வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் தலைமையிலான தொடர் E நிதியளிப்பில் ராபிடோ நிறுவனம் $200 மில்லியன் திரட்டுகிறது
சமீபத்திய நிதியளிப்பு சுற்று, ராபிடோ இன் மதிப்பை $1.1 பில்லியனுக்கு மேல் உயர்த்தியது.
விரிவாக்கத்தை விரைவுபடுத்தவும், நகர்ப்புற இயக்கத்தில் ராபிடோ நிறுவனத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும் முதலீடு.
GMV கடந்த ஆண்டில் 2.5 மடங்கு உயர்ந்துள்ளதன் மூலம், முதலீடு வலுவான பயனர் வளர்ச்சியைத் தொடர்கிறது, இப்போது 2.5 மில்லியன் தினசரி சவாரிகளை எட்டுகின்றது.
சென்னை , செப்டம்பர் 4, 2024: இந்தியாவின் மிகப்பெரிய சவாரி-பகிர்வு தளமான ராபிடோ, அதன் தொடர் E நிதியளிப்பில் ~$200 மில்லியன் அளவிற்கு பங்களிப்புகளை பெற்றுள்ளது, இது நாடு முழுவதும், பகிரப்பட்ட போக்குவரத்தில் புரட்சி ஏற்படுத்துவதற்கான அதன் பணியில், ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது.
இந்தியாவில் முதலீடுகளில் கவனம் செலுத்தும் ஒரு முக்கிய முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல், இந்த தொடர் E நிதியளிப்பு சுற்றுக்கு தலைமை தாங்கியது. புதிய முதலீட்டாளர்களான திங்க் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் இன்வஸ் ஆபர்ச்சூனிட்டிஸ் ஆகியவற்றுடன், தற்போதைய முதலீட்டாளர் நெக்ஸஸ் நிறுவனத்தின் பங்கேற்பையும் இந்தச் சுற்று கண்டது. இந்த சமீபத்திய முதலீடு ராபிடோ இன் நிதிப் பரிவர்த்தனைக்குப் பிந்தைய மதிப்பீட்டை $1.1 பில்லியனாக உயர்த்தி, நகர்ப்புற போக்குவரத்துத் துறையில் அதன் வலுவான நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்த நிதியளிப்பு குறித்து ராபிடோ இன் இணை நிறுவனர் அரவிந்த்சங்கா பேசுகையில், “இந்த புதிய மூலதனத்தின் உட்செலுத்துதல் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்கின்ற வகையில், எங்கள் வழங்கல்களை ஆராயவும் மற்றும் விரிவுபடுத்தவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கடந்த ஆண்டில், எங்களின் தினசரி சவாரிகள் 2.5 மில்லியனாக உயர்ந்ததன் மூலம், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்துள்ளோம். இந்த முதலீடு மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும், அனைவருக்கும் நகர்ப்புற போக்குவரத்தை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்யவும் அனுமதிக்கின்ற வகையில் எங்கள் சேவைகளை தொடர்ந்து புதுமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் அளிக்கும்."என்றார்.
வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாகக் கூட்டாளருமான சுமிர் சதா கூறுகையில், "ராபிடோ வில் தொடக்க முதலீடு செய்யப்பட்டதில் இருந்து ஐந்து ஆண்டுகளில், அரவிந்த், பவன், ரிஷிகேஷ் மற்றும் குழுவினர் அதை இந்தியாவின் முன்னணி, குறைந்த விலை போக்குவரத்து தளமாக மாற்றியதை நாங்கள் கண்டோம். ஆதிக்கம் செலுத்தும் பைக் டாக்சிகள் முதல் 3 சக்கர ஆட்டோக்கள் மற்றும் கேப்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்தது வரை, அவர்களின் வளர்ச்சியானது அவர்களின் செயல்பாட்டு முனைவு மற்றும் வாடிக்கையாளர் மற்றும் கேப்டன் திருப்தியில் இடைவிடாத கவனம் ஆகியவற்றிற்கான ஒரு சாட்சியாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நுகர்வோர் இணையப் பயன்பாடுகளில் ராபிடோ வை நிலைநிறுத்தியுள்ள குழுவின் மூலதன திறமையான உயர் அளவீட்டிற்காக அவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த மிகச் சமீபத்திய நிதியளிப்புச் சுற்று அவர்களின் பயணத்திற்கான எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை முக்கியப்படுத்திக்காட்டுகிறது. "என்றார்.
