் பகுப்பாய்வு தீர்வுகள் பற்றிய நுண்ணறிவு மற்றும் ஆழமான புரிதலுடன் நாடு முழுவதும் உள்ள MSME கடன் வழங்குபவர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாநிலத்திலுள்ள வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இந்த மெகா  மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் MSME கடன் வழங்குவதில் தனியார் துறை வங்கிகள் முன்னிலை 

கடந்த 2024 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டின் அடிப்படையில்,  மொத்தக் கடனில் 51% பங்கைக் கொண்டு, தனியார் துறை வங்கிகள் தமிழ்நாட்டின் MSMEக்களுக்கான மிகப்பெரிய கடன் வழங்குநராக இருக்கின்றன. பெரும்பாலான கடன்களில் உற்பத்தித் துறைக்கு 37% வழங்கப்பட்டுள்ளன, மாநிலத்தில் வழங்கப்பட்ட மொத்த MSME கடன்களில் தங்கக் கடன்கள் 29% ஆகும்.  அதோடு, சொத்து சார்ந்த கடன்களானது குறைந்த இடர் பிரிவுக்கான கடன்களின் பங்கானது சிபில் MSME தரவரிசை (CMR) 1-3 எனும் வீதத்துடன் 49% ஆக உயர்ந்துள்ளது. 

சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் MSME கடன் வழங்குதல் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி,    சென்னை 41%, திருப்பூர் 62%, கோவை 69%, மதுரை 57% எனும் வீதத்துடன் தனியார் வங்கிகளில் MSMEக்களுக்கு கடன் வழங்குவதில் அதிகப் பங்கைப் பெறும் நகரங்களாக இந்த நான்கு நகரங்களிலும் பார்க்கப்படுகிறது. 

CIBIL MSME தரவரிசை மற்றும் வணிக கடன் அறிக்கை

CIBIL MSME தரவரிசை மற்றும் வணிகக் கடன் அறிக்கை ஆனது MSME துறைக்கான கடன் ஓட்டத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆபத்துக் கொள்கைகளை உருவாக்குதல், விரைவான மற்றும் எளிதான அனுமதி மற்றும் கடன்களை வழங்குதல் மற்றும் நியாயமான போர்ட்ஃபோலியோ நிர்வாகத்தை உறுதி செய்வதில் அவை கடன் நிறுவனங்களுக்கு உதவுகின்றன.

வணிகக் கடன் அறிக்கையில் MSME இன் கடன் வரலாறு பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன, இதில் கடன் வசதிகளின் தன்மை மற்றும் அளவு, திருப்பிச் செலுத்தும் முறைகள் மற்றும் தற்போதைய கடமைகள் ஆகியவை அடங்கும். பணம் செலுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்படுவதையும் இது எடுத்துக்காட்டிவிடும்.  இந்த அறிக்கை  ஆனது கடன் நிறுவனங்களுக்கு நிறுவனத்தின் கடன் நடத்தை பற்றிய தெளிவான படத்தை வழங்குகிறது, கடன் அபாயத்தை மதிப்பிட உதவுகிறது.

சிபில் MSME தரவரிசை 10 முதல் 1 வரை மதிப்பிடப்படுகிறது. இதில்,  1 எனும் மதிப்பு மிகச்சிறந்த தரவரிசையாகும்.  இது MSMEகளின் கடன் தகவல் அறிக்கையின் ஒற்றை எண் சுருக்கத்தை வழங்குகிறது, வணிகத்தின் கடன் வரலாறு மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் நடத்தை ஆகியவற்றை பொருத்து மதிப்பிடப்படப்படுகிறது.  50 கோடி வரையிலான தற்போதைய கடன் வெளிப்பாடு உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த ரேங்க் கிடைக்கும்.

இந்திய வணிகங்களுக்கு கடன் வழங்குவதற்காக, MSME கடன் பிரிவுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, TransUnion CIBIL ஆனது இந்தியா முழுவதும் இந்த MSME மாநாட்டின் தொடர்ந்து நடத்தும்.