Tuesday, July 16, 2024

பாரதி ஏர்டெல் அறக்கட்டளை ‘பாரதி ஏர்டெல் மாணவர் உதவிப்பண திட்டத்தை’ தொடங்குகிறது

பாரதி ஏர்டெல் அறக்கட்டளை ‘பாரதி ஏர்டெல் மாணவர் உதவிப்பண திட்டத்தை’ தொடங்குகிறது 

ஆண்டுக்கு ₹ 100+ கோடி திட்ட மதிப்புடன் 4000 மாணவர்களுக்கு உதவுவதே எங்கள் இலக்கு 


NIRF தரவரிசை 2023 (பொறியியல்) படி தமிழ்நாட்டின் முதல் 9 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.


அனைத்து பாரதி ஸ்காலர்களுக்கும் 100% கல்லூரிக் கட்டணத்துடன் லேப்டாப் வழங்குதல்

முன்னணி 50 NIRF (பொறியியல்) கல்லூரிகளில் அண்டர்கிராஜுவேட் (UG)/ ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் படிப்புகளுக்கு பதிவுசெய்துள்ள மாணவர்களுக்கு இது பலன் தரும்

ஆண்டு குடும்ப வருமானம் ₹ 8.5 லட்சத்துக்கு மிகாத மாணவார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்

பாரதி ஏர்டெல் அறக்கட்டளையின் 25 ஆவது ஆண்டு நிறைவை நினைவுபடுத்தும் வகையில் முதல் பேட்ச்சில் 250 மாணவர்கள் பலன் அடைவார்கள்

சென்னை, 16 ஜூலை 2024: பாரதி என்டர்பிரைஸின் அறக்கொடை பிரிவான பாரதி ஏர்டெல் அறக்கட்டளை தன் 25 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணமாக சிறப்புவாய்ந்த ‘பாரதி ஏர்டெல் மாணவர் உதவிப்பண திட்டத்தை’ அறிமுகப்படுத்துகிறது. பல்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் இருந்து வரும் தகுதியான மாணவர்களுக்கு, குறிப்பாகப் மாணவிகளுக்கு பயன் அளிப்பதே இந்த மெரிட்-கம்-மீன்ஸ் அடிப்படையிலான ஸ்காலர்ஷிப் திட்டத்தின் மைய நோக்கம். தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் UG மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளை (5 ஆண்டுகள் வரை) முதல் 50 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) உள்ள IIT உட்பட  ஐஐடி மெட்ராஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அண்ணா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சண்முகா ஆர்ட்ஸ் சயின்ஸ் டெக்னாலஜி & ரிசர்ச் அகாடமி, கலசலிங்கம் அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2024 இல் சேர்க்கைக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு இது பொருந்தும். இந்த ஆண்டு 250 மாணவர்களுடன் தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அதன் உச்சத்தை எட்டும்போது, ​​ஆண்டுக்கு ₹ 100+ கோடி செலவில் 4,000 ஸ்காலர்கள் பயனடைவார்கள்.

இந்த உதவித்தொகையில் முழுமையாக நிதியுதவி அளிக்கப்படும். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த தகுதியுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கு எதிராக நிற்கும் நிதித் தடைகளைக் உடைக்க இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ₹ 8.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பாரதி ஏர்டெல் ஸ்காலர்ஷிப்கள் 50 முன்னணி NIRF (பொறியியல்) கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (AI, IoT, AR/VR, மெஷின் லேர்னிங், ரோபோடிக்ஸ்) ஆகிய துறைகளில் UG மற்றும் ஒருங்கிணைந்த துறைகளில் சேர்பவர்களுக்கு வழங்கப்படும். 

இந்த உதவித்தொகையைப் பெறுபவர்கள் ‘பாரதி ஸ்காலர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். படிப்புக் காலம் முழுவதும் அவர்கள் தங்கள் கல்லூரிக் கட்டணத்தில் 100% தொகையைப் பெறுவார்கள் மற்றும் மடிக்கணினியும் கூடுதலாக வழங்கப்படும். விண்ணப்பிக்கத் தகுதியானஅனைத்து மாணவர்களுக்கும் விடுதி மற்றும் மெஸ் கட்டணமும் வழங்கப்படும். தரமான உயர்கல்விக்கான அணுகலைச் செயல்படுத்துவதன் மூலம் பெறும் நன்மைகள் நிரந்தரமாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தோடு பாரதி ஸ்காலர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தவுடன் தாமாகவே முன்வந்து குறைந்த பட்சம் ஒரு மாணவரைத் தாங்க ஊக்குவிக்கப்படுவார்கள். மாற்றத்திற்கான இந்த நீடித்த முயற்சி பலரது வாழ்க்கைகளை வடிவமைக்கும். இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்குபெற உதவும். 

பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், பாரதி ஏர்டெல் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான ராகேஷ் பாரதி மிட்டல் கூறினார், “கடந்த 25 ஆண்டுகளில் பாரதி ஏர்டெல் அறக்கட்டளை கல்வி முயற்சிகள் மூலம் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்மை செய்துள்ளதால் பெருமிதம் அடைகிறது. இந்த முன்னோடி பாரதி ஏர்டெல் மாணவர் உதவித்தொகை திட்டத்தின் மூலம் பல்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் அவர்கள் தங்கள் கனவுகளைத் தொடருவதற்கும் உதவிசெய்யும் எங்கள் உறுதிப்பாட்டை விரிவுபடுத்துகிறோம். சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு கல்வியே அடிப்படை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் பல்வேறு சமூக அடுக்குகளில் உள்ள மாணவர்களுக்கு முன்மாதிரியான கற்றல் மற்றும் அணுகக்கூடிய கல்வியை எப்போதும் வழங்கி வருகின்றன. நாளைய தொழில்நுட்ப உலகின் மாறிவரும் பரிணாமத்தைக் கையாளும் திறன் கொண்ட தொழில் வல்லுநர்களை வளர்ப்பதற்கு இந்திய கல்வித்துறையில் இந்தக் கோட்பாடுகளை வலுப்படுத்த நாங்கள் முயற்சிசெய்து வருகிறோம்.”


More details about the Bharti Airtel Scholarship Program can be found on the website: 

https://bhartifoundation.org/ bharti-airtel-scholarship /

About Bharti Airtel Foundation

Bharti Airtel Foundation was set up in the year 2000 as the philanthropic arm of Bharti Enterprises with a vision, ‘To help underprivileged children and youth of our country realize their potential.’ The Foundation works in the space of holistic quality education in rural India with a special focus on the girl child; and also supports Higher Education programs in partnership with premier institutions. Since 2006, the flagship, Satya Bharti School Program has been providing free quality education to thousands of underprivileged children in 164 schools in rural India across four states. At present nearly 36,000 children are enrolled in Satya Bharti Schools of which over 50% are girls. The impact of quality education has been widened by transferring the learning and good practices of this program to more than 3.7 lakh students studying in 880 partnering government schools across 12 States/UTs, through Quality Support Program (QSP), since 2013. In addition, Bharti Airtel Foundation was invited by several education officers at district and state level to scale up some of the initiatives through QSP State Partnerships. Bharti Abhiyan, the sanitation initiative, from 2014 till 2021, has benefitted over 2 lakh beneficiaries by improving sanitation conditions in the districts of Punjab, providing access to toilets and by fostering behavioural change in communities. The Foundation has been able to impact over 3 million children in a meaningful manner through its education programs since inception.

www.bhartiairtelfoundation.org