Wednesday, October 29, 2025

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!


  • 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவர் பக்கவாத பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கிறார்; இளைய தலைமுறையினரிடையே பக்கவாத நோயின் பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

*Photo Caption: (L to R)* Dr Vijay Shankar, Senior consultant, , Apollo Hospitals Greams Road; Dr. Sreenivas U.M, Consultant, Neurologist, Apollo Speciality Hospitals, Vanagaram, Chennai; Dr. Satish Kumar, Sr. Consultant, Neurologist, Apollo Speciality Hospitals, OMR, Chennai; Dr. Srinivasan Paramasivam, Sr. Consultant, Neurosurgeon, Apollo Hospitals, Greams Lane, Chennai; Dr. Ilankumaran Kaliamoorthy, CEO, Apollo Hospitals, Chennai Region; Dr. Rahul Raghavan Menon, CEO & Director – Medical Services, Chennai Cluster 2, Apollo Hospitals; Dr. Siva Prasad Rao Bobba, Unit Head & DMS, First med hospitals, Chennai

சென்னை, அக்டோபர் 29, 2025: சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள் [Apollo Hospitals, Chennai], பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. சென்னை முழுவதும் உள்ள பக்கவாத மருத்துவ பயனாளர்களுக்கு நோயின் பாதிப்பு குறித்து விரைவாக கண்டறியும் நவீன வசதி மற்றும் உரிய சிகிச்சையை உறுதிபடுத்தும் வகையில், மருத்துவ நெறிமுறை அடிப்படையிலான அனைத்து வசதிகளையுக் கொண்ட அமைப்பாக 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இளைய தலைமுறையினரிடையே பக்கவாத பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பக்கவாத பராமரிப்பில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதில் இந்த முன்முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.

. பக்கவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த முன்முயற்சி மிகப்பெரும் முன்னெடுப்பாகும். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஒவ்வொரு நிமிடமும் மிக மிக முக்கியமானவை. இதனால்தான் பக்கவாத சிகிச்சையில், "நேரம் தான் மூளை" (Time is Brain) என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பக்கவாத தாக்கத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1,90,000 மூளை செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த புதிய பக்கவாத சிகிச்சை நெட்வொர்க், சென்னையில் உள்ள அப்போலோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு, இரத்தக்குழாய் அடைப்பு (ischemic) மற்றும் இரத்தப்போக்கு (hemorrhagic) பக்கவாதங்கள் இரண்டிற்கும் ஒரே மாதிரியான, உயர்தரமான மற்றும் நேரத்திற்கு உகந்த பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது.

