பொழுதுபோக்குத் தளத்தை புரட்சிகரமாக்கும் டிஷ் டிவி!
எந்த திரையிலும், எந்த இடத்திலும் டிவி மற்றும் ஓடிடி நிகழ்ச்சிகளை வழங்கும் டிஷ் டிவி ஸ்மார்ட்+ சேவைகள்
தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் லைனியர் டிவி சந்தாவுடன் சேர்த்து உள்ளமைந்த ஓடிடி சேவைகளை டிஷ் டிவி இத்துறையில் முதன் முறையாக வழங்குகிறது.
பிரபலமான செயலிகளிலிருந்து விரும்பியதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வசதி.
உள்ளடக்கம், சாதனங்கள் அடங்கிய விரிவான பொழுதுபோக்கு சாதன அமைப்பை வழங்கும் ‘ டிஷ் டிவி ஸ்மார்ட்+’ சேவைகள்“எந்தவொரு திரை, எந்தவொரு இடம்” என்ற அடிப்படையில் இதற்கான அணுகுவசதியை வழங்குகிறது.
சென்னை: 26 ஏப்ரல் 2024: இந்தியாவில் பொழுதுபோக்கு அனுபவத்தை மறுவரையறை செய்ய ஒரு புதிய பாதையை அமைக்கும் முயற்சியை டிஷ் டிவி எடுத்துள்ளது. முன்னணி DTH சேவை வழங்குநரான இது, இவ்வகையினத்தில் முதலாவதாக 'டிஷ் டிவி ஸ்மார்ட்+' என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்ட அறிமுகம், பொழுதுபோக்கு தொழில்துறையில் ஒரு முன்னோடித்துவ நிகழ்வாகும்; வாடிக்கையாளர்களுக்கு டிவி மற்றும் OTT உள்ளடக்கத்தை எந்தத் திரையிலும், எந்த இடத்திலும் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் இத்திட்டம் வழங்குகிறது. வசதியையும், நெகிழ்வுத்தன்மையையும் மற்றும் மேம்பட்ட பொழுதுபோக்கு விருப்பத்தேர்வுகளையும் உறுதிசெய்யும் இது, தங்களது பார்வை அனுபவத்தை பிரத்யேகமாக திட்டமிட்டு வடிவமைப்பதை அனுமதிக்கிறது.
'டிஷ் டிவி ஸ்மார்ட்+' சேவையின் மூலம், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள் உட்பட அனைத்து டிஷ் டிவி மற்றும் டி2ஹெச் வாடிக்கையாளர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த டிவி சந்தா பேக்குடன் பிரபலமான ஓடிடி செயலிகளையும் கண்டு ரசிக்க முடியும். ‘டிஷ் டிவி ஸ்மார்ட்+’ சேவைகள் சூழல் அமைப்பு, வாட்சோ-தி ஓடிடி சூப்பர் செயலி, செட்-டாப் பாக்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு STBகள் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் எந்தத் திரையிலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதை சாத்தியமாக்குகிறது. டிஷ் டிவி, முன்னணி தொலைக்காட்சி சாதனம் மற்றும் மொபைல் தயாரிப்பாளர்களுடன் (OEMகள்) ஒத்துழைத்து, இந்தச் சாதனங்களில் தங்களுடைய சேவைகளை தடையின்றி ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்.
