பிலிப்ஸின் சமீபத்திய பிரச்சாரமானது ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் ஒரு திடமான சமையலறை புரட்சியை மிளிர செய்வதாகும்

ஈடுபாடுடைய சம்மந்தப்பட்ட சிறு அளவு உள்ளடக்கம் மூலம், இந்த பிராண்ட் ஆனது நமது அன்றாட வாழ்வில் மிக்ஸர் கிரைண்டர் எந்த அளவுக்கு முக்கிய பங்காற்றுகிறது என்று எடுத்துக்காட்டுகிறது.

TVC மூலம், பிலிப்ஸ் ஆனது இந்தியாவுக்கென்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதன் பரந்த அளவிலான மிக்ஸர் கிரைண்டர் வகைகளை எடுத்துக்காட்டுகிறது

இந்த பிராண்ட் குறைந்த இரைச்சலை கொடுக்கும் HL7713 என்ற ஒரு புதிய மிக்ஸர் கிரைண்டர் வகையை ரூ 4,995 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. 


இந்தியா, 21 ஜூன் 2024: பல இந்திய வீடுகளில், பழைய அதிக சத்தம் தரும் மிக்ஸர் கிரைண்டர் பழுதடையும் வரை அவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இந்த அடிப்படை சிக்கலை உணர்ந்து, வீடு மற்றும் சமையலறை சாதனங்கள் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான வெர்சுனி, வீட்டு உபயோகப் பொருட்களின் பாரம்பரிய பிராண்டான பிலிப்ஸ், ஒவ்வொரு இந்திய குடும்பமும் பழைய துருப்பிடித்த தூசி மிக்சர் கிரைண்டர்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை உடைத்து புதிய புதுமையான விருப்பத்திற்கு மேம்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய நுகர்வோர் பிரச்சாரத்தை வெளியிட்டது. ஒரு பொழுதுபோக்கான மற்றும் தொடர்புடைய வீடியோ மூலம், பிலிப்ஸ் ஆனது குறைந்த இரைச்சல், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நவீன, அழகியல் வடிவமைப்புகளை ஆதரிக்கின்ற அதன் பரந்த அளவிலான மிக்சர் கிரைண்டர்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. இதனுடன், பிராண்ட் ஆனது நவீன இந்திய குடும்பங்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட அதன் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் வரம்பை விரிவுபடுத்துகின்ற வகையில் ஒரு புதிய மிக்சர் கிரைண்டர் சீரிஸான ​​HL7713 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 


பல குடும்பங்கள் தங்களுடைய நம்பகமான பழைய மிக்சி கிரைண்டர்களை வைத்திருக்கிறார்கள், சரியான விலையில் சரியான மாற்றை தேடுவதில் உள்ள பிரச்சினையை தவிர்க்க அடிக்கடி பழுதுபார்ப்பதைத் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், அவர்களின் சமையல் அனுபவங்களை மேம்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு முன்னேற்றங்களை கவனிக்க முடியாது. பிலிப்ஸின் சமீபத்திய TVC, நவீன குடும்பங்களின் வளர்ந்து வரும் தேவைகள் குறித்தான ஆழ்ந்த புரிதலில் இருந்து வெளிப்படுகிறது. அன்றாட சம்பவங்களின் அடிப்படையில், இது மாற்றத்தின் கதையை விவரிக்கிறது, இது மிகவும் திறமையான, சக்திவாய்ந்த மற்றும் அழகியல் கொண்ட சமையலறை உபகரணங்களை நோக்கி செல்வதை குறிக்கிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம், பிராண்ட் ஆனது வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அதை தாண்டிய சாதனங்களுக்கு மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. FCB உடன் இணைந்து கருத்தாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது, பிராண்டின் பிரச்சார வீடியோ சமூக ஊடக தளங்கள் முழுவதும் நேரலையில் உள்ளது மேலும்  - Instagram மற்றும்  Youtube  பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


