Thursday, May 16, 2024

கருப்பை புற்றுநோய்க்கு இந்தியாவின் முதல் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிவிக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

கருப்பை புற்றுநோய்க்கு 

இந்தியாவின் முதல் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிவிக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் 


இந்தியாவில் முதன் முறையாக, இரண்டு நோயறிதல் உறுதி செய்யப்பட்ட நேர்வுகளில் HIPEC உடன் ரோபோட்டிக் சிஆர்எஸ் அறுவைசிகிச்சை 

சென்னை: மே 16, 2024: கருப்பை புற்றுநோய்க்கு ரோபோட்டிக் உதவியுடனான அறுவைசிகிச்சை செயல்திட்டம் தொடங்கப்பட்டிருப்பதை தெற்காசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய புரோட்டான் தெரபி மையமான அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC), பெருமிதத்துடன் அறிவிக்கிறது.  அத்துடன் முற்றிய நிலையிலிருந்த கருப்பை புற்றுநோயின் இரு தனித்துவமான நேர்வுகளில் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி (HIPEC) என்பதுடன் இந்தியாவின் முதல் ரோபோட்டிக் சைட்டோரிடக்டிவ் அறுவைசிகிச்சை (CRS) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பதையும் அது அறிவித்திருக்கிறது.  இந்த கடுமையான நோயை எதிர்த்துப் போராடி வந்த நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை மற்றும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தரநிலைகளையும் வழங்கும் இந்த மருத்துவ மைல்கல் நிகழ்வுகள் இப்பிராந்தியத்தின் புற்றுநோய்க்கான சிகிச்சை சூழலமைப்பில் பெருமைப்படுவதற்குரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.  


கௌஹாத்தியைச் சேர்ந்த 48 வயதான திருமதி. தாரா (வேண்டுகோளின் பேரில் பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி, பரிவிரி மற்றும் உதரமடிப்பில் பிற உறுப்புகளிலிருந்து பரவியிருக்கும் கருப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புதிய துணை கீமோதெரபியின் மூன்று சுழற்சிகளைப் பெற்றதற்குப் பிறகு அப்பெண்ணின் புற்றுநோய் சுமை கணிசமாக குறைக்கப்பட்டது.  இதையடுத்து, ரோபோட்டிக் உதவியுடன் ஒரு சிக்கலான இடைவெளி சைட்டோரிடெக்டிவ் அறுவைசிகிச்சை இப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டது.  விரிவான பல தொடர் அறுவைசிகிச்சை, இடையீட்டு நடவடிக்கைகள் இந்த மருத்துவ செயல்முறைகளில் இடம்பெற்றிருந்தன.  இறுதியில் மிகத்துல்லியமான வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் மிகவும் உகந்த அளவில் மருந்து வினியோகத்தை உறுதி செய்கின்ற ஒரு மூடப்பட்ட உத்தியைப் பயன்படுத்துகின்ற HIPEC என்ற கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. கருப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறுகின்ற காலத்தின்போது மார்பக புற்றுநோயும் இவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.  எனவே, கருப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை அமர்விலேயே, மார்பக புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சையும் இவருக்கு மேற்கொள்ளப்பட்டது.  மிகக் குறைவான பக்கவிளைவு பாதிப்புகளுடன் இந்த இரு அறுவைசிகிச்சைகளும் செய்யப்படுவதை ரோபோட்டிக் சாதனத்தின் பயன்பாடு ஏதுவாக்கியது.  இதைத்தொடர்ந்து மூன்று நாட்களில் இந்நோயாளி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