டிஷ் டிவி இந்தியா லிமிடெட்டின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. மனோஜ் டோபால், இப்புதிய திட்டம் குறித்து கூறியதாவது: “தொடங்கிய நாளிலிருந்தே தொடக்கத்தில் இருந்து, மக்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்க நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ புதிய வழிமுறைகளை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்வதன் மூலம் பொழுதுபோக்குத் துறையையே மாற்றியமைத்திருக்கிறது. இப்புதிய திட்ட அறிமுகத்தின் மூலம் இன்னும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்; ஆழமான மற்றும் அணுகக்கூடிய பொழுதுபோக்கு அனுபவங்களுக்கு ஒரு புதிய தரத்தை இதன் மூலம் நாங்கள் நிர்ணயிப்போம். 'டிஷ் டிவி ஸ்மார்ட்+' சேவைகளின் துவக்கமானது ஒரு புதிய திட்ட அறிமுகம் என்பதற்கும் அதிகமானது. இந்தியாவில் புத்திசாலித்தனமாகவும் பெரிதாகவும் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு நுகர்வுகளை மறுவரையறை செய்வதற்கான விரிவான கண்ணோட்டத்தை இது உள்ளடக்குகிறது. எண்ணற்ற விருப்பத்தேர்வுகள் நிறைந்த சந்தையில், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எண்ண செய்வது என்று புரியாமல் திகைக்கின்றனர். விரிவான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு தீர்வை வழங்குவதன் மூலம் அவர்களின் தேர்வுகளை எளிதாக்குவதே எமது நோக்கமாகும். இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் OTT இயங்குதளங்கள் இன்றியமையாதவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்; இந்த புதிய திட்ட அறிமுகத்தின் மூலம் அந்த இரு தளங்களின் சம முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.”
“டிஷ் டிவியில் வாடிக்கையாளரது திருப்தியில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாடிக்கையாளருக்கு மதிப்பையும், சௌகரியத்தையும் வழங்குவதை மையமாக கொண்டிருக்கிறது. பொழுதுபோக்கிற்கு நிகரற்ற அணுகுவசதியை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு டிஷ் டிவி ஸ்மார்ட் + சர்வீசஸ் அதிக பயனளிப்பதோடு, நின்றுவிடுவதில்லை;அவர்களது விருப்பங்களும், திருப்தியும் எமது தீவிர முயற்சிகளின் முன்னணியில் எப்போதும் இருப்பதை அது உறுதி செய்கிறது. இந்த புதிய திட்ட சேவையின் மூலம் நவீன இந்திய குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம். நவீன பாரதத்தின் ஸ்மார்ட்டான இணைப்பு என்ற எமது குறிக்கோளை இதன்மூலம் நாங்கள் செயல்படுத்துகிறோம்,” என்று திரு. மனோஜ் டோபால் மேலும் தெரிவித்தார்.
தொலைநோக்கு பார்வை கொண்ட இத்திட்டம் குறித்த செய்தியை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக தொலைக்காட்சி, டிஜிட்டல், அச்சு ஊடகம் மற்றும் கார்ப்பரேட் தொடர்பாடல் உட்பட, பல்வேறு சேனல்களிலும் விரிவான சந்தையாக்கல் பரப்புரையை டிஷ் டிவி தொடங்கியிருக்கிறது. எந்த திரையிலும், எந்த இடத்திலிருந்தும் பொழுதுபோக்கிற்கான அணுகுவசதி இதில் கிடைக்கிறது என்ற செய்தியை உரக்கச் சொல்வதே இதன் நோக்கம்.
ஏற்கனவே தனது சந்தாதாரர்களாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்கள், செயலியில் அறிவிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது சேனல்களையும், தளங்களையும் இதற்காக டிஷ் டிவி பயன்படுத்தும். இதற்கிடையே புதிய வாடிக்கையாளர்களுக்காக இப்புதிய திட்டம் குறித்த பரவலான விழிப்புணர்வை உறுதிசெய்ய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் சேனல்களில் விளம்பரங்கள் இடம்பெறும்.
டிஷ் டிவி மற்றும் வாட்சோ – ன் சந்தையாக்கலுக்கான கார்ப்பரேட் தலைமை அலுவலர் திரு. சுக்ப்ரீத் சிங் பேசுகையில், “டிஷ் டிவி ஸ்மார்ட் + சர்வீசஸ் மூலம் நாங்கள் வெறுமனே ஒரு திட்டத்தை மட்டும் அறிமுகம் செய்யவில்லை; பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் நுகர்வு தளத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம். பல்வேறு சேனல்கள் வழியாக மேற்கொள்ளப்படும் எமது சந்தையாக்கல் அணுகுமுறை மூலம் நுகர்வோர்களோடு நேரடி தொடர்புகொண்டு, இப்புதிய திட்டம் குறித்த விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்திட்டம் வரவேற்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்வோம். ஒரு பிராண்டாக, இத்துறையில் உருவாகும் போக்குகளில் எப்போதும் முன்னிலையில் இருப்பதற்கும், பார்வையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். வாடிக்கையாளர் திருப்தியே எமது செயல்திட்ட உத்தியின் மைய அம்சமாக இருக்கிறது. அவர்களின் மாறுபட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு நிகரற்ற பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதில் நாங்கள் பொறுப்புறுதியுடன் செயல்படுகிறோம்.” என்று கூறினார்.