“ஒவ்வொரு வீட்டிலும், சமையலறை என்பது சமையல் கனவுகள் வரையப்பட்ட ஒரு சித்திரப்பாடம். வெர்சுனியில், நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் இந்த ஆக்கப்பூர்வமான செயல்முறையை மேம்படுத்தலாம் அல்லது தடுக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நவீன கண்டுபிடிப்புகள் எவ்வாறு தங்கள் சமையல் அனுபவத்தை உயர்த்தும் என்பதை அறியாமல் குடும்பங்கள் தங்களுடைய நம்பகமான, ஆனால் பழைய உபகரணங்களை வைத்து கொண்டிருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். எங்களின் சமீபத்திய TVC இன்றைய தேவைக்காக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களுடன் சமைப்பதில் உள்ள மகிழ்ச்சியை மீண்டும் கண்டறிய ஆத்மார்த்தமான வேண்டுகோள். சமையலறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறிய, அடிக்கடி கவனிக்கப்படாத நுணுக்கங்களை அங்கீகரிப்பது குறித்தானது. வெர்சுனி வெறும் செயல்பாட்டுடன் மட்டுமல்லாமல், எங்கள் நுகர்வோரின் வளர்ந்து வரும் லட்சியங்களுடன் பிரதிபலிக்கும் தயாரிப்புகளைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ளது. அவர்களின் தேவைகளுக்கு இணக்கமாக இருப்பது மூலம், நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அவர்களின் சமையல் பயணத்தை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், சிக்கனமானதாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாக இருப்பதை உறுதிசெய்கிறோம் ", என்று வெர்சுனி இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பூஜா பெய்ட் கூறினார்


புதிய TVCயின் அறிமுகத்துடன், பிலிப்ஸ் அதன் சமீபத்திய அறிமுகமான HL7713 புதிய சக்திவாய்ந்த 1000-வாட் மிக்ஸர் கிரைண்டர் சீரிஸையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த மேலும் ஒரு தயாரிப்பு வரிசை அல்ல; இது சமையலறை தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியாகும், இது நிகரில்லாத செயல்திறன் மற்றும் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1000-வாட் மிக்ஸர் கிரைண்டரில் ஒரு உறுதியான மோட்டார் மற்றும் பிளேடு வடிவமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது கரம் மசாலா மற்றும் மஞ்சள் போன்ற கடினமான மசாலாக்களையும் 90 வினாடிகளில் எளிதில் அரைக்கும். பழ வடிகட்டி ஆனது பழ ரசம், தேங்காய் அல்லது பாதாம் பால் மற்றும் புளி ரசம் ஆகியவற்றை பிரித்தெடுக்க துணை செய்கிறது, இது கடினமான பழங்களுடன் கூட பிட்கள் மற்றும் துண்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த சீரிஸில் மூன்று/நான்கு லீக்-ப்ரூஃப் ஜார்கள் உள்ளன: மாவு அரைக்க ஒரு 1.75லி ஈரமான ஜார், மசாலா அரைக்க ஒரு 1.0லி உலர் ஜார் மற்றும் பல்வேறு சட்னிகள் மற்றும் டிப்களுக்கு 0.5லி சட்னி ஜார். மிக்ஸர் கிரைண்டர் நவீன அழகியலையும், எளிதில் சுத்தம் செய்வதற்கும், ரோட்டரி நாப் கட்டுப்பாட்டிற்குமான விளிம்பு இல்லாத வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது தறபோதுள்ள சமையலறையிலும் தடையின்றி பொருந்துவதை உறுதி செய்கிறது.


புதிய மிஸர் கிரைண்டர் சீரிஸ் அனைத்து முன்னணி ரீடெயில் சேனல்களிலும் கிடைக்கும் மற்றும் 2, 3 மற்றும் 4 ஜார்களின் மூன்று வகைகளில் வருகிறது. ரூ 4,995 விலையில் தொடங்குகிறது, வாடிக்கையாளர்கள் இப்போது பிலிப்ஸின் சமீபத்திய புதுமைகளுடன் தங்கள் சமையலறைகளை மேம்படுத்தலாம் மற்றும் தினசரி மிக்ஸர் கிரைண்டர் பிரச்சினைகளுக்கு குட்பை சொல்லலாம். புதிய பிலிப்ஸ் மிக்ஸர் கிரைண்டரை வாங்கினால், வாடிக்கையாளர்கள் 5000 ரூபாய் வரை கேஷ்பேக் பெறக்கூடிய அற்புதமான சலுகையையும் இந்த பிராண்ட் அறிவித்துள்ளது.


பிலிப்ஸின் மிக்ஸர் கிரைண்டர்கள் 100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, குறிப்பாக இந்திய நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. உள்ளூர் நுண்ணறிவுகளுடன் உலகளாவிய நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம், பிலிப்ஸ் தொடர்ந்து செயல்படும் வகையில் கட்டமைக்கப்பட்ட உபகரணங்களை வழங்கி, நாட்டில் நம்பகமான பிராண்டாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது. 


Popular posts from this blog

Doctors Successfully Perform India's First Robotic CRS with HIPEC for Peritoneal Surface Cancer

REMEMBERING RABINDRANATH TAGORE ON HIS 163rd BIRTH ANNIVERSARY

Mark your calendars: ZEE5 drops the trailer for their Bengali series, Paashbalish, promising a ride of emotions