ஒருங்கிணைந்த பக்கவாத சிகிச்சை நடைமுறைகள் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்த, 2023-ல் அப்போலோ மருத்துவமனைகள் தொடங்கிய பக்கவாத சிகிச்சைக்கான நெட்வொர்க்கின் தொடர்ச்சியே இந்த விரிவாக்கமாகும். சென்னை முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் முக்கிய நோக்கம், ஏராளமான மக்களைச் சென்றடைவது, ஆரம்பகாலத்திலேயே நோய் கண்டறியும் வாய்ப்புகளை வலுப்படுத்துவது, மற்றும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைத்து, குணமடையும் வாய்ப்புகளை மேம்படுத்துவது போன்றவையாகும்.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.3 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் மட்டும், ஆண்டுக்கு சுமார் 10,000 பேர் பக்கவாதத்தினால் பாதிகப்படுவதாக தெரிய வந்திருக்கிறது. இது பக்கவாத தொடர்பான விழிப்புணர்வு, அதன் பாதிப்பு ஏற்படும் சூழலில் அதற்கான சிகிச்சைகளை தயார்நிலையில் வைத்திருக்கும் வசதி மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை நாடுவதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’, சென்னையின் நரம்பியல் மற்றும் நியூரோவாஸ்குலர் (Neurovascular) சிகிச்சையில் முன்னணி வகிக்கும் மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. இந்த பல்துறை மருத்துவக் குழுவில் டாக்டர். சீனிவாசன் பரமசிவம் (மூத்த ஆலோசகர் – நியுரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை) [Dr. Srinivasan Paramasivam, Senior Consultant – Neuro Endovascular Surgery], டாக்டர். கண்ணன், டாக்டர். விஜய சங்கர், டாக்டர். முத்துகனி, டாக்டர். அருள்செல்வன், டாக்டர். சதீஷ் குமார், டாக்டர். ஸ்ரீனிவாஸ் யு.எம் மற்றும் அனைத்து மூத்த நரம்பியல் ஆலோசகர்களும் அடங்குவர். இந்த மருத்துவர் குழு, பக்கவாத சிகிச்சை மர்றும் பராமரிப்பில் ஆழ்ந்த அனுபவமும், சிறப்பு நிபுணத்துவமும் கொண்டது. இதன் மூலம் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள் நெட்வொர்க்கில் உள்ள நோயாளிகளுக்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனைகள், கிரீம்ஸ் லேன், சென்னையின் நியூரோ என்டோவாஸ்குலர் சர்ஜரி பிரிவின் தலைவர், டாக்டர் ஸ்ரீனிவாசன் பரமசிவம் [Dr. Srinivasan Paramasivam, Head of Neuro Endovascular Surgery at Apollo Hospitals, Greams Lane, Chennai] கூறுகையில், "பக்கவாதத்திற்கு நவீன சிகிச்சைகளை அளிக்கும் 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’, பக்கவாத நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை விரைவுப்படுத்தும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நேரத்தை வீணடிக்காமல் தகுந்த சிகிச்சைகளை உடனடியாக அளிக்கும் ஒரு நிபுணத்துவ அமைப்பைக் குறிக்கிறது. இஸ்கிமிக் பக்கவாதத்திற்கு [ischemic stroke] மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி (Mechanical Thrombectomy) போன்ற நியூரோ என்டோவாஸ்குலர் சிகிச்சைகள் மற்றும் ஹெமோரேஜிக் பக்கவாதத்திற்கான [hemorrhagic stroke] என்டோவாஸ்குலர் மற்றும் மைக்ரோ சர்ஜிக்கல் சிகிச்சைகளை அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்., நேரத்தை தாமதப்படுத்தாமல், விரைவான, அறிவார்ந்த சிகிச்சைகளின் மூலம் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற வேண்டும், சிகிச்சை முடிவுகளை மேம்படுத்தவேண்டும் என்பதே எங்களது இலக்கு’’ என்றார்.

.எம்.ஆர் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர். சதீஷ் குமார் [Dr. Satish Kumar, Senior Consultant, Apollo Speciality Hospitals, OMR] கூறுகையில், "இன்று வளர்ச்சிக்கண்டு வரும் புதிய பக்கவாத சிகிச்சைகள் நேரத்தைச் சார்ந்தவை. எவ்வளவு விரைவாக சிகிச்சையை அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக காலம் தாழ்த்தாமல் சிகிச்சையளிக்க வேண்டும். பக்கவாத பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்களின் நரம்புக்குள் இரத்த உறைவைக் கரைக்கும் த்ரோம்போலைசிஸ் சிகிச்சையை (intravenous thrombolysis) தொடங்க நமக்கு தற்போது 4.5 மணிநேரமே அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடுவாக உள்ளது. திடீரென நரம்பியல் கோளாறு ஏதேனும் தோன்றினால், அதை பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகக் கருதப்பட வேண்டும் திடீர் பார்வை இழப்பு, முகம் கோணலாகும் தோற்றம், உடலின் ஒரு பக்கத்தில் கை/காலில் திடீர் பலவீனம் அல்லது உணர்வின்மை, சரளமாக பேசுவதில் வழக்கத்திற்கு மாறான தடங்கல்கள் மற்றும் உடல் இயக்கத்தில் சமநிலை இழப்பு ஆகியவை இந்த நோயைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய அறிகுறிகளாகும். பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வும், பக்கவாத நோய் மேலாண்மையில் நேரத்தின் முக்கியத்துவமும், தடுப்பு முறைகளும் நமது சமூகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளன. பக்கவாத சிகிச்சையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது'. இந்த முக்கியமான அபாயம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தவர்களுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் யு.எம், [Dr. Sreenivas UM, Consultant Neurologist, Apollo Speciality Hospitals, Vanagaram] தீவிர பக்கவாத சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில், "செயற்கை நுண்ணறிவு (AI) தீவிர பக்கவாத சிகிச்சையை நாம் அணுகும் விதத்தை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் மாற்றியமைத்து வருகிறது. பக்கவாத மேலாண்மையில் நேரம் மிக முக்கியமான காரணியாக இருப்பதால், செயற்கை நுண்ணறிவின் மூலம்இயங்கும் இமேஜிங் மற்றும் துல்லியமான முடிவெடுக்க உதவும் ஆதரவுக் கருவிகள் [decision-support tools] பக்கவாத பாதிப்பை விரைவாக அடையாளம் காணவும், முன்னெப்போதும் இல்லாத துல்லியத்துடன் சிகிச்சையைத் தொடங்கவும் நமக்கு உதவுகின்றன," என்றார்.

