Wednesday, July 31, 2024

தலை மற்றும் கழுத்து புற்றுநோயில், நிமோட்டுஜுமாப், உயிர்வாழ்வை கணிசமாக நீட்டிக்கச்செய்கிறது என்பதை டாடா மெமோரியல் ஆய்வு கண்டறிந்துள்ளது

தலை மற்றும் கழுத்து புற்றுநோயில், நிமோட்டுஜுமாப், உயிர்வாழ்வை கணிசமாக நீட்டிக்கச்செய்கிறது என்பதை டாடா மெமோரியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.

சென்னை , ஜூலை 29, 2024: நிமோட்டுஜுமாப் ஐ வழக்கமான சிகிச்சை முறையில் சேர்ப்பது, தலை மற்றும் கழுத்தில், அருகிலுள்ள திசுக்களுக்கு தீவிரமாகப் பரவுகின்ற செதில் உயிரணு புற்று நோயைக் கொண்டிருக்கும் நோயாளிகளின் 10 ஆண்டு ஒட்டுமொத்த உயிர்வாழ்வு விகிதத்தை கணிசமாக மேம்படுத்துகிறது என்று மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை நடத்திய ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த நோய்க்கான சாத்தியமான சிகிச்சைத் தேர்வாக இதை அமைக்கின்ற வகையில், நிமோட்டுஜுமாப், முன்னேற்றம் இல்லாத உயிர்வாழ்வை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நீண்டகாலமாக உயிர் பிழைப்பவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தையும் பராமரிக்கிறது என்பதை 536 நோயாளிகளை உள்ளடக்கிய மூன்றாம் கட்ட ஆய்வின் இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கதிரியக்க சிகிச்சை மற்றும் சிஸ்ப்ளேட்டின் சிகிச்சை மட்டுமே பெற்ற 22.5% பேருடன் ஒப்பிடும்போது, ஒரே நேரத்தில் கதிரியக்க சிகிச்சை மற்றும் சிஸ்ப்ளேட்டினுடன் இணைந்து நிமோட்டுஜுமாப் ஐப் பெற்ற தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 33.5% இன் ஒரு 10 ஆண்டு ஒட்டுமொத்த உயிர்வாழ்வு விகிதத்தைக் கொண்டிருந்தனர். இந்த சராசரி ஒட்டுமொத்த உயிர்வாழ்வு ஆனது வழக்கமான சிகிச்சை பிரிவில் 2.78 ஆண்டுகளில் இருந்து நிமோட்டுஜுமாப் பிரிவில் 3.69 ஆண்டுகளாக மேம்பட்டது. மேலும், இந்த ஆய்வில் தாமத கால பாதகமான நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, இது நிமோட்டுஜுமாப் இன் பாதுகாப்பு மற்றும் ஏற்புத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

65% க்கும் அதிகமான நோயாளிகள், பெரும்பாலும் குணப்படுத்த முடியாத மற்றும் மருத்துவ கவனிப்பு தேவைப்படுகின்ற குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட முற்றிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் இந்தியாவில் புற்றுநோய் சுமைகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. அருகிலுள்ள திசுக்களுக்கு தீவிரமாகப் பரவும் சூழ்நிலையில், குணப்படுத்தும் நோக்கத்துடன் ஒரே நேரத்தில் வேதியியல் கதிர்வீச்சுடன் வேறு எந்த இலக்கு சிகிச்சையையும் இணைக்க முடியாததால் இது தலை மற்றும் கழுத்து புற்றுநோயை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கிறது.

மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் குமார் பிரபாஷ் கூறுகையில், "இந்த ஆய்வின் முடிவுகள் தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கின்றன. தற்போதுள்ள சிகிச்சை முறைக்கு நிமோட்டுஜுமாப் ஐச் சேர்ப்பதன் மூலம், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கும் அதே வேளையில் நீண்ட கால உயிர்வாழ்வு விகிதங்களில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வை நாங்கள் கவனித்துள்ளோம்."என்று கூறினார். 

பெங்களூரு, HCG மருத்துவமனையின் மூத்த மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் K.கோவிந்த் பாபு கூறுகையில், “பெங்களூருவில் உள்ள கித்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜியில் நிமோட்டுஜுமாப் மூலம் நடத்தப்பட்ட முதல் ஆய்வான ‘பெஸ்ட் ட்ரையல்’ 100% ஒட்டுமொத்த பதிலீட்டு விகிதத்துடன் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டியது. ஒரே நேரத்தில் வேதியியல் கதிர்வீச்சுடன் இணைந்து நிமோட்டுஜுமாப் ஐப் பெற்ற 50% க்கும் அதிகமான நோயாளிகள் ஐந்து வருட கண்காணிப்பில் உயிருடன் இருக்கின்றனர். டாடா ஆய்வின் நீண்ட கால பின்தொடர்தல் தரவு, குறிப்பிடத்தக்க 10 வருட உயிர்வாழ்வு விகிதங்களைக் கொண்ட கணிசமான நோயாளிகளின் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துகிறது."என்று கூறினார். 

