Saturday, August 24, 2024

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு விருது

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு விருது....

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தலில் புதுமையை புகுத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. 

24 ஆகஸ்ட், சென்னை -  மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்,  கற்பித்தலில் புதுமை புகுத்திய ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக  வேல்ஸ் டீச்சர்ஸ் எக்ஸ்செலன்ஸ் அவாட்” என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து  1,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு  அவர்களின் மகத்தான பங்களிப்பை கவுரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். 

புதுமையான அணுகுமுறைகள் மூலம் மாணவர்களை  உற்சாகமான வழிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆசிரியர்களை வாழ்த்தி அவர்களை  மேலும் உற்சாகப்படுத்தும் வகையில்  உரை நிகழ்த்தினார். மேலும்  இயக்குநர் (Directorate of non formal and adult education ) டாக்டர் எஸ்.நாகராஜ முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன- வேந்தர் டாக்டர். ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் குழுமங்களின் துணைத்தலைவர்  டாக்டர் ப்ரீத்தா கணேஷ், மற்றும் டாக்டர் தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

வேல்ஸ் பல்கலைக்கழகம்:

 100 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறை பல்கலைக்கழகம் என்ற தனித்துவமான சிறப்பைப் பெறுகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கல்வி, மேலாண்மை, கடல்சார் படிப்புகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வரையிலான பட்டப்படிப்புகளை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.