அப்போலோ மருத்துவமனைகளின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer – Chennai Region, Apollo Hospitals] பேசுகையில், "குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அப்போலோ மருத்துவமனைகள் இந்த மேம்பட்ட பக்கவாத சிகிச்சை நெட்வொர்க்கை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதை நாங்கள் அப்போலோவில் நன்கு அறிவோம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே எங்களது பக்கவாத சிகிச்சையின் முன்மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தவர்களின் வாழ்க்கைப் பயணங்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களையும் பக்கவாதத்திற்கு எதிராக கைக்கோர்க்க செய்யும். இது பெரும் பலன்களை அளிக்கும் வகையில் பக்கவாத சிகிச்சை மாதிரிகளை உருவாக்கத் தூண்டும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்பின் மூலம், அப்போலோ மருத்துவமனைகள், சென்னை, மேம்பட்ட நரம்பியல் மற்றும் அவசர சிகிச்சையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. இது அவசரகால சிகிச்சை முதல் மறுவாழ்வு மற்றும் சமூகக் கல்வி வரை பக்கவாத மேலாண்மையில் தொடர்ச்சியான சேவைகளை வழங்குகிறது. பொது விழிப்புணர்வு, ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவற்றை 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ உறுதி செய்கிறது. கால தாமதம் காரணமாகவோ அல்லது சிகிச்சைக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாலோ யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதை உறுதி செய்வதில் அப்போலோ மருத்துவமனை ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.


Tuesday, October 28, 2025

ஆர்த்தி ஸ்கேன்ஸ் உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறியும் இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் லாஞ்சிவிட்டி ஆய்வகமான 'வைட்டல் இன்சைட்ஸ்'ஸை தொடங்கியுள்ளது!

ஆர்த்தி ஸ்கேன்ஸ் உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறியும் இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் லாஞ்சிவிட்டி ஆய்வகமான 'வைட்டல் இன்சைட்ஸ்'ஸை தொடங்கியுள்ளது!


L to R 
Dr. Aarthi - Chief Radiologist and director, Aarthi scans 
Dr Arun Govindarajan - Executive director, Aarthi scans 
Govindarajan - CEO and Founder 
AT Rajamani Prabhu - Founder, Raccelarate 
Avnish Parekh - Head of strategy and growth, Vital insights

