Sunday, June 30, 2024

இந்தியாவின் 45% மின் வாகனங்கள் (EV) விற்பனை தென்னிந்தியாவில் நிகழ்கிறது

இந்தியாவின் 45% மின் வாகனங்கள் (EV) விற்பனை தென்னிந்தியாவில் நிகழ்கிறது: ஆய்வறிக்கை

பல OEM நிறுவனங்கள் மற்றும் பேட்டரி / செல் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி  & மேம்பாடு மையமாக தமிழ்நாடு திகழ்கிறது 

இந்தியாவின் மிகப்பெரிய மின்வாகன கண்காட்சி  & மாநாடு நிகழ்வான இந்தியா EV 2024 – ல் முதன்மையான மின் வாகன பிராண்டுகள் மற்றும் பேட்டரி உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்பு 


சென்னை: தமிழ்நாடு: 29 ஜுன், 2024: இந்தியாவின் மிகப்பெரிய மின் வாகன கண்காட்சி மற்றும் மாநாடான இந்தியா EV 2024 என்பதன் நான்காவது பதிப்பு ஜுன் 29 மற்றும் 30 தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவிருக்கிறது.  புத்தாக்க தீர்வுகளை கண்டறிவது, பொலிவுறு நகரங்களில் நிலைப்புத்தன்மையுள்ள மின்வாகன ஒருங்கிணைப்பு குறிக்கோளை அடையவும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை இணைத்திருக்கின்ற ஒரு எதிர்கால திட்டத்தை உருவாக்குவதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.  இந்நாட்டின் மின்வாகன துறைக்கான இலக்குகள், போக்குகள் மற்றும் கண்ணோட்டத்தை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு அறிக்கை, இந்தியா EV 2024 நிகழ்வையொட்டி வெளியிடப்படுகிறது.  ஃபிராஸ்ட்  & சுல்லிவன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ஆய்வறிக்கை “இந்திய மின்வாகன சந்தை மீதான மீள்பார்வை: போக்குகள் மற்றும் எதிர்காலத்திற்கான கண்ணோட்டம்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 


சிட்ராய்ன் மற்றும் ஜியோ – BP ஆகியோரின் கூட்டாண்மை ஒத்துழைப்போடு நடை பெறும் இந்தியா EV 2024 நிகழ்வானது, ஆந்த்ரபிரனார் இந்தியா என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  LUBI மற்றும் EV லூப்ரிகண்ட் ஆகியவை இந்நிகழ்வின் பிற ஸ்பான்சர்களாகும்.  இத்தொழில்துறையைச் சேர்ந்த மதிப்புமிக்க அமைப்புகள் மற்றும் கனரக தொழிலகங்கள் அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம், கைடன்ஸ் தமிழ்நாடு, இந்தோ - இத்தாலியன் வர்த்தக சபை ARAI (இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம்) மற்றும் ICAT (ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம்) ஆகியவற்றின் மேலான ஆதரவுடன் இந்நிகழ்வு நடைபெறுகிறது. 


தமிழ்நாடு அரசின் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. S.S. சிவசங்கர், இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.  கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அலுவலர் திரு. V. விஷ்ணு ஐஏஎஸ் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். ஜியோ BP – ன் தலைமை செயல் அலுவலர் திரு. ஹரீஷ் மேத்தா, சிட்ராய்ன் இந்தியாவின் பிராண்டு இயக்குனர் திரு. சுஷிர் மிஸ்ரா, இந்தோ – இத்தாலியன் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர். சௌரவ் மெஸெட்டி, ஐஐடி மெட்ராஸ் – ன் பேராசிரியர் டாக்டர். அசோக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு மின்சார வாகனங்களின் எதிர்காலம் குறித்து தங்களது  தொலைநோக்கு பார்வைகளையும் மதிப்புமிக்க கருத்தாக்கங்களையும் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். 


2000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த இருநாட்கள் மாநாட்டு நிகழ்வில் 120-க்கும் அதிகமான நிறுவனங்கள் காட்சிப்படுத்துபவர்களாக பங்கேற்கின்றனர். மேலும் 55+ புகழ்பெற்ற பேச்சாளர்களின் உரைகள் 10+ நிபுணத்துவ குழுக்களின் விவாதங்கள், B2B வட்டமேஜை நிகழ்வுகள், புதிய தயாரிப்புகளின் அறிமுகங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் அமர்வுகள் ஆகியவை இந்த மாநாட்டு நிகழ்வின் சிறப்பம்சங்களாக இருக்கும். மாநாட்டின் முதல் நாளன்று மின்வாகனங்கள் துறையில் ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய விரிவாக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும். இரண்டாவது நாளன்று, பேட்டரி தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் தமிழ்நாட்டின் மின்வாகன தயாரிப்பின் முக்கியத்துவம் மற்றும் முதன்மை நிலை குறித்து விவாதங்களும், 


கலந்துரையாடலும் நடைபெறும். இம்மாநாட்டின் ஒரு அங்கமாக நடைபெறும் கண்காட்சி நிகழ்வில் விவாதிக்கப்படும் கருத்தாக்கங்களுள், நிதி உதவி, சார்ஜிங் செயல்பாட்டை தரநிலைப்படுத்தல், மின்வாகனங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், செமிகண்டக்டர்கள் கிடைக்கும் நிலை மற்றும் இந்தியாவில் மின்சார போக்குவரத்தின் எதிர்காலம் ஆகியவை இடம்பெறுகின்றன.


