ஏர்டெல்லின் Nxtra RE100 இல் சேர்கிறது, ஒரு 100% புதுப்பிக்கும் ஆற்றல் தரவு மைய நிறுவனமாக மாற அர்ப்பணிக்கிறது
இந்தியாவின் முதல் தரவு மையமாக மாறுகிறது மேலும் RE100 இல் சேரும் 14வது இந்திய நிறுவனம் ஆகும்
2031 இல் ஒரு நெட்-ஸீரோ நிறுவனமாக மாறும் Nxtra வின் அர்ப்பணிப்பை உறுதியாக நிறுவுகிறது
Chennai (இந்தியா), ஜூன் 27, 2024: இந்தியாவின் முன்னணி தரவு மைய நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்லின் Nxtra, RE100 முன்னெடுப்பில் சேர்ந்துள்ளது. இது CDP யுடன் இணைந்து கிளைமேட் குரூப்பால் வழிநடத்தப்படும் 100% புதுப்பிக்கக்கூடிய மின்சார ஆதாரத்தை உருவாக்க அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஓர் உலகளாவிய ஃபிளாக்ஷிப் முன்னெடுப்பாகும்.
இதன் மூலம், RE100 இல் இணைந்துள்ள ஒரே தரவு மைய அமைப்பாக Nxtra மாறியுள்ளது. இந்த மைல்கலை அடையும் 14 வது இந்திய நிறுவனம் ஆகும் இது. இதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பையும் 2031 இல் நெட்-ஸீரோவாக மாறும் அதன் நோக்கத்தையும் வலியுறுத்துகிறது.
இந்த நிறுவனம் தன் புதுப்பிக்கக்கூடிய மின்னாற்றல் பயன்பாட்டை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இந்நாள்வரை 422,000 MWh புதுப்பிக்கக்கூடிய மின்னாற்றலுக்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. பவர் பர்சேஸ் அக்ரிமெண்ட்ஸ் (PPAs) மற்றும் கேப்டிவ் சோலார் ரூஃப்டாப் பிளான்ட்ஸ் ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரத்தைப் பெற்று ~ 156,595 tCO2e எமிஷன்களை Nxtra சேமித்துள்ளது.
ஏர்டெல்லின் Nxtra நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் அரோரா கூறினார், “சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுமிக்க பிராண்டாக நாங்கள் இருக்கிறோம். தூய்மையான மாற்று மின்னாற்றல்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். 2031 இல் நெட்-ஸீரோ இலக்குகளை அடைவதற்கான ஆரோக்கியமான பாதையில் நாங்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். மேலும் 100% புதுப்பிக்கக்கூடிய மின்சாரத்திற்கான அர்ப்பணிப்புடன் RE100 முயற்சியின் ஒரு பகுதியாக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”
சிஸ்டம்ஸ் சேஞ்ச் - இந்தியாவின் இயக்குநர் அதுல் முதலியார் கூறினார், “அதிக அளவில் தீவிர ஆற்றல் மிகுந்ததாக இருந்தாலும், தரவு மையங்கள் அவற்றின் உமிழ்வுகளைக் கண்டுகொள்வதில்லை. தங்கள் கார்பன் ஃபுட்பிரிண்டைக் குறைப்பதற்கு சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதில் Nxtra முன்னணியில் இருப்பது ஊக்கமளிக்கிறது. தங்கள் செயல்பாடுகளுக்குப் புதுப்பிக்கக்கூடிய மின்னாற்றலைப் பெறும் Nxtra வின் முன்முயற்சி தரவு மைய நிறுவனங்களின் ஒரு தூய்மையான எதிர்கால பயணத்தை விரைவுபடுத்துவதற்குப் பொருத்தமான உதாரணமாக இருக்கும். ஏர்டெல்லின் Nxtra வை RE100க்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
ஏர்டெல்லின் Nxtra அதன் வணிகச் செயல்பாடுகளின் மையமாக நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது. 'தேர்வின் மூலம் பொறுப்பு மற்றும் வடிவமைப்பின் மூலம் நிலைத்தன்மை' என்ற அதன் நோக்கத்திற்கு ஏற்ப பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள், சிறப்பான செயல்பாடுகள் மற்றும் விரிவான தலையீடுகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு பன்முக அணுகுமுறையை இந்த நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் செயல் திறனும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையும் உறுதிசெய்யப்படுகிறது. தன் செயல்பாடுகளில் அப்சல்யூட் ஸ்கோப் 1 மற்றும் 2 கிரீன்ஹவுஸ் கேஸ் (GHG) உமிழ்வுகளைக் குறைத்து நிதியாண்டு 2031 இல் நெட்-ஸீரோவாக மாற அது பன்முகத் தலையீடுகளைப் பயன்படுத்துகிறது.
ஏர்டெல்லின் Nxtra வுக்கு இந்தியாவில் மிகப்பெரிய தரவு மைய நெட்வொர்க் உள்ளது. நாடெங்கிலும் 12 பெரிய மற்றும் 120 எட்ஜ் தரவு மையங்களைக் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.nxtra.in என்ற வலைத்தளத்துக்கு வருகை புரியவும்.
***
பாரதி ஏர்டெல் பற்றி
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏர்டெல் தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 17 நாடுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு உலகளாவிய தகவல்தொடர்புத் தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். உலக அளவில் முதல் மூன்று மொபைல் ஆபரேட்டர்களில் ஒன்றாகும். அதன் நெட்வொர்க்கில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஏர்டெல் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்கும் நிறுவனம். ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய மொபைல் ஆபரேட்டர். ஏர்டெல்லின் ரீடெய்ல் போர்ட்ஃபோலியோவில் அதிவேக 4G/5G மொபைல் பிராட்பேண்ட், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகியவை 1 Gbps வரை வேகத்தை வழங்குகின்றன. இது லீனியார் மற்றும் தேவைக்கேற்ப பொழுதுபோக்கு, இசை மற்றும் வீடியோ, டிஜிட்டல் பேமெண்ட்கள் மற்றும் நிதிச் சேவைகள், ஸ்ட்ரீமிங் சேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்குகின்றன. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, பாதுகாப்பான இணைப்பு, கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் சேவைகள், சைபர் செக்யூரிட்டி, IoT, ஆட் டெக் மற்றும் கிளவுட்-அடிப்படையிலான தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை ஏர்டெல் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு www.airtel.com என்ற வலைத்தளத்துக்கு வருகை புரியவும்