சென்னை, அக்டோபர் 28, 2025: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவை (Integrated Diagnostics Provider) நிறுவனமான ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் [Aarthi Scans and Labs], நமது உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் [performance &wellness vertical, Vital Insights] கண்டறியும் பரிசோதனை மையத்தை சென்னை அண்ணா நகரில் தொடங்கியுள்ளது. இந்த புதிய பரிசோதனை மையத்தை, உடல்நலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பிரிவில் புகழ்பெற்ற நிபுணர் திரு. .டி. இராஜாமணி (A.T. Rajamani, Strength and Conditioning Coach) அவர்களால் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஆர்த்தி ஸ்கேன்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. வி. கோவிந்தராஜன் (V Govindarajan, Founder and CEO, Aarthi Scans) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மையம், தனிநபர்கள் மேற்கொண்டு வரும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைத் தாண்டி, அவர்களின் உடலமைப்பு (Structural), உடலில் உள்ள இரசாயனங்கள் (Chemical), மற்றும் உடல் செயல்பட்டு வரும் முறை (Functional) ஆகியவற்றின் மூலம் மூன்று முக்கியமான பரிமாணங்களில் தங்கள் உடலைப் புரிந்து கொள்ள உதவுகிறது. டெக்ஸா ஸ்கேன்கள் (DEXA scans), வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்தம் தொடர்பான அளவீடுகளுக்கான பரிசோதனை (metabolic & blood profiling), உடல் வலிமை மற்றும் உடலின் சமநிலை குறித்த மதிப்பீடுகள் (strength & balance assessments), உடல் முழுவதற்குமான எம்.ஆர்.. இமேஜிங் (CT & MRI imaging) போன்ற மிகவும் மேம்பட்ட நோயறியும் சோதனைகள் மூலம், ஒருவரின் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்றும் உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப எப்படி தன்னை தகவமைத்து கொள்கிறது என்பது பற்றியும் முழுமையான கண்ணோட்டம் உள்ளிட்டவைகளை ஒரே தளத்தில் எளிதில் மேற்கொள்ளும் வகையில் இந்த ஆய்வகம் வழங்குகிறது.

வைட்டல் இன்சைட்ஸில், நம்முடைய உடல்நிலை குறித்த முக்கிய தகவல்களை கண்டறியும் மதிப்பீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வகையில், தனிப்பயனாக்கப்பட்ட திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, உடல்நலத்தை மேம்படுத்த உணவுடன் கூடுதலாக எடுத்து கொள்பவை மற்றும் வாழ்க்கை முறை பரிந்துரைகள் (exercise, nutrition, supplementation, lifestyle recommendations) உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம் தனிநபர்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்களது ஆரோக்கியத்தை பற்றி புரிந்து கொண்டு, பொறுப்புடன் செயல்படுவதனால் தங்களுடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்.


