சென்னைஸ் அமிர்தா International Aviation College, University college of Aviation (UniCAM), Malaysia உடன் (MOU) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சென்னை, மே 17, 2024
சென்னை நகரின் மையப்பகுதியான மவுண்ட் ரோட்டில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக, 40000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உட்கட்டமைப்புடன் அற்புதமான லேப் வசதியுடன் உள்ள சென்னைஸ் அமிர்தா 100கும் அதிகமான நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களை கொண்ட உலகப் புகழ்பெற்ற விமானப் பல்கலைக்கழகமான Univeristy college of Aviation(UniCAM) உடன் புரிந்துணர்வு ஒப்புதலை அறிவித்தது.
இன்று கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) கீழ், தகுதியுடைய சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரி மாணவர்கள் தங்கள் மூன்று வருட Bsc Aviation மற்றும் BBA Airline and Airport Management படிப்பில் முதல் இரண்டு வருடம் சென்னையிலும் மூன்றாம் ஆண்டு படிப்பின் போது மலேசியாவில் ஆறு மாத காலம் university college of Aviation யில் வகுப்பறைக் கல்வியும் ஆறு மாத காலம் மலேசியன் சர்வதேச Airportல் பயிற்சியும் பெறுவார்கள். இதனுடன் மாணவர்களுக்கு ஹிந்தி ,Grooming, Personality development, IATA Certification, Air ticketing ஆகியவை மதிப்பு கூட்டு பயிற்சிகளாக வழங்கப்படும் பயிற்சிகள். மேலும் சென்னையில் படிக்கும் பொழுது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 8000 முதல் 15000 வரையிலான சம்பளத்துடன் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
சென்னைஸ் அமிர்தா இண்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன், அவர்கள் கூறுகையில், சென்னைஸ் அமிர்தா நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மிக பெரிய மைல்கல் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "விமானக் கல்வியில் மாணவர்கள் படிக்கும் போது சர்வதேச விமான நிலையங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் முதல் கல்லூரி நிறுவனம் சென்னைஸ் அமிர்தா தான் என்றும் கூறினார்.
University College of Aviation(UniCAM), மலேசியாவின் தலைவர் மற்றும் Asia Aviation President Prof Dr.Captain Ab Manan Bin Mansor கூறுகையில் தான் சென்னைல் அமிர்தவுடன் இணைவதில் மிகவும் மகிழிச்சியடைவதாகவும் இந்த ஒப்புதலினால் மாணவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பயிற்சியடையும் வாய்ப்பினை பெறுவார்கள் என்றார் .
கையொப்பமிடும் நிகழ்ச்சியில் University College of Aviation (UniCAM), Malaysia சார்பில் Madam Salina Binti Ahmad Advisor UniCAM மற்றும் Assoc PRof Dr.Faiz Aizat Bin Ab Manan- CEO UniCAM ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக திரு. கலை அரசன், நிறுவனர் தர்ஷல் அகாடமி, திரு. ஜெய்நானக் சிங், நிறுவனர் ட்ரைனிங் மைண்ட்ஸ் கலந்துகொண்டனர். இவர்களுடன் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் பிரமுகர்கள் திருமதி.கவிதா நந்தகுமார், CEO, Dr. மில்டன் ,Dean உடன் இருந்தனர்.
விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9363300400