Friday, September 27, 2024

Gen Z மற்றும் மில்லெனியல்கள் இன்சூரன்ஸ் விற்பனையின் 85% ஐ உருவாக்குகிறார்கள் என்ற கூட்டாளர் புள்ளிவிவரங்களை Turtlemint வெளிப்படுத்துகிறது

Gen Z மற்றும் மில்லெனியல்கள் இன்சூரன்ஸ் விற்பனையின் 85% ஐ உருவாக்குகிறார்கள் என்ற கூட்டாளர் புள்ளிவிவரங்களை Turtlemint வெளிப்படுத்துகிறது

காப்பீட்டு சந்தையை மாற்றுவதில் இளைய தலைமுறையினர் முன்னணி வகிக்கின்றனர்

சென்னை, 25 September: ஒரு முன்னணி காப்பீட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான Turtlemint, காப்பீட்டு ஆலோசனை துறையில் இளைய தலைமுறையினரின் அதிகரித்து வரும் செல்வாக்கை முக்கியப்படுத்திக்காட்டுகின்ற 3.5 லட்சத்திற்கும் அதிகமான உரிமம் பெற்ற காப்பீட்டு ஆலோசகர்களைக் கொண்ட அதன் விரிவான நெட்வொர்க்கின் புள்ளிவிவரங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியது. மொத்த விற்பனையில் ஏறத்தாழ 85% ஜென் Z (1997க்குப் பிறகு பிறந்தவர்) மற்றும் மில்லெனியல்கள் (1981க்குப் பிறகு பிறந்தவர்) ஆகியோரால் உருவாக்கப்படுகிறதன் மூலம் Turtlemint நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் பிரீமியங்களில்  ₹2,000 கோடிக்கு மேல் செயல்படுத்தி, அதன் சந்தை வலிமையை தொடர்ந்து நிரூபிக்கிறது. இந்த வெற்றியானது, இந்த தொழில்நுட்ப ஆர்வமுள்ள ஆலோசகர்களின் பங்களிப்பை மட்டுமல்ல, அதன் நெட்வொர்க் முழுவதும் பலதரப்பட்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஈர்க்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் நிறுவனத்தின் திறனையும் பிரதிபலிக்கிறது.

இந்த ஆலோசகர்களின் சேர்க்கையானது, எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், காப்பீட்டு ஊடுருவலை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அதிக நாட்டம் கொண்டதாகவும் உள்ளது.Turtlemint இன் தரவுகளின்படி,  தொலைதூர மற்றும் குறைந்த சேவை செய்யப்பட பகுதிகளில் காப்பீட்டை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான டிஜிட்டல்-முதல் அணுகுமுறைகளைக் குறிக்கின்ற வகையில் அவர்களின் மொத்த ஜென் Z கூட்டாளர்களில் 78% பேர் மற்றும் மில்லெனியல் கூட்டாளர்களில் 74% பேர் தங்கள் வணிகத்தின் பெரும்பகுதியை ஆன்லைனில் நடத்துகின்றனர். 

தமிழ்நாட்டில் Turtlemint இன் உரிமம் பெற்ற ஆலோசகர்களில் 77.3% பேர் Gen Z மற்றும் மில்லெனியல்கள் ஆவர், இது காப்பீட்டு ஆலோசனையில் முன்னணி வகிக்கும் இளைய தொழில் வல்லுநர்களின் ஒரு வலுவான இருப்பை எடுத்துக்காட்டுகிறது.

மேம்பட்ட டிஜிட்டல் தளங்களை வழங்கும் புதிய InsurTechகளின் இந்த எழுச்சியானது, காப்பீட்டை அவர்களுக்கு ஒரு பெருகிய முறையில் கவர்ச்சிகரமான மற்றும் ஆற்றல்மிக்க வாய்ப்பாக அமைக்கின்ற வகையில் இந்த புதிய ஆலோசகர்களின் நுழைவை மேலும் எளிதாக்குகிறது.  இந்தத் தொழில் வல்லுநர்கள் நீண்ட கால தொழில் வாழ்க்கைத் துறையில் தொடர்ந்து இருக்கத் தயாராக இருக்கின்றபடியால், திறமையானவர்களை முன்கூட்டியே ஈர்ப்பதன் மூலம், இந்த துறை நீண்ட கால ஈடுபாட்டிலிருந்து தொழில் பலன்களைப் பெறுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த Turtlemint நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரேந்திர மஹ்யவன்ஷி, “ஜென் Z மற்றும் மில்லினியல்ஸ் மூலம் செய்யப்பட்ட விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாங்கள் காண்கிறோம். காப்பீட்டுத் துறையில் டிஜிட்டல் மாற்றம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் தரவு வலியுறுத்துகிறது, மேலும் எங்கள் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் இன்னும் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம்."என்று கூறினார்.

தொழில்துறை கண்ணோட்டத்தில் ஒரு மாற்றம்

ஒரு மிகவும் திறமையான ஆலோசகர்களின் தலைமுறையின் இந்த வளர்ந்து வரும் இருப்பு, காப்பீடு உணரப்பட்ட முறையையும் மாற்றுகிறது. பாரம்பரியமாக ஒரு கடினமான மற்றும் குறைவான ஈடுபாடு கொண்ட தொழிலாகக் கருதப்படுகிற  காப்பீடு இப்போது ஒரு ஆற்றல்மிக்க மற்றும் அத்தியாவசியமான நிதிக் கருவியாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைமுறையின் டிஜிட்டல் திறன் விற்பனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மறுவரையறையும் செய்கிறது. இந்த பரிணாமம் காப்பீட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை முக்கியப்படுத்திக் காட்டுகிறது, இது தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்-முதல் அணுகுமுறையால் இயக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது.

Turtlemint இன் கவனமானது, அவர்களின் செயலியான TurtlemintPro மூலம் அதிநவீன டிஜிட்டல் கருவிகள், பயிற்சி & சான்றளிப்பு மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை வழங்குகின்றதன் மூலம் அதன் பல்வேறு விநியோகக் கூட்டாளர்களை ஆதரிப்பதில் தொடர்ந்து இருக்கிறது. Gen Z மற்றும் மில்லெனியல்கள் இப்போது முக்கிய மாநிலங்களில் முன்னணி வகிப்பதால், புதிய திறமையாளர்கள் இந்த தொழில்துறையில் நுழைவதற்கும், இந்த தளத்தால் வழங்கப்படுகின்ற இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் இதுவே சரியான தருணம் ஆகும்.


About Turtlemint


Founded in 2015 by Dhirendra Mahyavanshi & Anand Prabhudesai, Turtlemint is a leading insurtech platform that transforms the way insurance advisors serve their clients. The platform helps financial advisors instantly match each customer with a suite of products that is best suited for their unique needs, through a digital solution thereby removing the hassles of paperwork. Turtlemint’s vision is to bridge the insurance gap by creating a transparent, accessible, and user-friendly insurance buying experience. With over 3.2 lakh advisors across 17,000+ pin codes in India, Turtlemint boasts the country's most extensive insurance advisor network. They aim to empower 1 million financial advisors and become a driving force in increasing insurance penetration. Providing advisors with the digital tools, training, and knowledge resources they need to thrive. Turtlemint’s platform empowers advisors to grow their business and achieve success. Turtlemint has approximately 4 million customers and the have sold over 1 crore policies till date.