இந்தியாவின் மின்வாகன சந்தை மீது ஃபிராஸ்ட் & சுல்லிவன்-ன் ஆய்வறிக்கையின் சிறப்பம்சங்கள்:


2024-ம் ஆண்டின் இறுதிக்குள்  பேட்டரியால் இயக்கப்படும் 123,000 மின்சார வாகனங்கள் (பயணியர் கார்கள்) இந்தியாவில் விற்பனை செய்யப்படக் கூடும். 2023-ம் ஆண்டில் விற்பனையான ~83,000 யூனிட்களோடு ஒப்பிடுகையில் முந்தைய ஆண்டைவிட 47.9% வளர்ச்சியாக இது இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. 

64% சந்தை பங்குடன் டாடா மோட்டார்ஸ் இத்துறையில் முதன்மை வகிக்கிறது; 2023-ம் ஆண்டில் மிக அதிகமாக விற்பனையாகும் மின்சார வாகனம் என்ற பெருமையை டாடா நெக்ஸா EV பெறுகிறது. 

இந்நாட்டில் இவ்வாகனங்கள் விற்பனையில் ஏறக்குறைய பாதி இப்பிராந்தியத்திலிருந்து வருவதால் இந்தியாவின் மின்வாகன விற்பனையில் தென்னிந்தியா முதலிடம் வகிக்கிறது. 

OEM நிறுவனங்கள், பாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், பேட்டரி/செல் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின்சார வாகனங்களது விற்பனையின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செயல்பாடுகளுக்கு மைய ஆற்றல் அமைவிடமாக தமிழ்நாடு மாநிலம் திகழ்கிறது. 

தற்போது தமிழ்நாட்டில் ஹுண்டாய் மோட்டார் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் ஆகிய நிறுவனங்கள் பயணியருக்கான மின்சார வாகனங்களின் தயாரிப்பை தொடங்கியிருக்கின்றன. ரெனால்டு-நிஸான் மற்றும் BMW போன்ற பிற முக்கியமான ஆட்டோமோட்டிவ் நிறுவனங்கள் இம்மாநிலத்தில் விரைவில் மின்வாகனங்களுக்கான தயாரிப்பில் இறங்கி அவைகளை தயாரித்து வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றன. 

பேட்டரி மட்டுமன்றி மிக முக்கியமான மின் வாகன பாகங்கள் உட்பட 2030-ம் ஆண்டிற்குள் மின்வாகன தயாரிப்பிற்கு அவசியமான 60-70% பாகங்களை உள்நாட்டு அளவிலேயே தயாரிப்பதை OEM நிறுவனங்கள் இலக்காகக் கொண்டிருக்கின்றன.


இந்தியா EV 2024  நிகழ்வின் டைட்டில் பார்ட்னராக சிட்ராய்ன் இடம்பெற்றிருக்கும் நிலையில், சிட்ராய்ன் இந்தியாவின் பிராண்டு இயக்குநர் திரு. சிஷிர் மிஸ்ரா மாநாட்டின் சிறப்புரையை வழங்கினார். இந்தியாவில் உகந்த மின்சார வாகன சூழலமைப்பை கட்டமைப்பது குறித்து தனது சிறப்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “புத்தாக்கம், உட்கட்டமைப்பு வசதிகள் மீது முதலீடு மற்றும் ஆதரவான கொள்கைகளின் செயலாக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் வழியாக மின்சார வாகனங்கள் தொழில்துறையில் உலகளவில் தலைவராக தன்னை இந்தியாவால் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மீது நாம் சிறப்பான கூர்நோக்கம் செலுத்த வேண்டும், தொழில்துறை பங்காளர்களோடு ஒத்துழைப்பை மேற்கொண்டு நீடித்த நிலைப்புத்தன்மை மீது தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். 


இந்தியா  EV  கண்காட்சி நிகழ்வின் 4-வது பதிப்பு, உலகளாவிய ஆட்டோமோட்டிவ் தொழில்துறையில் மின்சார வாகனங்களுக்கான  முக்கியத்துவத்துவம் வளர்ந்து வருவதற்கு ஒரு சாட்சியமாக திகழ்கிறது. தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து என்ற இலக்கை நோக்கி முன்னோக்கி செல்வதற்கு தொழில்துறையின் தலைவர்கள், முதன்மையான உற்பத்தி நிறுவனங்கள், சப்ளையர்கள் மற்றும் ஆர்வலர்களை இந்நிகழ்விற்காக ஓரிடத்தில் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அதிக உற்சாகமடைகிறோம். சென்னை மாநகரில் இரண்டாவது முறையாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது  ஆட்டோமோட்டிவ் துறையில் புத்தாக்கம் மற்றும் நீடிப்புத்தன்மையுள்ள முன்னேற்றத்திற்கான முதன்மை மையமாக இம்மாநகரம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. காட்சிப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களின்  அணிவரிசை, காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிக நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிற முன்னேற்றங்களையும்,  மேம்பாடுகளையும் கண்டு நேரடி அனுபவம் பெறும் தனித்துவமான வாய்ப்பை இதில் கலந்து கொள்பவர்கள் பெறுவார்கள்” என்று பிரான்சைஸ்இந்தியா.காம் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் திரு. சச்சின் மரியா கூறினார். 


இந்தியா EV 2024 நிகழ்வு மீதான  அதிக தகவலுக்கு காணவும்: https://www.indiaev.org/