வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதையும் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட கேரளாவின் மிகப்பெரிய மறுவாழ்வு முயற்சி வயநாடில் தொடங்குகிறது
இரக்கத்துடன் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புகின்றதன் மூலம் வயநாடு க்கு ஒரு புதிய விடியல்
சென்னை, மார்ச் 28, 2025: கேரள அரசு, ஆசியாவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டுறவு சங்கமான உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (ULCCS) லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட இந்த மிகப்பெரிய மறுவாழ்வு திட்டமான (Wayanad Rehabilitation Project) வயநாடு மறுவாழ்வு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டியதன் மூலம் நம்பிக்கை மற்றும் உறுதியின் ஒரு புதிய அத்தியாயம் நேற்றையதினம் தொடங்கப்பட்டது. 2024 ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட மலைச்சரிவு 298 பேருக்கும் மேல் உயிரிழப்பும், ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பும் ஏற்படுத்திய இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை, இந்த லட்சிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்பெட்டாவில் 64 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிற இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு சென்ட் நிலம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 1,000 சதுர அடி பரப்பளவுள்ள 2BHK வீடு நகரியத்தில் வழங்குகின்றது.
நேற்று கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட்டில் நடைபெற்ற ஒரு மங்களகரமான விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. வருவாய் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் K. ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒரு சுற்றுச்சூழல் நட்பு மற்றும் தன்னிறைவு கொண்ட சமூகமாக வடிவமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப், இடம்பெயர்ந்த குடும்பங்களை மேம்படுத்துகின்ற வகையில் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. காலநிலை மீள்தன்மை வளர்ச்சி
மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவை குறித்த கேரள அரசின் உறுதிப்பாட்டையும் இது முக்கியப்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "இந்த வயநாடு மறுவாழ்வு திட்டம் கேரளாவின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. சாத்தியமற்றது என்று தோன்றிய சூழ்நிலையில், எந்தப் பேரிடரும் நம்மை முறியடிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்ற வகையில் நம் மக்கள் அசைக்க முடியாத ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தனர். நம் குழந்தைகளின் தன்னலமற்ற பணி, நமது நிறுவனங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சி, இந்த இடர்பாட்டை நம்பிக்கையாக மாற்றியுள்ளது. நாம் ஒன்றாக நிற்கும்போது, எதுவும் நமக்கு அப்பாற்பட்டது இல்லை என்பதற்கு இந்த பணி ஒரு நினைவூட்டலாக இருக்கிறது."என்று கூறினார்.
மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜயன் மக்கள் மறுகட்டமைப்பு செயல்முறைக்கு பங்களிப்பதற்கு மக்களுக்கு உதவுகின்ற wayanadtownship.kerala.gov.in என்ற போர்ட்டலைத் தொடங்கினார். ₹20 கோடி நிதியுதவியை ஒதுக்கி 100 வீடுகள் கட்ட உதவிய கர்நாடக அரசின் நிதி ஆதரவையும் இதனுடன், தேசிய சேவா திட்டம் (NSS) ₹10 கோடியும், DYFI 100 வீடுகள் கட்டுவதற்காக ₹20 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளதையும் அவர் அறிவித்தார்."
உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (ULCCS) லிமிடெட் இன் தலைவர் ரமேஷன் பாலேரி இந்த உறுதிப்பாட்டைக் குறித்து கூறுகையில், "பேரிடர் ஏற்பட்ட முதல் நிமிடம் முதல் வயநாட்டின் துயரத்தில் மூழ்கிய மக்களுடன் நாங்கள் உறுதியாக நின்றோம். எங்கள் அருகிலுள்ள பணியிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் நடந்த இடத்திற்கு எங்கள் குழு விரைந்தது. அந்த முக்கியமான தருணங்களில், நாங்கள் கட்டடம் கட்டுவோராக அல்ல - முதல் அவசரகால தன்னார்வலர்களாக, அவர்களின் தேவைப்படும் நேரத்தில் சமூகத்துடன் தோளோடு தோள் சேர்த்து நின்றோம். இந்த மறுவாழ்வுத் திட்டம் வீடுகளை மீண்டும் கட்டுவது மட்டுமல்ல, நம்பிக்கையையும், கண்ணியத்தையும், ஒரு சொந்தம் கொள்ளும் உணர்வையும் மீட்டெடுப்பதற்கான அந்த உறுதிப்பாட்டின் ஒரு நீட்டிப்பாக இருக்கிறது. ULCCS அதன் 100வது
ஆண்டைக் கொண்டாடும் இந்தக் கட்டத்தில், கேரளத்திற்கு சேவை செய்ய இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் உறுதியான தளத்தையும் ஒரு புதிய துவக்கத்தையும் பெறுவதை உறுதி செய்கின்ற ஒரு ஆழமான வாய்ப்பாக நாங்கள் இதைப் பார்க்கிறோம். எங்கள் அர்ப்பணிப்பு கட்டுமானத்திற்கு அப்பால் செல்கிறது இது வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் எதிர்காலத்திற்கான சமூகங்களை வலுப்படுத்துவதுமாகும்."என்று கூறினார்.
அதன் கூட்டுறவு மதிப்புகளுக்கு உண்மையாக நின்று, ULCCS பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் ஒவ்வொரு வளமும் முழுமையாக ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்கின்ற இந்த திட்டத்தை லாப நோக்கற்ற அடிப்படையில் மேற்கொள்கிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிற முக்கிய பிரமுகர்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் நலத்துறை அமைச்சர் O. R. கேலு, பதிவு, தொல் பொருட்கள் மற்றும் ஆவணத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் P. A. முஹம்மது ரியாஸ், எதிர்க்கட்சித் தலைவர் V. D. சதீசன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் P. K. குன்ஹாலிக்குட்டி, சட்டமன்ற உறுப்பினர் T. சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோர் அடங்குவர்.
வீட்டு வசதிக்கு அப்பால், இந்த நகர்ப்பகுதி முழுமையான நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகம், மருந்தகம், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அறைகள், ஒரு சிறிய அறுவை சிகிச்சை அறை, மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சேவைகளை உறுதி செய்வதற்கு ஒரு வெளிநோயாளர் டிக்கெட் கவுண்டர் ஆகியவற்றுடன் ஒரு முழுமையாக அமைக்கப்பட்ட சுகாதார மையத்தை இது உள்ளடக்கும். ஒரு நவீன அங்கன்வாடி, குழந்தைகளுக்கான ஒரு வளர்ப்பு இடத்தை அளிக்கின்ற வகையில் வகுப்பறைகள், விளையாடும் பகுதிகள், உணவருந்தும் இடங்கள் வசதிகள், சேமிப்பு இடம் மற்றும் ஒரு சமையலறை போன்றவற்றை வழங்கும்.
இந்த பொது சந்தை, பொருளாதார செயல்பாடு மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கின்ற வகையில், கடைகள், சிறு கடைகள், திறந்த சந்தை வெளி, குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக விளையாடும் பகுதி மற்றும் போதுமான நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த சமூகக் கூடம் சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் ஒரு துடிப்பான மையமாக விளங்கும். இதில் ஒரு பல்நோக்கு அரங்கம், ஒரு நூலகம், விளையாட்டு மன்றம், ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் திறந்த வெளி அரங்கு ஆகியவை அமைந்திருக்கும்.
வயநாடு மறுவாழ்வுத் திட்டம் செங்கல் மற்றும் சாந்து மட்டுமல்ல – இது கேரளாவின் உறுதிப்பாடு, ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியின் சக்திக்கு ஒரு சான்றாக இருக்கிறது. இந்த மாநிலம் ஒன்றிணைந்து நிற்கும் இந்த நேரத்தில், வயநாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தின் வாக்குறுதி பிரகாசமாக பளிச்சிடுகிறது.