காம்பஸ் குரூப் இந்தியா மூலம், FSSAI இன் ஈட் ரைட் கேம்பஸ் சான்றளிப்பை கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெற்றுள்ளது
சென்னை, இந்தியா, ஜூலை 08, 2024 - கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், சென்னை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI) வழங்கப்பட்ட ஈட் ரைட் கேம்பஸ் (ERC) சான்றளிப்புடன் அதன் மதிப்பிற்குரிய அங்கீகாரத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்தச் சாதனையானது, வளாகத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதில் சார்ட்வெல் - காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கின்ற வகையில், அவர்களுடனான ஊக்கமான ஒத்துழைப்பு மூலம் சாத்தியமானது.
FSSAI ஆல் நடத்தப்படும் இந்த ஈட் ரைட் கேம்பஸ் முயற்சி, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அதன் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதில் மாத்திரமல்ல, மிக உயர்ந்த தரத்துடன் கூட வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பை இந்தச் சான்றளிப்பு முக்கியப்படுத்திக் காட்டுகிறது.
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் உணவு சேவை பங்குதாரரான சார்ட்வெல்ஸ் பை காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனம் இந்த சான்றிதழைப் பெறுவதில் ஒரு ஊக்குவிப்பாளராக செயல்பட்டது. கடுமையான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துதல், சமச்சீர் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பட்டியலைக் உருவாக்குதல் மற்றும் உணவைத் தயாரிப்பதிலும் மற்றும் பரிமாறுவதிலும் சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் அவர்களின் நிபுணத்துவம் இந்த வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது.
இந்தச் சாதனையில் தனது பெருமிதத்தை வெளிப்படுத்திய ERC காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. விகாஸ் சாவ்லா, “ தரமான ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற ERC சான்றளிப்பைப் பெறுவது ஒரு பெருமைக்குரிய சாதனையாகும். காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்தில் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிதாக தயாரிக்கப்பட்ட மற்றும் சமச்சீர் உணவை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் கூட்டுசேர்வது, ஒரு ஆரோக்கியமான மற்றும் துடிப்பான வளாக சூழலை பராமரிக்கின்ற எங்கள் பகிரப்பட்ட இலக்கை பிரதிபலிக்கின்ற ஒரு பலனளிக்கும் அனுபவமாக உள்ளது. இந்த சாதனை எங்கள் கூட்டு முயற்சிகள் மற்றும் உணவு சேவையில் சிறந்து விளங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது."என்று கூறினார்.
இந்த ERC சான்றளிப்புத் திட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மாணவர் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் முழுமையான உணவு தீர்வுகளை வழங்குகின்ற கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. அதன் கல்வித் திறமைக்கு பெயர் பெற்ற கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், வழங்கப்படும் அனைத்து உணவுகளும் மிக உயர்ந்த FSSAI தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு, காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்துடன் நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம், அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
இந்த அங்கீகாரத்தின் முக்கியத்துவம் குறித்து சென்னை கிரேட் லேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கர்னல் ரஞ்சன்பிரபு கூறுகையில், “எங்கள் மாணவர்களின் வெற்றிக்கு சத்தான உணவுகள் அடித்தளமாக இருக்கிறது. சரிவிகித ஆரோக்கிய உணவு, கல்விச் சாதனை, உடல் நலம் மற்றும் மனத் தெளிவு ஆகியவற்றை தூண்டுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். மதிப்புமிக்க ஈட் ரைட் கேம்பஸ் சான்றளிப்பைப் பெறுவது மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. இந்த சாதனையை அடைவதில் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் ஆதரவுக்காக காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். இந்த அங்கீகாரம், எங்கள் மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு இடமாக இருப்பதை உறுதி செய்கின்ற வகையில், எங்கள் வளாக சூழலை தொடர்ந்து உயர்த்துவதற்கு எங்களை ஊக்கமளிக்கிறது."என்று கூறினார்.
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் காம்பஸ் குரூப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிநவீன சமையலறை வசதிகளால் ஆதரிக்கப்படும் முழு உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் செயல்முறை முழுவதிலும் மிக உயர்ந்த அளவிலான தூய்மை மற்றும் பாதுகாப்பை பராமரிக்க அர்ப்பணித்துள்ளன. இந்த ERC சான்றளிப்பு ஆனது, முழு கல்வி சமூகத்திற்கும் ஒரு தீங்கற்ற, பாதுகாப்பான மற்றும் ஊட்டமளிக்கும் உண்ணும் அனுபவத்தை வழங்குவதற்கான அவர்களின் பகிரப்பட்ட பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக செயல்படுகிறது.
சார்ட்வெல்ஸ் அண்ட் காம்பஸ் குரூப் இந்தியா பற்றி :
சார்ட்வெல்ஸ் உலகளவில் கல்வித் துறை பிரிவில் உணவு சேவைகளை வழங்குவதில் ஒரு முன்னணி வழங்குநராக உள்ளது. காம்பஸ் குரூப் இந்தியா வின் சார்ட்வெல்ஸ், K-12 பள்ளிகள் முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரையிலான கல்வி நிறுவனங்களுக்கு புதுமையான, ஊட்டச்சத்துள்ள உணவு விருப்பங்களை வழங்குகிறது.
காம்பஸ் குரூப் PLC இன் துணை நிறுவனமான காம்பஸ் குரூப் இந்தியா ஆனது, 35 நாடுகளில் ஒரு இருப்பைக் கொண்டுள்ள ஒப்பந்த உணவு மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநராகும். காம்பஸ் குரூப் இந்தியா 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய பணியிடங்கள், கல்வி மற்றும் உடல்நல பராமரிப்பு சந்தை தேவைகளுக்கு சேவை செய்து வருகிறது. இது இந்தியா முழுவதும் 450 க்கும் மேலான வாடிக்கையாளர் இடங்களில் செயல்படுகிறது. துறையை மையமாகக் கொண்ட எங்கள் வணிகங்கள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற அனுபவம், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் சந்தை முன்னணி கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கான அணுகலை வழங்குகின்றன. காம்பஸ் குரூப் இந்தியா, அனைத்து சில்லறை மற்றும் உணவு சேவை பிரிவுகளிலும் பணியிட உணவு கருத்தாக்கங்களுக்காக இந்தியா ஃபுட் ஃபோரம் அவார்ட் இல் 'ஆண்டின் மிகவும் போற்றப்படும் உணவு கண்டுபிடிப்பு விருது' 'Most Admired Food Innovation of the Year Award' மற்றும் ஃபுட் புக், ஈடுபாடு மற்றும் உணவு ஆர்டர் செய்யும் தளம் ஆகியவற்றிற்காக கோகோ கோலா கோல்டன் ஸ்பூன் விருது,போன்ற விருதுகளை வென்றுள்ளது. இது புதுமை, நம்பிக்கை மற்றும் தனித்துவம் ஆகிய அளவுருக்களில் ‘தி எகனாமிக் டைம்ஸ் பெஸ்ட் பிராண்ட்ஸ் 2020’ இல் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டது. காம்பஸ் குரூப் இந்தியா ஒவ்வொரு நாளும் சிறந்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தேர்வுகளுக்கு ஊட்டமளிப்பதற்கும் உதவுவதற்கும் தொடர்புடைய கருத்துருக்களை தொடர்ந்து புதுமைப்படுத்தவும் வடிவமைக்கவும் முயற்சிக்கிறது.
அதன் மையத்தில், காம்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தீர்வின் நோக்கம், இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கான பல்கலைக்கழக கஃபே அனுபவத்தை மாற்றுவதும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவு உண்பவர்களை உருவாக்குவதும் ஆகும். இது பல்கலைக்கழக உணவை (உணவுப்பட்டியல் ) மாற்றுவது மட்டுமல்ல, மாணவர்கள் உணவுடன் கொண்டிருக்கும் உறவை சாதகமாக பாதிக்கிறது பற்றியது மற்றும் ஆரோக்கியமான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த கிரகத்திற்கான மாற்ற முகவர்களாக மாணவர்கள் எவ்வாறு மாறலாம் என்பதை பற்றியதும் ஆகும்.
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனம் பற்றி:
2004 இல் டாக்டர். பாலா வி. பாலச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனம், புதுமையான மற்றும் தொழில்துறை தொடர்பான திட்டங்களுக்கு பெயர் பெற்ற இந்தியாவில் உள்ள ஒரு முதன்மை பிசினஸ் ஸ்கூல் ஆகும். இந்த நிறுவனம் சென்னை மற்றும் குர்கானில் வளாகங்களைக் கொண்டுள்ளது. இது முதன்மையான ஒரு வருட முதுகலை மேலாண்மை திட்டம் (PGPM), இரண்டு வருட முதுகலை டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (PGDM), நிர்வாக திட்டங்கள் மற்றும் சிறப்புப் படிப்புகள் உட்பட பல்வேறு மேலாண்மை திட்டங்களின் ஒரு வரம்பை வழங்குகிறது. கிரேட் லேக்ஸ் அதன் கடுமையான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் வலுவான தொழில் தொடர்புகளால் வேறுபடுகிறது. மாணவர்கள் நடைமுறை நுண்ணறிவு மற்றும் திறன்களைப் பெறுவதை உறுதிசெய்கின்ற வகையில், வழக்கு ஆய்வுகள், உருவகப்படுத்துதல்கள் மற்றும் திட்டங்கள் மூலம் அனுபவமிக்க கற்றலுக்கு இந்த நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது. கூடுதலாக இது ஹூஸ்டன் பல்கலைக்கழகம், ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடனான அதன் சர்வதேச கூட்டாண்மை மூலம் ஒரு உலகளாவிய முன்னோக்கை ஊக்குவிக்கிறது. அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் உகந்த வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற சென்னை வளாகம், ஒரு உகந்த கற்றல் சூழலை வழங்குகிறது. கிரேட் லேக்ஸ் நிறுவனம், அதன் திட்டங்கள் அவற்றின் தரம் மற்றும் தாக்கத்திற்காக அதிக பாராட்டுகளைப் பெறுகின்ற வகையில் தொடர்ந்து இந்தியாவின் சிறந்த பிசினஸ் ஸ்கூல் களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.