சென்னையைச் சேர்ந்த 40 வயதான, திருமதி. அமலா (வேண்டுகோளுக்கிணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி கருப்பையக சுவரில் வெளிப்புற இணைப்புத்திசு சாற்றுப்புற்று என்று அழைக்கப்படும் ஒரு அரிதான புற்றுக்கட்டி உருவானதையடுத்து, அதற்கான சிகிச்சையை இங்கு பெறுவதற்காக வந்தார்.  இவருக்கும் அதேபோல விரிவான சைட்டோ ரிடக்டிவ் அறுவைசிகிச்சை ரோபோ சாதனத்தின் உதவியுடன் செய்யப்பட்டது.  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு திசுக்களும், உறுப்புகளும் இச்சிகிச்சை நிகழ்வில் அகற்றப்பட்டன.  சிக்கலான புற்றுநோய் நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிப்பதில் ரோபோட்டிக் அறுவைசிகிச்சையும், பன்முகத்திறனையும் மற்றும் செயற்பரப்பு அளவையும் இந்த சிகிச்சைகள் நேர்த்தியாக நிரூபித்திருக்கின்றன.  

10 நாட்கள் மருத்துவமனையில் தங்குவது அவசியப்படும் வழக்கமான திறந்தநிலை சிஆர்எஸ் உடன் ஒப்பிடுகையில், ரோபோட்டிக் உதவியுடன் இடைவெளி சைட்டோரிடெக்டிவ் அறுவைசிகிச்சையில் மூன்று நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்குவது தேவைப்படும்.  மிகக்குறைவான இரத்தஇழப்பே ஏற்படும் இரத்தஇழப்பை அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி மேலாண்மைக்கான தேவையும் குறைவாக இருக்கும். அடிவயிற்றில் மறைவாக இருக்கும் பல்வேறு பகுதிகளை அறுவைசிகிச்சை நிபுணர்கள் துல்லியமாக சென்றடைவதற்கு அங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களையும், உறுப்புகளையும் அகற்றவும் இந்த ரோபோட்டிக் சாதனம் அவர்களுக்கு உதவுகிறது.  உடலின் கழிவு வெளியேற்ற செயல்பாட்டை விரைவாக மீண்டும் நோயாளிகள் தொடங்குவதற்கு இது வகை செய்கிறது.  துணைச்சிகிச்சைகளை உரிய காலஅளவில் தொடர்வது உட்பட, இயல்பான நடவடிக்கைகளை நோயாளிகள் வேகமாக மீண்டும் தொடங்குவதற்கும்  இச்சிகிச்சை முறை உதவுகிறது.  உடலுக்குள் மிகக் குறைவான ஊடுருவல் செய்யும் இத்தொழில்நுட்பமானது, நோயாளிக்கு சௌகரியத்தையும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறனையும் அதிகரிக்கிறது; அத்துடன், அறுவைசிகிச்சையின் சிறந்த விளைவுகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.  

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். பி. வெங்கட், இது தொடர்பாக கூறியதாவது: “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் எமது செயல்திறன்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.  மிகச் சிறப்பான துல்லியத்தையும், நெகிழ்வுத்திறனையும் வழங்குகின்ற மிக நவீன ரோபோட்டிக் சாதனங்களை இந்த முற்றிய கருப்பை புற்றுநோய்க்கான இரண்டு அறுவைசிகிச்சை நிகழ்வுகளிலும் நாங்கள் பயன்படுத்தினோம்.  ஒன்றுக்கும் மேற்பட்ட பல உறுப்பு அகற்றல்கள் மற்றும் HIPEC – ஐ உள்ளடக்கிய இந்த அறுவைசிகிச்சையின் மிக நுட்பமான தன்மையானது, ரோபோட்டிக் தொழில்நுட்பம் வழங்குகின்ற சிறப்பான துல்லியம் மற்றும் கைவினைத்திறனை வெளிப்படுத்துகிறது.  குறிப்பிட்ட இந்த அறுவைசிகிச்சை நேர்வுகளில் நோயாளியின் நீண்டகால குணமடைதல் நோக்கத்தை பூர்த்திசெய்ய ஆரோக்கியமான திசுக்களை அகற்றாமல் தக்கவைத்திருக்கும் அதே வேளையில், இந்த அளவிற்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களையும், செல்களையும் அகற்றுவதற்கான திறன் மிக முக்கியமானது.” 

