Wednesday, July 3, 2024

அப்போலோ OMR மருத்துவமனை மிகவும் சிக்கலான, இதயத்தில் பொருத்தப்பட்ட உறை குழாயை மிகத்துல்லியமாக பிரித்து எடுத்து சாதனை

அப்போலோ OMR மருத்துவமனை மிகவும் சிக்கலான, இதயத்தில் பொருத்தப்பட்ட உறை குழாயை மிகத்துல்லியமாக பிரித்து எடுத்து சாதனை!


மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டு இருந்த இன்ட்ராகோரோனரி உறை குழாயைப் பிரித்தெடுத்து இருக்கிறது அப்போலோ மருத்துவமனை.

சென்னை, 03 ஜூலை, 2024: சென்னை அப்போலோ OMR மருத்துவமனை [Apollo OMR Hospital], மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள இன்ட்ராகோரோனரி உறை குழாய் பிரித்தெடுக்கும் மருத்துவ நடைமுறையை [high-risk intracoronary stent extraction procedure] வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதன் மூலம் இதய அறுவை சிகிச்சையில்  குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது. மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான இந்த அறுவை சிகிச்சையானது, நோயாளிகளுக்கான மருத்துவப் பராமரிப்பில் முன்னோடித்துவமிக்க முன்னேற்றங்களை செயல்படுத்துவதிலும், மிகவும் சிக்கலான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஈடுஇணையற்ற மருத்துவ தீர்வுகளை வழங்குவதிலும் அப்போலோ மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
கரோனரி ஸ்டென்ட்கள் எனப்படும் இதய உறை குழாய், பொதுவாக இதய தமனியில் மிக குறைந்தளவு அடைப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உடலினுள் செருகப்படுகின்றன. இது வழக்கமான மருத்துவ நடைமுறை மட்டுமின்றி மிகவும் குறைந்தப்பட்ச ஆபத்துள்ள ஒன்றாகும். இருப்பினும், இதயத்தில் உண்டாகும் இன்ட்ராகோரோனரி உறை குழாய் தொற்றுகள், மிகவும் அரிதாக ஏற்படுகிறது.  இத்தகைய தொற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சிக்கல்களை உருவாக்குவதோடு, அவர்களது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கும் வழிவகுக்குகிறது.
இந்த குறிப்பிட்ட 76 வயது நோயாளி, இதற்கு முன்பு மாரடைப்பின் காரணமாக  மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இவருக்கு அவசர நிலை இன்ட்ரோகரோனரி ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இந்த மருத்துவ நடைமுறை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகும், தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பழைய மகாபலிபுரம் சாலை பெருங்குடியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக இவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ மதிப்பீடுகளை   பொது மருத்துவர் கண்ணையன் மற்றும் கன்சல்டன்ட் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். மதுபிரபுதாஸ் ஆகியோர் மேற்கொண்டனர். அப்போது இந்நோயாளிக்கு இன்ட்ராகோரோனரி ஸ்டென்டில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்று, கரோனரி தமனியை அரித்து, பெருநாடி சுவர் [aorta wall] வரை விரிவடையும் அபாயத்துடன் இருப்பதும் தெரிய வந்தது..
நோயாளியின் உடல்நிலையில் இருந்த தீவிரத்தை கண்டறிந்ததும், இருதய அறுவை சிகிச்சை ஆலோசனை மருத்துவர் டாக்டர். எம்.எம். யூசுஃப், [Dr. M.M. Yusuf, Consultant Cardiac Surgeon], கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் சர்ஜரியுடன் (coronary artery bypass graft surgery (CABG)) இன்ட்ராகோரோனரி உறை குழாய் மற்றும் பாதிக்கப்பட்ட அரிப்பை அவசரமாக அகற்றுவதற்காக பன்னோக்கு சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவை முன்னின்று வழிநடத்தினார். மிகவும் சிக்கலான, ஆபத்து அதிகமுள்ள இந்த மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள பல்வேறு மருத்துவப்பிரிவு நிபுணர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. டாக்டர். கல்யாணராமன் (இருதய மயக்க மருந்து நிபுணர், கன்சல்டன்ட்) [Dr. Kalyanaraman (Consultant Cardiac Anaesthetist)], டாக்டர். செந்தூர்நம்பி (தொற்றுநோய்களின் மருத்துவர்,  கன்சல்டன்ட்) [Dr. Sendhurnambi (Consultant Infectious Diseases)], டாக்டர். பிரதீமா (தீவிர சிகிச்சை மருத்துவர், கன்சல்டன்ட்) [Dr. Pratheema (Consultant Intensivist)], மற்றும் டாக்டர். கண்ணையன் மற்றும் டாக்டர். மதுபிரபுதாஸ் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு இந்த சிக்கலான மருத்துவ நடைமுறையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது.
அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் எம். எம். யூசுப் [Dr M M Yusuf, Consultant Cardiac Surgeon, Apollo Hospitals] கூறுகையில், “இந்நோயாளிக்கு முதலில் இதய சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு இன்ட்ராகோரோனரி ஸ்டென்டில் தொற்று இருப்பது தெரியவந்தது. நோய்த்தொற்று அவரது இதய தமனியை அரித்து இருந்ததால்,  அது கிழிந்துப் போகும் சூழல் இருந்தது. மேலும் இதன் பாதிப்பு பெருநாடியின் சுவர் வரை நீளும் அபாயமும் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இந்நோயாளிக்கு மிகவும் அதிக ஆபத்துள்ள, மிகவும் அரிதான மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  மேலும் வயதான நோயாளி என்றால் இன்னும் ஆபத்து அதிகம். உலகளாவிய மருத்துவ தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் மருத்துவ தீர்வுகள் குறித்த பதிவுகளை  ஆராய்ந்தறிந்த போது, இது போன்ற நிலைமைகளின் கீழ் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.  மேலும் அந்த நோயாளிகள் இறக்கும் ஆபத்து 60% -க்கும் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது. மிகவும் சிக்கலான இந்த மருத்துவ நடைமுறையில் இருக்கும் அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்து நோயாளி மற்றும் மருத்துவர்களாக இருந்த அவரது குடும்பத்தினருக்கும் முழுமையாக  விளக்கி கூறப்பட்டது.’’ என்றார்.
அப்போலோ OMR மருத்துவமனையின் மருத்துவத்துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் கண்ணையன் [Dr Kannayan, Senior Consultant, Medicine, Apollo OMR Hospital] கூறுகையில், "இந்த அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள இந்த மருத்துவ நடைமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருப்பது என்பது, எங்களது பல்துறை மருத்துவ  குழுவின் ஈடுஇணையற்ற நிபுணத்துவம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது. எங்களது நோயாளிக்கும் மிகச்சிறந்த சிகிச்சையையும், நல்ல தீர்வையும் வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக அப்போலோ மருத்துவமனை வழங்கிய மேம்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் பெரும் ஆதரவுக்கு எங்களுடைய  நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.
கிளஸ்டர்-2-ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர்.  ராகுல் மேனன் [Dr. Rahul Menon, CEO & Medical Director, Cluster-2] கூறுகையில், "ஆழ்ந்த நிபுணத்துவமிக்க, அதிக அக்கறைத் தேவைப்படுகிற இந்த மருத்துவ நடைமுறையானது, அப்போலோ OMR மருத்துவமனைகளில் உள்ள எங்களது மருத்துவக் குழுவின் ஈடுஇணையற்ற திறமைகளையும், அக்கறையையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இது போன்ற அரிய மற்றும் அதிக ஆபத்துள்ள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வது, மருத்துவ சிகிச்சைகளில் இருக்கும்  எல்லைகளைத் தாண்டி புதிய வரையறையை உருவாக்குவதிலும், நோயாளிகளுக்கு மேம்பட்ட  உயரிய சிகிச்சைகளை அளிப்பதிலும் நாங்கள் காட்டும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பல்வேறு மருத்துவ அணுகுமுறை மற்றும் கூட்டு முயற்சிகளின் மூலம் எங்கள் நோயாளிகளுக்கு நல்ல தீர்வுகளை வழங்கி  வருவது,  எங்களது அதிநவீன மருத்துவ உள்கட்டமைப்பின் சிறப்பையும், இருதய பராமரிப்பு நிபுணர்களின் நிபுணத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்று  மேம்பட்ட இதய பராமரிப்பில் நாங்கள் முன்னிலை வகிப்பதை பெருமையாக கருதுகிறோம். மேலும் நோயாளிகளுக்கான பராமரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பாக செயல்பட தொடர்ந்து பாடுபடுவோம்." என்றார்.
நோயாளிக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு நோயாளி சகஜநிலைக்குத் திரும்பினார்.    இந்தச் சாதனை அப்போலோ மருத்துவமனையின் மேம்பட்ட திறன்களையும், உயரிய சுகாதார பராமரிப்பில் காட்டிவரும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. 
ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், ஒரு மில்லியன் பேருக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.