டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024-இன் ‘Free For All, Har Match Har Ball’விளம்பரத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார்
காணொளியைக் காண இங்கே கிளிக் செய்யவும்
மும்பை, மே 15, 2024: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டியானது வரும் ஜூன் 2 முதல் துவங்கவுள்ளது. உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்திய அணிக்கு (மென் இன் ப்ளூ) நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்கள் ஆதரவினை அள்ளி வழங்கி வருகின்றனர். 2023-ஆம் ஆண்டு ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளம்பரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மீண்டும் இளம் சூப்பர் ஸ்டார் கார்த்திக் ஆரியன் உடன் இணைந்து ‘Free For All, Har Match Har Ball’ (ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு பந்தும் அனைவருக்கும் இலவசம்) என்கிற விளம்பரத்தினை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரப் படமானது டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் 'ஃப்ரீ ஆன் மொபைல்' அடிப்படையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நாடு முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் இலவசமாக காணலாம் என்பதை பறைசாற்றுகிறது.
விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ள பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியனின் கிரிக்கெட் மீதான காதல் பற்றி பலருக்கும் தெரியும். இந்த விளம்பரப் படத்தின் ஆரம்பக் காட்சி பரபரப்பான, மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு இரயில் நிலையத்தின் நடைமேடையில் துவங்குகிறது. அதில் கார்த்திக் ஆர்யன் இந்தியா கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். தனது தனித்துவமான ஸ்டைலில் அவர் பேசப் பேச இரயில் நிலையத்தின் அனைத்து மூலை முடுக்கிலிருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் ஓன்று திரள்கின்றனர்; 'அனைவருக்கும் இலவசம்' என்கிற பாடலுக்கு நடனமாடி எல்லாரும் கொண்டாடுகிறார்கள். “வரவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு பந்தினையும் (‘Har Match Har Ball’) நேயர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாகப் பார்க்கலாம்”, என்று அவர் அறிவிக்கிறார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் குழுவினரின் சிந்தனையில் உருவான இந்த விளம்பரப் படத்தை விஜய் மவுரியா இயக்கியுள்ளார். உலகக் கோப்பையின் உற்சாகத்தை இந்த விளம்பரம் துள்ளலான இசையுடன் அற்புதமாக வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் வாழ்க்கையில் கிரிக்கெட் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, அவர்கள் இந்திய அணிக்கு அளிக்கும் ஆரவாரமான ஊக்கத்தின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல், இர்பான் பதான் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோரும் இந்த விளம்பரப் படத்தில் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.
"ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் கிரிக்கெட் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது; அத்தகைய கிரிக்கெட் உலகக்கோப்பையை காணும் வாய்ப்பினை அனைவரும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உலகக்கோப்பை குறித்த தகவலை கொண்டு சேர்க்கும் முனைப்புடன் நாங்கள் செயல்பட்டுள்ளோம். எங்களது பயனாளர்கள் அனைவரும் ICC ஆடவர் டி20 உலகக் கோப்பையின் ஒவ்வொரு பரபரப்பான தருணத்தையும் தங்கள் மொபைல் சாதனங்களில் இலவசமாக கண்டு மகிழ முடியும் என்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். கார்த்திக் ஆர்யனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி; கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு மீதான அவரது ஆர்வம் இந்த பிரச்சாரத்தின் அடிப்படையான உணர்வுடன் சரியாக ஒத்துப்போகிறது" என்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கார்த்திக் ஆர்யன் அவர்கள், "கிரிக்கெட் எனக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் நான் மிகவும் ரசிக்கும் ஒரு உணர்வு. ICC ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-இன் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்து கொண்டாடினேன். வரவிருக்கும் ICC ஆடவர் T20 உலகக் கோப்பை 2024-இல் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மொபைலில் இந்த உலகக்கோப்பையை இலவசமாக மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்”, என்று கூறினார்.
உலகக்கோப்பையின் முதல் போட்டி அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே ஜூன் 2, 2024 அன்று காலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. ICC ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024-இன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் - 20 அணிகள் 55 ஆட்டங்களில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பையை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இனைந்து நடத்துகின்றன.
~ஜூன் 2, 2024 முதல் Disney+ Hotstar செயலின் மூலம் மொபைலில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொன்றையும் நேரலையாகவும், இலவசமாகவும் காணத் தயாராகுங்கள்~