ஒரு டிடீஹெச் ஆபரேட்டர் என்ற நிலையிலிருந்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு வழங்குனர் என டிஷ் டிவி நிகழ்த்தியிருக்கும் நிலைமாற்றம், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களைப் புரிந்துகொள்வதிலும், புத்தாக்கத்தை செயல்படுத்துவதிலும் அது கொண்டிருக்கும் பொறுப்புறுதியை வலியுறுத்துகிறது. நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான வீடுகளில் பொழுதுபோக்கு அனுபவத்தை சிறப்பாக உயர்த்துவது என்ற செயல்திட்டத்துடன் இயங்கி வரும் டிஷ் டிவி பொழுதுபோக்கு வழங்கலில் ஒரு புதிய தரநிலையை நிறுவி இத்துறையில் ஒரு அடிப்படை மாற்றம் நிகழவிருப்பதை முன்னறிவிக்கிறது. வாடிக்கையாளரது தேவைகளுக்கு முன்னுரிமையளிப்பது மற்றும் முக்கியமான ஒத்துழைப்புகளை திறம்பட பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் எதிர்கால புத்தாக்கங்களுக்கு டிஷ் டிவி பாதை அமைத்திருக்கிறது; நாடெங்கிலும் உள்ள நுகர்வோர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அனுபவத்தை இதன்மூலம் சிறப்பாக இது மேம்படுத்துகிறது.
About Dish TV India Limited
Dish TV India Limited is India’s leading direct-to-home (DTH) Company and owns multiple individual brands like Dish TV, d2h and Watcho under its umbrella. The Company benefits from multiple satellite platforms including SES-8, GSAT-15 and ST-2 and has a bandwidth capacity of 1044 MHz, the largest held by any DTH player in the country. Dish TV India Limited has on its platform more than 752 channels & services including 31 audio channels and 81 HD channels & services. The Company has a vast distribution network of over 2,600 distributors & around 196,000 dealers that span across 9,300 towns in the country. Dish TV India Limited is connected with its pan-India customer base through call centres that are spread across 22 cities and are equipped to handle customer queries 24X7 in 12 different languages. For more information on the Company, please visit www.dishtv.in.
கோலிவுட் நடிகை மிர்னாலினி ரவி கூறுகையில், "பார்வையாளர்களின் பொழுதுபோக்கு விருப்பத்தேர்வுகள் எப்போதும் உருவாகி வருகின்றன, மேலும் தனி நபர்களால் பல்வேறு வடிவங்களில் நுகரப்படுகிறது, தளங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இது அனைவருக்கும் இருக்க வேண்டும். டிஷ் டிவி ஸ்மார்ட்+ சேவைகள் இந்த தேவையை பூர்த்தி செய்கின்றன, அனைவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதன் மூலம், டிஷ் டிவியின் மூலம், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி."
டிஷ் டிவி ஒரு டிடிஎச் ஆபரேட்டரிலிருந்து முழுமையான பொழுதுபோக்கு வழங்குநராக மாறுவது, வளர்ந்து வரும் நுகர்வோர் விருப்பங்களையும், புதுமைகளையும் சந்திப்பதில் அதன் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது, மேலும் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு பொழுதுபோக்கு அனுபவத்தை உயர்த்துவதற்கான அதன் நோக்கம், பொழுதுபோக்கு விநியோகத்திற்கான புதிய தரத்தை அமைத்தல் மற்றும் முன்னுதாரண மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. . தொழிலில். வாடிக்கையாளர் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், மூலோபாய ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், டிஷ் டிவி எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்து, நாடு முழுவதும் உள்ள நுகர்வோரின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது