Thursday, August 29, 2024

சென்னையை வணங்கி வாழ்த்தும் ஆக்கோ (ACKO): அறிவு மற்றும் சஞ்சய் சுப்ரமணியன் பங்கேற்கும் ‘சென்னைக்காரன்’ இசைப்பாடலை வெளியிடுகிறது

சென்னையை வணங்கி வாழ்த்தும் ஆக்கோ (ACKO): அறிவு மற்றும் சஞ்சய் சுப்ரமணியன் பங்கேற்கும் ‘சென்னைக்காரன்’ இசைப்பாடலை வெளியிடுகிறது

~இந்த இசைப்பாடல், சென்னை மாநகரின் மக்களால் சென்னை மாநகருக்காக சமர்ப்பணம் செய்யப்படுகிறது

சென்னை – 385வது மெட்ராஸ் (சென்னை) தினத்தைக் கொண்டாட சென்னை மாநகரம் தயாராகிவரும் நிலையில் இந்தியாவின் முன்னணி D2C காப்பீடு நிறுவனமான ஆக்கோ, நகரின் மாறிவரும் முகத்தோற்றத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘சென்னைக்காரன்’ (பெருமைமிகு சென்னைவாசி) என்ற பெயரிலான ஒரு புதிய இசை காணொலி பாடலை வழங்குகிறது. இம்மாநகரின் இசை தளத்தில் இரு ஜாம்பவான்களாகத் திகழும் அறிவு மற்றும் சஞ்சய் சுப்ரமணியன் இடம்பெற்றிருக்கும் இப்பாடல், ஒரு உண்மையான சென்னைக்காரனாக இருப்பதில் உள்ள பெருமையையும், ஆழமான பற்றுணர்வையும் மனதின் ஆழத்திலிருந்து அழகாக வெளிப்படுத்துகிறது.

தமிழ் ராப் தளத்தில் முதன்மை வகிக்கும் அறிவு, அவரது சிறப்பான பாடல் வரிகள் மற்றும் செயற்பாடு உணர்விற்காக பிரபலமாக அறியப்படுகிறார். இந்த இசை, வீடியோ பாடலுக்காக கர்நாடக இசையுலகில் தனக்கென தனி இடத்தைக் கொண்டிருக்கும் சஞ்சய் சுப்ரமணியன், அறிவுடன் இணைந்திருக்கிறார். சென்னைக்கெனவே இருக்கும் மிக ஆழமான பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவமான கலாச்சாரத்தோடு இம்மாநகரின் நவீனத்துவத்தை அழகாக கலந்து சென்னையின் தனிப்பண்பியல்புகளை இந்த இரு இசைக்கலைஞர்களும் வெளிப்படுத்துகின்றனர். 

அதன் மதிப்பீடுகள் மற்றும் பாரம்பரியங்களில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கும் சென்னை அதே வேளையில் மாற்றங்களையும், நவீனத்துவத்தையும் அதே ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு உயிரோட்டத்தை சென்னை மாநகரம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறது. காப்பீடு தொழில்துறையை புரட்சிகரமானதாக மாற்றும் ACKO-ன் அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் சென்னை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது. பாரம்பரியத்துடன் முற்போக்கான முன்னேற்றத்தையும் இம்மாநகரம் தயக்கமின்றி கலந்து சங்கமிப்பதைப் போலவே வழக்கமான காப்பீடு நடைமுறைகளை சவாலுக்கு உட்படுத்தும் ACKO, புத்தாக்க செயல்பாட்டின் மீது தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது; அதே வேளையில் வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்டிருக்கும் தனது முக்கியமான கோட்பாடுகளை தவறாமல் இது கடைபிடிக்கிறது. உலகளாவிய மொழியான இசையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த கூட்டிணைவு சக்தியை ACKO அடிக்கோடிட்டு காட்டுகிறது. 

