Wednesday, August 7, 2024

K.C. மஹிந்திரா எஜூகேஷனல் டிரஸ்ட், மஹிந்திரா ஆல் இந்தியா டேலண்ட் ஸ்காலர்ஷிப்ஸ் 2024 க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது

K.C. மஹிந்திரா எஜூகேஷனல் டிரஸ்ட், மஹிந்திரா ஆல் இந்தியா டேலண்ட் ஸ்காலர்ஷிப்ஸ் 2024 க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது

பின்தங்கிய மாணவர்களுக்கு, அரசு பாலிடெக்னிக்குகளில் டிப்ளமோ படிப்புகளை தொடர உதவித்தொகை

சென்னை ஆகஸ்ட் 07, 2024: K. C. மஹிந்திரா எஜூகேஷனல் டிரஸ்ட் (KCMET) பல்வேறு உதவித்தொகைகளை வழங்குவதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 71 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில், ஒரு வேலை சார்ந்த டிப்ளமோ படிப்பைத் தொடர விரும்பும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஊக்குவிக்கவும், ஆதரவளிக்கவும் KCMET, வருடாந்தர மஹிந்திரா ஆல் இந்தியா டேலண்ட் ஸ்காலர்ஷிப் (MAITS) 2024 க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது . வருடத்திற்கு ரூ. 10,000/- ஆக  ஒரு உதவித்தொகை விருது,  550 மாணவர்களுக்கு, அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வருடந்தோறும் வழங்கப்படுகிறது.

தகுதி பெறுவதற்கு, விண்ணப்பதாரர்,  SSC / HSC அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 60% மதிப்பெண்களுடன் 10/12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர், அரசு அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை அவர்களின் படிப்பின் முதல் வருடத்தில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மஹிந்திரா ஆல் இந்தியா டேலண்ட் ஸ்காலர்ஷிப் (MAITS) பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து www.kcmet.org  இணையத்தளத்தைப் பார்க்கவும். இந்த விண்ணப்பப் படிவம் மற்றும் விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல் - https://maitsscholarship.kcmet.org/ என்ற போர்ட்டலில் கிடைக்கும். இந்த போர்ட்டலில் உள்நுழைய உங்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ID உடன் உங்களைப் பதிவு செய்து கொள்ளவும். ஏதேனும் கேள்விகளுக்கு, தயவுசெய்து maits@mahindra.com முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 11, 2024 ஆகும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதி மற்றும் இடம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

K.C. மஹிந்திரா  எஜூகேஷனல் டிரஸ்ட் 1995 முதல் இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் இன்று வரை 12,390 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை வழங்கும் போது, பெண்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் குழந்தைகள் அல்லது மற்ற மத்திய ஆயுதப்படை காவல் வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு ஒரு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

MAITS  பெற்றவர்கள் துன்பங்களை வென்றெடுக்க சென்று  தங்கள் வாழ்க்கைகளில் ஒரு புதிய போக்கை திட்டமிட்டுள்ளனர். இன்று,  MAITS விருது பெற்றவர்கள்,  கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க பதவிகளில் உள்ளனர்.

K.C. மஹிந்திரா  எஜூகேஷனல் டிரஸ்ட் (KCMET) பற்றி

கே.சி.மஹிந்திரா  எஜூகேஷனல் டிரஸ்ட் ஆனது, (KCMET) 1953 ஆம் ஆண்டு மறைந்த கே.சி.மஹிந்திராவால் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கையை, கல்வியின் மூலம் மாற்றியமைக்கும் தொலைநோக்கு பார்வையுடன், அவர்களுக்கு நிதி உதவி மற்றும் அங்கீகாரம் வழங்குவதன் மூலம், வயது பிரிவுகள் மற்றும் வருமான அடுக்குகள் முழுவதிலும், KCMET, பல கல்வி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து, இந்த முயற்சிகள் 136.30 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உதவித்தொகை, வாழ்வாதார பயிற்சி திட்டங்கள், கல்வி ஆதரவு மற்றும் நிதி உதவி போன்றவற்றின் மூலம் 13,76,327 தகுதியுள்ள மற்றும் தேவைப்படும் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.