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல்  நிபுணர் டாக்டர். பிரியா கபூர் கூறியதாவது: “HIPEC உடன் ரோபோட்டிக் சைட்டோரிடெக்டிவ் அறுவைசிகிச்சை என்ற புதிய அணுகுமுறை, எமது நுட்பமான திட்டமிடலுக்கும் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை வழங்கும் சிறப்பான துல்லியத்திற்கும் ஒரு சாட்சியமாகத் திகழ்கிறது.  எமது நோயாளிகளுக்கு, குறைவான ஊடுருவல் உள்ள மருத்துவ செயல்முறைகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வெப்பநிலையில் புற்றுக்கட்டிப் பரவல் உள்ள இடத்திற்கே நேரடியாக இலக்கை நோக்கிய கீமோதெரபி வழங்கல் ஆகியவற்றின் பலன்கள் கிடைப்பது இதனால் உறுதி செய்யப்படுகிறது.  திறந்தநிலை அறுவைசிகிச்சை உடன் தொடர்புடைய வழக்கமான சிக்கல்களை குறைக்கும் அதே வேளையில், சிகிச்சையின் பயனளிக்கும் திறனை இந்த அணுகுமுறை கணிசமாக மேம்படுத்துகிறது.” 

நோயாளியான திருமதி. அமலா பேசுகையில், “மிகச்சிறிய கீறல் மற்றும் குறைவான இரத்த இழப்பின் காரணமாக, அறுவைசிகிச்சைக்குப் பிறகு விரைவாக மீண்டு வர இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை முறை எனக்கு உதவியிருக்கிறது.  இந்த அறுவைசிகிச்சைக்கு உடன்படவும் மற்றும் தைரியமாக அதற்கு தயாராவதற்கும், செய்யப்படவிருந்த மருத்துவ செயல்முறைகள் பற்றி மருத்துவ நிபுணர்கள் விளக்கிக் கூறியது எனக்கு உதவியது.” என்று கூறினார். 

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் புற்றுநோய்க்கான சிகிச்சையை தொடர்ந்து மேம்படுத்தி வழங்குவதில் கொண்டிருக்கும் பொறுப்புறுதியானது, சமீபத்திய நவீன தொழில்நுட்பத்தால் வலுவாக்கப்பட்டிருக்கிறது.  மருத்துவ சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இம்மருத்துவமனையின் நிபுணர்கள் தொடர்ந்து முன்னோடித்துவமாக செயல்படுத்துவதனால் உடல்நல பராமரிப்பிலும், புற்றுநோய்க்கான சிகிச்சையில் புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதிலும் தனது தலைமைத்துவ நிலையை அப்போலோ புரோட்டான் வலுப்படுத்தி வருகிறது.  தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறுவைசிகிச்சைகள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையின் பலனை நோயாளிகளுக்கு வழங்குவதிலும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையின் புதிய தர அளவுகோல்களை நிறுவுவதில் இம்மையம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு சான்றாக திகழ்கின்றன.  

#புற்றுநோயை வெற்றி காண்பது 

அப்போலோ புரோட்டான் கேன்சர்  சென்டர் (APCC), சென்னை, இந்தியா குறித்து:


அப்போலோ புரோட்டான் சென்டர் என்பது, மிக நவீன புற்றுநோய் சிகிச்சை மையமாகும்.  இது, தெற்காசியா மற்றும் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெரபி சென்டர் என்ற பெருமைக்குரியது. JCI அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது.  புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான APCC – ன் அணுகுமுறையின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் வலுவான பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல்தளம் மற்றும் ஒரு புற்றுநோய் மேலாண்மை குழுவாக (CMT) உருவாக ஒன்றிணையும் அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள்.  ஒவ்வொரு CMT – யும், அவர்களது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது.  இந்தியாவில் முதல் மற்றும் ஒரே அமைவிடத்திற்குரிய – ரோபோட்டிக் புற்றுநோயியல் செயல்திட்டம் என்ற இதன் சமீபத்திய அறிமுகம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் திறனை இன்னும் சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறது.