ஹலோ மென்டார் நடத்தும் மெடிக்கல் எக்ஸ்போ 2024 சென்னை 2024-25

ஹலோ மென்டார் நடத்தும்

மெடிக்கல் எக்ஸ்போ 2024 சென்னை 2024-25


சென்னை, மே 26

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெடிக்கல் எக்ஸ்போ 2024, ஹலோ மென்டரால் நடத்தப்பட்டது, அதன் சென்னை பதிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்வு தமிழகத்தின் நீட் தேர்வெழுத விரும்புபவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.


மெடிக்கல் எக்ஸ்போ 2024 மே 26, ஞாயிற்றுக்கிழமை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மருத்துவ சேர்க்கை செயல்முறையின் சிக்கல்களை பற்றி விளக்கியது மற்றும் விரும்பிய மருத்துவ சீட்களை பெறுவதற்கு மிகவும் தேவையான வழிகாட்டுதலை வழங்கியது.


போட்டி நிறைந்த மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்ற தமிழ்நாடு, நீட் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை குறித்து சரியான நேரத்தில் சரியான தகவல்களைக் கோருகிறது. ஹலோ மென்டர் மெடிக்கல் எக்ஸ்போ இந்த முக்கியமான தேவையில் கவனம் செலுத்தியது, 5000க்கும் மேற்பட்ட நீட் UG ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வின் மூலம் பல தகவல்களையும் தெளிவும் பெற்றனர். 


எக்ஸ்போ மூன்று முக்கிய அமர்வுகளாக கட்டமைக்கப்பட்டது


1. கருத்தரங்கு: NEET கவுன்சிலிங் குறித்த வழிகாட்டுதல் மற்றும் அமர்வுகளுடன் தொடங்கியது


நீட் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை பற்றிய விரிவான வழிகாட்டுதல் அமர்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. ஹலோ மென்டாரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, திரு. விக்ரம் குமார் மற்றும் அமைப்பின் கற்றல் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் திரு.சுஜீத் ஜா கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர்.


இந்த வழிகாட்டுதல் அமர்வுகள் நீட் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை செயல்முறைகளை முழுமையாக ஆய்வு செய்து விவரித்தது. பங்கேற்பாளர்களுக்கு தெளிவான, படிப்படியான வழிகாட்டுதல் மற்றும் முக்கியமான புள்ளிவிவரங்கள், பதிவு முதல் இறுதி இருக்கை ஒதுக்கீடு வரையிலான போக்குகள் குறித்து விளக்கினர்.


74 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 11,600+ எம்பிபிஎஸ் இடங்களுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது போன்ற முக்கிய கூறுகள் இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. 35 ஆலோசனை வகைகள் மற்றும் 800 இடஒதுக்கீடு வகைகள் உட்பட அதிகம் அறியப்படாத வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த அமர்வு அறிமுகப்படுத்தி விளக்கியது. கருத்தரங்கிற்குப் பிறகு, ஹலோ மென்டாரின் 20க்கும் மேற்பட்ட கவுன்சிலிங் நிபுணர்களுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 20க்கும் மேற்பட்ட சாவடிகளில் அவர்களை நேரடியாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம்.


2. ஒன் டூ ஒன் அமர்வுகளில் தனித்தனியான வழிகாட்டுதல்கள் : 


பூத்களில் 20க்கும் மேற்பட்ட நீட் கவுன்சிலிங் நிபுணர்களுடன் கலந்துகொள்பவர்கள் நேரடியாக கலந்துரையாடலாம். ஹலோ மென்டாரின் நிபுணர்கள் கல்லூரி கட்-ஆஃப்கள், கட்டணக் கட்டமைப்புகள், தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிக்கான அளவுகோல்கள் பற்றிய தனிப்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.