இந்த புதிதாக திரட்டப்பட்ட நிதியானது, இந்தியா முழுவதும் ராபிடோ இன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்த அதன் தொழில்நுட்ப தளத்தை அளவிடுவதற்கும் மூலோபாய ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். பைக்-டாக்சிகள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டாக்ஸி-கேப்கள் உட்பட அனைத்து வகைகளிலும் தனது செயல்பாடுகளை அதிகரிக்க ராபிடோ திட்டமிட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடங்கப்பட்டதிலிருந்து, 150% க்கும் அதிகமான வருடாந்தர வளர்ச்சியை உந்துவதன் மூலம், ராபிடோ பகிரப்பட்ட போக்குவரத்து துறையில் தனது நிலையை உறுதிப்படுத்துகின்ற வகையில் இந்தியாவில் நுகர்வோர் இணைய இடத்தைப் புத்துயிர் பெறச்செய்துள்ளது. ஆரம்பத்தில் பைக்-டாக்சிகளில் கவனம் செலுத்திய இந்த நிறுவனம், பின்னர் ஆட்டோ மற்றும் கேப் சேவைகளில் பன்முகப்படுத்தப்பட்டு, அதன் மதிப்பு முன்மொழிவை விரிவுபடுத்தியது மேலும் அதன் செயல்பாடுகளை வலுப்படுத்தியது. ராபிடோ, நாடு முழுவதும் உள்ள அடுக்கு 2 மற்றும் 3 நகரங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு முன்னிலை வகிக்கின்ற வகையில் மெட்ரோ நகரங்களுக்கு அப்பால் தனது வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.
ராபிடோ நிறுவனம் பற்றி
ராபிடோ, 100 க்கும் மேற்ப்பட்ட நகரங்களில் தடையற்ற ஆட்டோ, பைக் டாக்ஸி மற்றும் கேப் சேவைகளை வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி பயண செயலியாகும். 2015 இல் நிறுவப்பட்ட ராபிடோ, பைக் டாக்சிகளில் இருந்து ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கேப்களை உள்ளடக்கி அதன் வழங்கல்களை விரைவாக விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் பகிரப்பட்ட போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுயாதீன தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்நிறுவனம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அர்ப்பணிக்கப்பட்ட, ராபிடோ, பகிரப்பட்ட போக்குவரத்து துறையில் பெண்களுக்கான பாதுகாப்பான வாழ்வாதார வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மெட்ரோ மற்றும் அடுக்கு 1 நகரங்களுக்கு அப்பால் தனது சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், ராபிடோ, நாடு முழுவதும் மேலும் அதிகமான மக்களுக்கு நம்பகமான போக்குவரத்தை கொண்டு வருகின்ற வகையில் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் இணைப்புகளை பலப்படுத்தியுள்ளது. இந்த ராபிடோ செயலி, வசதி மற்றும் செலவு-செயல்திறனை உறுதி செய்கின்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றதன் மூலம், பயனர்களுக்கு பைக் டாக்சிகள், ஆட்டோக்கள் மற்றும் கேப்களுக்கான விரைவான, மலிவு விலை அணுகலை வழங்குகிறது.
வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனம் பற்றி
வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனம், இந்தியா மற்றும் மொரிஷியஸில் உள்ள முதலீட்டு நிதிகளில் $7.5 பில்லியன் மூலதனத்தை நிர்வகிக்கின்ற ஒரு அனுபவமிக்க முதலீட்டு நிறுவனமாகும். வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல், நிறுவனங்கள் வெற்றிபெற உதவுவதற்கு அதன் மூலதனம் மற்றும் அனுபவம் இரண்டையும் பயன்படுத்துகிறது. வெஸ்ட்பிரிட்ஜ் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய சில நடுத்தர நிறுவனங்களுடன், அவை பொது அல்லது தனியார் நிறுவனங்களாயிருந்தாலும், நீண்ட காலத்திற்கு கூட்டாளராக இருக்க முயல்கிறது. வெஸ்ட்பிரிட்ஜ் நிறுவனத்தில் உள்ள இந்தக் குழு அவர்களின் தொழில் வாழ்க்கையில், 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடுகளை வழிநடத்தியுள்ளது. இந்த ஏராளமான அனுபவத்துடன் பலப்படுத்தப்பட்ட வெஸ்ட்பிரிட்ஜில் உள்ள இந்தக் குழு உத்தி, செயல்பாடுகள், மேலாண்மை ஆட்சேர்ப்பு மற்றும் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல துறைகளில் அதன் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கு, தேவைப்படும் போது உதவ முடியும்.