ACKO-ன் தலைமை சந்தையாக்கல் அதிகாரி திரு. ஆஷிஷ் மிஸ்ரா, சென்னை இசைப்பாடல் வெளியீடு குறித்து பேசுகையில், “சென்னை எப்போதுமே ஒரு முக்கியமான சந்தையாக ACKO-க்கு இருந்து வந்திருக்கிறது. ~5,00,000 வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கிற மகத்தான ஆதரவு இந்நகரத்தோடு நாங்கள் உருவாக்கியிருக்கிற வலுவான இணைப்பை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது. எமது செயல்நடவடிக்கைகள் வழியாக, குறிப்பாக கடந்த ஆண்டு சென்னையை தாக்கிய மிச்சாங் புயல் போன்ற சவாலான தருணங்களின்போது எங்களால் நேர்மறை உணர்வையும், நம்பிக்கையும் உருவாக்க முடிந்தது. எமது மிக விரைவான பதில்வினையும், உரிமைக்கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் திறன்மிக்க செயல்முறையும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நன்னம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. ‘சென்னை காரன்’ என்ற இசைப்பாடல் வழியாக உலகப்பொது மொழியான ஆனால், இம்மாநகரில் வேர்களைக் கொண்டிருக்கிற இசையின் வழியாக சென்னையின் தனித்துவமான ஆன்மாவையும், உயிரோட்டமான உணர்வையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இந்த மாநகரைச் சேர்ந்த எந்தவொரு நபரும் இந்நகருக்கான இப்பாடலுடன் தங்களை இணைத்து ஒன்றுபடுத்தி இரசிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

சென்னை மியூசிக் வீடியோவிற்காக ACKO நிறுவனத்துடனான தனது ஒத்துழைப்பு உறவு குறித்து பேசிய திரு. அறிவு, “இந்த மாநகரை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் மற்றும் மக்களின் ஆனந்தத்தைக் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறார். ஒரு பிராண்டான ACKO உடன் ஒத்துழைப்புடன் செயல்படுவது உண்மையிலேயே மிகச்சிறப்பான மகிழ்ச்சி தரும் அனுபவமாகும், இந்த இசை, வீடியோ பாடலுக்காக இந்த பிராண்டு தந்திருக்கும் படைப்பாக்க சுதந்திரம் உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. கர்நாடக இசை நிபுணரான சஞ்சய் அவர்களுடன் இணைந்து செயல்பட முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை வளர்த்தெடுத்த இந்நகருக்கு எங்களது இசையின் வழியாக அன்பை வெளிப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார். 


இந்த பாடல் குறித்து பேசுகையில், திரு. சஞ்சய் சுப்ரமணியன் கூறியதாவது: “இப்பாடல் எனக்கொரு பரிசோதனை முயற்சியாக அமைந்தது. அது மிகச்சரியாக வெளிவந்திருக்கிறது. தமிழ் ராப் கலைஞரான அறிவு அவர்களுடன் இணைந்து ஒத்துழைப்புடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகும். எங்களை இருவரையும் ஒருங்கிணைத்து இந்த தனித்துவமான இசைப்பாடலை வெளிக்கொணர்வதற்கு அவசியமான சுதந்திரத்தையும், வசதியையும் உறுதி செய்வதில் ACKO-ன் பங்கு முக்கியமானது. மெட்ராஸ் தினத்தன்று இப்பாடல் வெளிவருவது இதை இன்னும் சிறப்பானதாக, என்றும் நினைவில் நிலைக்கத்தக்கதாக ஆக்குகிறது”.

இந்த வீடியோ இசைப்பாடல் இப்போது கண்டு இரசிப்பதற்கு கிடைக்கிறது. வானொலி, சமூக ஊடகம், ஸ்பாட்டிஃபை மற்றும் ஆப்பிள் மியூசிக் உட்பட பல்வேறு தளங்களில் இது இடம்பெறும். 


About ACKO:

Founded in 2016 by Varun Dua, ACKO’s entire process is designed to provide a better customer experience and to eliminate the pain points associated with the traditional insurance model, with processes that require zero paperwork, from purchases and claims to renewals. ACKO has pioneered the direct-to-consumer auto insurance space in the country. In its continuous efforts to drive a paradigm shift in the automotive landscape and bring a transformation in the EV industry, ACKO launched a unique Extended Battery Warranty plan in partnership with industry-leading OEMs – Ather and Hero. In March 2023, ACKO entered the retail health insurance segment to bring the customer into focus with its fair pricing, convenience, and superior product & customer experience. Further, ACKO's acquisition of Parentlane and OneCare is a testament to its growing health insurance business. ACKO has also collaborated with PhonePe and MyGate to directly offer comprehensive car, bike, and health insurance products to consumers on their platform.

ACKO has one of the largest market shares in embedded insurance products like mobility and gadget insurance in partnership with 50+ leading players in the internet ecosystem such as Oyo, redBus, Zomato, HDB Financial Services and Urban Company. Within two years of its launch, ACKO's Group Health Insurance product has on-boarded 200+ new age, people-first companies, including Swiggy, Razorpay, and CRED and insured nearly 8+ lac lives. In a span of 9 years of operations, the company has distributed insurance policies to over 78+ Mn unique customers and issued 1 Bn+ insurance policies.