இந்த தனிப்பயனாக்கப்பட்ட கவனம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் மருத்துவ பாதைகள் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவியது. NEET ஆர்வலரான ப்ரியா, தனது ஒன் டூ ஒன் அமர்வுக்கு பிறகு, "வழிகாட்டி அமர்வுகள் எனக்கு ஒரு பெரிய மாற்றமாக உள்ளது. NEET கவுன்சிலிங் செயல்முறை குறித்து நான் இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறேன்!".


மருத்துவராக வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் அங்கித், அமர்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "அமர்வில் வழங்கப்பட்ட சான்றுகள் நம்பமுடியாத அளவிற்கு உதவிகரமாக இருந்தன. சேர்க்கைப் பற்றிய எனது கவலை இப்போது மிகவும் குறைந்துள்ளது. இதற்கு உதவிய ஹலோ மென்டாருக்கு நன்றி!”

ஒன் டூ ஒன் அமர்வைத் தொடர்ந்து குழு கலந்துரையாடல் தமிழ்நாட்டின் நீட் தேர்வு எழுத இருப்போர் மற்றும் அவர்களின் பெற்றோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

3. குழு அமர்வு: உங்கள் மருத்துவ எதிர்காலத்திற்கான பாதையை ஒளிரச் செய்தல் -


குழு அமர்வில், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மருத்துவக் கல்வி மற்றும் வேலையின் பல காரணிகள் குறித்து நிபுணர்கள் கலந்துகொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 10 க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் தங்களின் நுண்ணறிவுடன் பார்வையாளர்களுக்கு பல தகவல்களை வழங்கினர்.


மெடிக்கல் எக்ஸ்போ 2024 சென்னை குழு பின்வரும் பிரபல பேச்சாளர்களை கொண்டிருந்தது:


- ஸ்ரீ விக்ரம் குமார், ஹலோ மென்டாரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. அவரது பார்வை 30,000+ மாணவர்களை சாதகமாக பாதித்துள்ளது மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட ஆர்வலர்களுக்கு அவர்களின் கனவு மருத்துவக் கல்லூரிக்கு வழிகாட்டியுள்ளது.


- திரு. சுஜீத் ஜா, ஹலோ மென்டாரின் கற்றல் மற்றும் மேம்பாடு இயக்குனர், அனுபவமிக்க உளவியலாளர் மற்றும் NEET கவுன்சிலிங்கில் அரை தசாப்தத்திற்கும் மேலான அனுபவமுள்ள அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். ஆரக்கிள், EMC2 ஆகிய கார்பரேட்களில் பயிற்சி மற்றும்ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், இந்திய விமானப்படை அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். 


-டாக்டர். கோவிந்த் எஸ் மிட்டல், தெரபியா பெங்களூரில் உள்ள தோல் மருத்துவ ஆலோசகர் மற்றும் தோல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். டாக்டர். மிட்டல் பிஎம்சிஆர்ஐ-ல் எம்பிபிஎஸ் மற்றும் சிஎம்சி வேலூரில் எம்டி-டிவிஎல் பட்டம் பெற்றவர் மற்றும் உலகளவில் லேசர் சிகிச்சையில் பல்வேறு பெல்லோஷிப் மற்றும் அராய்ச்சிகளை முடித்துள்ளார்.


- டாக்டர் சி.டி. ஆனந்த், சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், நோயியல் துறையில் 11 ஆண்டுகள் மற்றும் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியில் 13 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். சியாட்டிலில் உள்ள ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் தனது முதுகலை மூலக்கூறு மரபியல் மற்றும் நோயெதிர்ப்பு பெல்லோஷிப்பை முடித்துள்ளார்.


- டாக்டர் எம்.வி.எஸ்.பிரகாஷ், அரசு கண் மருத்துவமனை, எக்மோர் மண்டல கண் மருத்துவக் கழக இயக்குனர், 1993 ஆம் ஆண்டு முதல் கண் மருத்துவத்தில் முன்னணி பேராசிரியரான டாக்டர். பிரகாஷ், சென்னை மருத்துவக் கல்லூரியில் பாடம் கற்பித்துள்ளார் மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றுள்ளார்.