ஏரிஸ் லைஃப்சயின்ஸஸ் நிறுவனத்தின் மருத்துவ விவகாரங்கள் மற்றும் மருத்துவ மேம்பாட்டு பொது மேலாளர் டாக்டர் நீரா குப்தா கூறுகையில், "தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் இந்த முக்கிய ஆய்வை ஆதரித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பேசுவது மற்றும் விழுங்குவது போன்ற அத்தியாவசிய செயல்முறைகளை இது பாதிக்கிறது என்பதால், இந்த நோயாளிகள் பெரும்பாலும் ஒரு சமரசம் செய்யப்பட்ட வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கிறார்கள். ஒரே நேரத்தில் வேதியியல் கதிர்வீச்சுடன் நிமோட்டுஜுமாப் ஐ சேர்ப்பது, முன்னேற்றம் இல்லாத உயிர்வாழ்வையும் ஒட்டுமொத்த உயிர்வாழ்வையும் மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்கிறது என்று கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன."என்று கூறினார்.

முன்பு Biocon மற்றும் இப்போது ஏரிஸ் லைஃப்சயின்ஸஸ் நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்ட இந்த நிமோட்டுஜுமாப் ஆய்வு 2012 முதல் 2018 வரை மேற்கொள்ளப்பட்ட 536 வயதுவந்த நோயாளிகளை உள்ளடக்கிய ஒரு திறந்த நிலை, புலனாய்வாளரால் தொடங்கப்பட்ட, கட்டம் III தோராய சோதனை முறை ஆகும். அருகிலுள்ள திசுக்களுக்கு வேகமாகப் பரவுகின்ற தலை மற்றும் கழுத்து செதில் உயிரணு புற்றுநோய் (LA HNSCC) க்கான வழக்கமான சிகிச்சையில் (கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு) நிமோட்டுஜுமாப் ஐ சேர்ப்பதன் நன்மைகளை இது மதிப்பீடு செய்தது. வாராந்திர சிஸ்ப்ளேட்டின் (CRT) உடன் தீவிர கதிரியக்க சிகிச்சை அல்லது அதே சிகிச்சை முறை உடன் வாராந்திர நிமோட்ஜுமாப் (NCRT) ஆகியவற்றைப் பெற நோயாளிகள் தோராயமாக நியமிக்கப்பட்டனர். இந்த நீண்ட கால கண்காணிப்பு தரவு ஒரு சராசரி 8.86 ஆண்டுகள் கண்காணிப்பு மூலம் 10 ஆண்டு ஒட்டுமொத்த உயிர்வாழ்வை மதிப்பீடு செய்தது. வழக்கமான (CRT) சிகிச்சையை மட்டும் பெற்ற 22.5% உடன் ஒப்பிடும்போது வாராந்திர நிமோட்டுஜுமாப் (NCRT) பெற்ற நோயாளிகள் 33.5% இன் உயிர் பிழைப்பு விகிதத்துடன் ஒட்டுமொத்தமாக நீண்ட காலம் வாழ்ந்தனர் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது, இது நிமோட்டுஜுமாப் சேர்த்தல் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. முக்கியமாக, நிமோட்டுஜுமாப் ஐ சேர்ப்பது நீண்டகால பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கவில்லை.

மனித பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படாத கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு இந்த நன்மை குறிப்பாக கவனிக்கத்தக்கது. நிமோட்டுஜுமாப் தாமத கால பாதகமான நிகழ்வுகளை அதிகரிக்காமல் நீண்ட கால ஒட்டுமொத்த உயிர்வாழ்வை அதிகரிக்கிறது, குறிப்பாக HPV-எதிர்மறை நோயாளிகளுக்கு பயனளிக்கிறது என்று ஆய்வு நிறைவு செய்தது.

இந்த ஆய்வு, அதன் நிரூபிக்கப்பட்ட பயன் விளைவிக்கும் திறன் மற்றும் பாதுகாப்புடன், இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது. தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான பயனுள்ள சிகிச்சை தீர்வுகளை வழங்க ஏரிஸ் லைஃப் சயின்ஸஸ் உறுதிபூண்டுள்ளது