முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும்g அதற்கு எதிரான தீவிர நடவடிக்கையை விரைவுபடுத்தவும் வலியுறுத்தும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்
முதன்மை நோயெதிர்ப்பு (PID) குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் செய்வதும், சிகிச்சையை வழங்குவதும் தரமான வாழ்க்கையை அவர்கள் நடத்த வழிவகுக்கும்
சென்னை, ஏப்ரல் 30,2024 – முதன்மை நோயெதிர்ப்புத்திறன் பற்றாக்குறை கோளாறு (Primary Immunodeficiency Disorders PID) என்பது முன்வைக்கும் சவால்கள் பெரும்பாலும் உரிய கவனம் செலுத்தப்படாமல் விடப்படும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை உயர்த்துவது மற்றும் உரிய சிகிச்சையை தொடக்க நிலையிலேயே வழங்குவதை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வலுவாக அறிவுறுத்துகிறது. ஏப்ரல் 22 முதல் 29-ம் தேதி வரை அனுசரிக்கப்படும் உலக முதன்மை நோயெதிர்ப்புத்திறன் பற்றாக்குறை வாரத்தையொட்டி இந்த முக்கியமான சுகாதார பிரச்சனை மீது மக்களின் கவனத்தை ஈர்க்கும் விவாதத்தை தூண்டுகிற ACC, அதன் பாதிப்பு குறித்து விரிவான தகவலை வழங்குகிறது.
PID எனப்படும் கோளாறுகள், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை பாதிக்கிறவாறு பெற்றோரிடமிருந்து மரபு ரீதியாக பெறப்படும் நோய்களின் ஒரு தொகுப்பை குறிக்கிறது; தொற்றுகளுக்கு எளிதில் பாதிக்கக்கூடிய ஒன்றாக அவர்களை இது ஆக்குகிறது. PID உள்ள நபர்களுள் கணிசமான பகுதியினர் அதற்கான நோயறிதல் செய்யப்படாமலேயே வாழ்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. சிகிச்சையளிக்கப்படாத உடல்நல சிக்கல்கள் மற்றும் அதிகரித்த இடர்வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கிறது. PID-ன் பரவலான தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மத்தியில் அதுவும் குறிப்பாக ஓராண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளில் அதிக உயிரிழப்பு விகிதம் இருப்பது கவலைக்குரியது. இந்நோய் பாதிப்பு கண்டறியப்படாத நிலையே கவலை தரும் இந்த புள்ளி விவரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. குழந்தைகளை கடுமையான பாதிப்பதாக PID இருக்கின்ற போதிலும், மாறுபடுகிற நோயறிதல் சவால்களோடு வயது வந்த பெரியவர்களையும் இது பாதிக்கக்கூடும். வயது வந்த நபர்களில் இந்த நோய் கண்டறிதலுக்கான பாதையும், பயணமும் மிக நீண்டதாக இருக்கக்கூடும்; தொடக்கநிலை அறிகுறிகள் தோன்றியதிலிருந்து மிகத்துல்லியமாக PID என உறுதி செய்யப்படுபவருக்கு 25 ஆண்டுகள் வரை இது நீளக்கூடும். இந்த தாமதமே, இது குறித்த அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் தன்முனைப்புடன் ஸ்கிரீனிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. PID-ஆல் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையும் மற்றும் மேம்பட்ட சிகிச்சை விளைவுகளும் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இது அத்தியாவசியம்.
உலகளவில் 6 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் PID-ஆல் அவதியுறுகின்றனர். இவர்களுள் 70-90% நபர்களுக்கு நோயறிதலே செய்யப்படவில்லை என்பது கவலைக்குரியது. இந்தியாவில் மிக நெருக்கமான இரத்த உறவுகளுக்குள் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருப்பதால், PID பாதிப்பு நேர்வும் குறிப்பாக அதிகளவு இருக்கிறது. இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான PID நோயாளிகள் இருக்கக்கூடும் என் மதிப்பிடப்பட்டிருக்கிறது. PID என்பது ஒரு மரபியல் பாதிப்பு நிலையின் ஒவ்வொரு கர்ப்ப நிலையும் இதனால் பாதிக்கப்படுவதற்கான பாதிப்பு இருக்கிறது. பிரசவத்திற்கு முன்பு அல்லது கருத்தரித்த 10 முதல் 11 வாரங்களுக்குள் வளர்கருவை பரிசோதிப்பது, கருப்பையில் வளரும் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய உதவக்கூடும்; அதனடிப்படையில் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்படுவதும் அவசியம்.
உலக சுகாதார நிறுவனத்தின்படி (உலக சுகாதார நிறுவனம்) மற்றும் சர்வதேச நோயெதிர்ப்புத்திறன் சங்கங்கள் 120-க்கும் அதிகமான முதன்மை நோயெதிர்ப்புத்திறன் குறைபாடு கோளாறுகள் இருக்கின்றன. பட்டியலில் CVID (பொதுவான மாறுபடும் நிலை கொண்ட நோயெதிர்ப்புத்திறன் குறைபாடு) மற்றும் XLA (X-இணைப்பு கொண்ட காம்மாகோளப்புரதமின்மை) ஆகியவை முதலிடம் பிடிக்கின்றன.
சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்-ன் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோய் பிரிவின்
முதுநிலை நிபுணர் டாக்டர். ரேவதி ராஜ், கூறியதாவது, “பெரும்பாலும் கவனிக்காமல் தவறவிடப்படுகிற PID, ஒரு குழந்தையின் உடல்நலத்தை கணிசமாக பாதிக்கக்கூடும். முதன்மை நோயெதிர்ப்புத்திறன் குறைபாடுக்கு தொடக்க நிலையிலேயே கண்டறிதலும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதும், நல்ல வாழக்கை தரத்தோடு இக்குழந்தைகள் வாழ்வதற்கு உதவும். இந்நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு சிகிச்சைக்கு மட்டுமன்றி, அது வராமல் தடுப்பதற்கும் முக்கியமானது. PID உடன் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை நடத்தும் எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.”
குழந்தைகளுக்கான இரத்தப்புற்று நோய் பிரிவின் நிபுணர் டாக்டர். ரம்யா உப்புலூரி பேசுகையில், “PID பாதிப்பை துல்லியமாக கண்டறிவதை முக்கியப் பங்காற்றுகிற மரபணு பரிசோதனை மற்றும் நோயெதிர்ப்புத்திறன், மதிப்பீடுகள், உட்பட நோயறிதல் சோதனைகளிலிருந்து எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகள், PID-களுக்கான எமது சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க தேவையான நிபுணத்துவமும், தொழில்நுட்பமும், ஆதார வளங்களும் இங்கு அமைந்துள்ளன” என்று கூறினார்.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணை தலைவர் டாக்டர். பிரீத்தா ரெட்டி பேசுகையில், “இலட்சக்கணக்கான நபர்களை பாதிக்கிற முதன்மை நோயெதிர்ப்புத்திறன் பற்றாக்குறை குறைபாடு என்ற மிகப்பெரிய சவாலை அநேக நேரங்களில் மௌனமாக நாம் எதிர்கொள்ளும் இத்தருணத்தில் இதற்காக நாம் பயணிக்க வேண்டிய பாதையில் வெளிச்சத்தை உறுதி செய்வதில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இப்பாதிப்பு நிலைகள் பற்றிய விழிப்புணர்வு பயனளிக்கும் சிகிச்சைக்கு மட்டுமன்றி நோய் வராமல் தடுப்பதற்கும் இன்றியமையாதது. குடும்பங்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இது குறித்து கற்பிப்பதன் வழியாக ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் உரிய சிகிச்சையை உறுதி செய்ய நாங்கள் முற்படுகிறோம். இதன் மூலம் எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மேம்பட மாற்றியமைக்க முடியும். PID பாதிப்புள்ள ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்கின்ற எதிர்காலத்தை அமைத்து தருவதே எமது குறிக்கோளாகவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
PID போராளியான 13 வயதான கவின் பேசுகையில், “அடிக்கடி வருகிற தொற்று நோய்களை எதிர்த்து சமாளிப்பது அச்சத்தையும், கவலையையும் தருகிறது. ஒவ்வொரு முறை இருமலும், காய்ச்சலும் வரும்போது உயிருக்கு ஆபத்து என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்போலோ கேன்சர் சென்டர்-ல் இது முதன்மை நோயெதிர்ப்புத்திறன் குறைபாடு கோளாறு என கண்டறியப்பட்டு உரிய சிகிச்சையளிக்கப்படும் வரை மிகவும் பயமாக இருந்தது. இங்குள்ள மருத்துவர் குழுவினர் வழங்கிய ஆலோசனையும், தைரியமும் எனக்கு நிம்மதியையும், நிவாரணத்தையும் தந்திருக்கிறது. ஆரோக்கியமான எதிர்காலம் இங்கு எனக்கு உறுதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினான்.
ACC-ல் அமைந்துள்ள PID நோய்களுக்கான சிகிச்சை மையம், மிக நவீன வசதியை கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு (PICU), குழந்தைகளுக்கான தொற்று நோய்கள் மற்றும் PID கண்டறிதலில் திறனும், அனுபவமும் கொண்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர்கள் இங்கு பணியாற்றுவது ஆகியவை இவற்றுள் குறிப்பிடத்தக்கது. பாதிப்பிற்கு சிகிச்சையளிப்பது என்பதையும் கடந்து PID வரலாறு உள்ள குடும்பங்களுக்கு மரபியல் சார்ந்த ஆலோசனை வழங்குவது போன்ற இந்நோய் வராமல் தடுப்பதற்கான தன்முனைப்பு நடவடிக்கைகளையும் ACC நம்புகிறது. முதன்மை நோய்எதிர்ப்புத்திறன் குறைபாடு கோளாறுகளை சுற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் பரவலாக்குவதன் வழியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய ACC தீவிரமாக பாடுபடுகிறது.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து– https:// apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.
உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 325- க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேச தரத்தில் சிகிச்சை விளைவுகளைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இயங்கும் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் தெரபி சென்டர் என்பதைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தை வலுவாக மேற்கொள்ள தேவைப்படும் அனைத்து வசதிகளையும், திறன்களையும் பெற்றிருக்கிறது.