- டாக்டர் சர்மன் சிங், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் (மருத்துவ ஆராய்ச்சி). எய்ம்ஸ் போபாலின் முன்னாள் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் டெல்லி எய்ம்ஸ் பேராசிரியர் என 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

   

- ஸ்ரீ அஸ்கர் ஹுசைன், மலேசியாவின் மணிப்பால் பல்கலைக்கழகக் கல்லூரியில் சர்வதேச சேர்க்கை இயக்குநர் மற்றும் மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் தலைவர் ஆவார். இவர் சுகாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றில் 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.


 - ஸ்ரீ செந்தில் குமார், விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை வளர்ச்சி அதிகாரி. அவர் மூலோபாய பேச்சுவார்த்தைகள், விற்பனை மற்றும் வணிக திட்டமிடல் ஆகியவற்றில் 23 வருட நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் குளோபல் யுனிவர்சிட்டி சிஸ்டத்தில் (GUS India) முன்னாள் மூத்த இயக்குநராக இருந்தார்.


சரியான மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது, மாற்று மருத்துவப் தொழில்கள், மருத்துவ மாணவர் வாழ்க்கையின் உண்மைகள் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன.


இந்த நிகழ்வில் ஹலோ மென்டாரின் 2024 மருத்துவ வழிகாட்டி புத்தகம் மற்றும் இந்தியாவின் முதல் ஆலோசனை வழங்கும் போர்ட்டலான www.hellomentor.in வெளியிடப்பட்டது.


தமிழ்நாட்டின் மருத்துவ ஆர்வலர்களுக்கான ஒரு மைல்கல் நிகழ்வு


எக்ஸ்போவின் குறிப்பிடத்தக்க பகுதி பெற்றோரின் கேள்விகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு பிந்தைய செயல்முறைகள், கல்லூரி தேர்வுகள் மற்றும் கட்டண கட்டமைப்புகள் பற்றிய விரிவான வழிகாட்டுதலை அவர்கள் பெற்றனர்.


ஒரு பெற்றோர் கூறுகையில், “நாங்கள் பெற்ற வழிகாட்டுதல் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. நீட் தேர்வுக்குப் பிந்தைய விரிவான வழிமுறைகளைப் தெரிந்து கொண்டதன் மூலம், எங்களின் பெரிய கவலையை இந்த எக்ஸ்போ போக்கியுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில் எங்கள் மகளுக்கு ஆதராவாக இருக்க நாங்கள் இப்போது தயாராக உள்ளோம்” என்றார்.


மெடிக்கல் எக்ஸ்போ 2024 சென்னை அத்தியாயம் தேவையான தகவல்களை வழங்கியது மற்றும் NEET ஆர்வலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்ஆதரவு மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இடத்தை உருவாக்கியது. கருத்தரங்குகள், தனிப்பயனாக்கப்பட்ட அமர்வுகள் மற்றும் நிபுணர் குழு விவாதங்கள் ஆகியவற்றின் கலவையுடன், ஒவ்வொரு பங்கேற்பாளரும் புதுப்பிக்கப்பட்ட தெளிவையும் நம்பிக்கையையும் உணர்ந்ததை எக்ஸ்போ உறுதி செய்தது.

About Hello Mentor:

Hello Mentor is dedicated to empowering NEET aspirants with the knowledge and guidance they need to succeed in the competitive medical admissions landscape. Designed exclusively for medical aspirants, our programs help you by simplifying the counselling process. From initial registration to final seat allotments, Hello Mentor guides you through the demanding counselling process. 


Founded in 2018, Hello Mentor has written over 500,000 success stories. Our annual Medical Expo is a testament to our commitment to providing accurate and timely information to students and their parents across India. 


Popular posts from this blog

Doctors Successfully Perform India's First Robotic CRS with HIPEC for Peritoneal Surface Cancer

REMEMBERING RABINDRANATH TAGORE ON HIS 163rd BIRTH ANNIVERSARY

Mark your calendars: ZEE5 drops the trailer for their Bengali series, Paashbalish, promising a ride of emotions