Monday, June 3, 2024

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ‘உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில்’ நிதி விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ஒரு புதுமையான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது

 உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ‘உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில்’ நிதி விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ஒரு புதுமையான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது

 

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கான உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (உஜ்ஜீவன் SFB), ஆரோக்கியமான நிதித் தேர்வுகளை மேற்கொள்ளத் தனிநபர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில்’ ஒரு தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளது. எங்களின் முன்முயற்சி மக்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை சிந்திக்க வைப்பதாகும்.


இந்த விழிப்புணர்வுச் செய்தி சரியான பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, கார்ப்பரேட் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், நுக்காடுகள் போன்ற அதிக நபர்கள் வருகை தரும் புகை மண்டலங்களில் ஆக்கப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட தோற்றமளிக்கும் சிகரெட் பெட்டிகளை உஜ்ஜீவன் SFB விநியோகிக்கிறது. ஒவ்வொரு சிகரெட் பொட்டலமும் ‘அதிகமாக சேமிப்பதற்கான ஆரோக்கியமான பழக்கம்’ என்ற செய்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நிதி ஆரோக்கியத்திற்காக, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் சேமிப்புகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறப்பது போன்ற விருப்பங்களை ஆராய, பெட்டிகளில் உள்ள அட்டைகள் மக்களை ஊக்குவிக்கும்.


இந்த முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த திரு. லக்ஷ்மன் வேலாயுதம் (தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, உஜ்ஜீவன் SFB) அவர்கள், ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ என்பது மக்களுக்கு மற்றொரு தேர்வை வழங்குவதாகும். அவர்கள் விழிப்புணர்வோடு செய்யக்கூடிய தேர்வுகளை நினைவூட்டுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். 'சேமிப்புப் பழக்கம்' மற்றும் 'செல்வத்தை உருவாக்குதல்' பற்றிய எங்கள் செய்திகள், அவர்களின் தனிப்பட்ட வெளியில் இடையூறுசெய்யாமல், விரும்பிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.


மே 29, 2024 இல் தொடங்கும் இந்த மூன்று நாள் பிரச்சாரம், மும்பை, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத், அசாம், புவனேஸ்வர், பாட்னா, காசியாபாத், நொய்டா, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இந்தியாவின் 30 நகரங்களில் 100+ நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புற இடங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும்.


About Ujjivan Small Finance Bank

Ujjivan Small Finance Bank Limited is one of the leading small finance banks. Ujjivan Small Finance Bank began operations in February 2017 and currently serves 86+ lakh customers through its 752 branches and 22,000+ employees spread across 26 states and union territories in India. Gross loan book stands at ₹29,780 crore with a deposit base of ₹31,462 crore as of Mar 31, 2024. The bank remains committed to serving unserved and underserved segments through financial and digital inclusion, as a mass-market bank. The strengthened digital interfaces across regions and languages have empowered Ujjivan SFB customers to seek timely and easy access to finance at all times.