உடல்நலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பிரிவில் புகழ்பெற்ற நிபுணர் திரு. .டி. இராஜாமணி (A.T. Rajamani, Strength and Conditioning Coach) கூறுகையில், "நம்முடைய உடலின் உண்மையான செயல்திறன் என்பது உடலை வருத்தி செயல்படுவதில் இல்லை, அது உங்கள் உடலை மிகச்சரியாக புரிந்துகொள்வதிலிருந்தே உண்மையான செயல்திறன் வெளிப்படும்.. உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதற்கு எங்கு ஆதரவு தேவை என்பதைத் தெளிவாகக் காண வைட்டல் இன்சைட்ஸ் மக்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு தடகள வீரராகவோ, ஒரு தொழில்முறையாளராகவோ, அல்லது ஆரோக்கியமாக இருந்தால் போதுமென விரும்புபவராகவோ இருந்தாலும், இந்த நுண்ணறிவு மதிப்பீடுகள் உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை அளிக்கவும், உடல் செயல்திறனை மீட்டெடுக்கவும், நீண்ட காலத்திற்கு உங்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவும் உதவும்" என்று தெரிவித்தார்.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கதிரியக்க நிபுணர் திரு. அருண்குமார் கோவிந்தராஜன் (Arunkumar Govindarajan, Executive Director and Radiologist) பேசுகையில், "25 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆர்த்தி ஸ்கேன்ஸை (Aarthi Scans) தொடங்கியபோது, மிக அத்தியாவசியமான நோயறியும் பரிசோதனைகளை (essential diagnostics) அனைவருக்கும் மலிவான கட்டணத்தில் எளிதில் கிடைக்கச் செய்வதே எனது இலக்காக இருந்தது. ஒரு நோயைக் கண்டறிய நாம் செய்யும் செலவு ஒருபோதும் சிகிச்சைக்குத் தடையாக இருக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று, வைட்டல் இன்சைட்ஸ் (Vital Insights) மூலம், நாங்கள் அந்த இலக்கிலிருந்து ஒரு அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறோம். அதாவது, நோய்களைத் துல்லியமாக கண்டறிவதன் மூலம் மனித ஆற்றலை, ஆரோக்கியத்தை (human potential) நீடிக்க செய்யும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். DEXA, VO2 Max பரிசோதனை, உடல்நலம், நோய்கள், உடல் இயக்க செயல்பாடுகள் குறித்த விவரங்களை அளிக்கும் விரிவான இரத்த உயிரிக்குறிகாட்டிகள் (comprehensive blood biomarkers), உடல் வலிமை மற்றும் சமநிலை பரிசோதனைகள் (strength and balance testing) மற்றும் முழு உடல் MRI இமேஜிங் போன்ற மேம்பட்ட கருவிகளை ஒருங்கிணைக்கிறோம். இதன் மூலம், உலகெங்கிலும் கிடைக்கக்கூடிய மிக விரிவான உடல் செயல்திறன் (performance) மற்றும் நீண்ட ஆயுளுக்கான (longevity) மதிப்பீடாக இருக்கும். இது துல்லியத்தை மையமாகக் கொண்ட ஆரோக்கியத்தைப் பற்றியது. மக்கள் அதிக காலம் வாழ்வது மட்டுமல்லாமல், வலுவாக வாழவும், அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவும் உதவுவதே இதன் நோக்கமாகும்." என்றார்.


அண்ணாநகரில் இந்த கிளை தொடங்கப்படுவதன் மூலம், தரவு சார்ந்த ஆரோக்கியம் (data-driven wellness) மற்றும் (preventive healthcare) தடுப்பு மருத்துவம் ஆகிவற்றை இன்னும் அதிகமான மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் பணியை வைட்டல் இன்சைட்ஸ் வலுப்படுத்தும். மேலும் மக்கள் தங்களுடைய உடல்நலம் குறித்த தெளிவு, கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துகிறது.


ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் பற்றி

திரு. வி. கோவிந்தராஜன் அவர்களால் 1988-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவைகளை வழங்கும் நிறுவனமாக முன்னணியில் இருந்து வருகிறது. 70-க்கும் மேற்பட்ட MRI ஸ்கேனர்கள், 71 CT ஸ்கேனர்கள் மற்றும் 20 பரிசோதனை ஆய்வகங்களுடன், சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் தினமும் 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்களுக்கு ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் தனது சேவைகளை வழங்கி வருகிறது. எல்லோருக்கும் ஏற்ற வகையிலான மலிவான கட்டணம், உயர் தரத்திலான இமேஜிங் மற்றும் நேர்மைக்குப் புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்கேன்ஸ், செலவு ஒருபோதும் உடல்நலன் மீதான அக்கறைக்கு விலையாக இருக்காது’ [where cost never comes at the cost of care] என்ற புதிய சுகாதார மாதிரியை முன்னோடியாகக் கொண்டு செயல்படுகிறது.



Aarthi Scans Launches India’s first Performance & Longevity Lab - Vital Insights

Aarthi Scans Launches India’s first Performance & Longevity Lab - Vital Insights 


L to R  Dr. Aarthi - Chief Radiologist and director, Aarthi scans  Dr Arun Govindarajan - Executive director, Aarthi scans  Govindarajan - CEO and Founder AT Rajamani Prabhu - Founder, Raccelarate  Avnish Parekh - Head of strategy and growth, Vital insights

Chennai, 28 October 2025: Aarthi Scans and Labs, India’s largest integrated diagnostics provider, has opened a new performance and longevity lab, Vital Insights, in Anna Nagar. The centre was inaugurated today by renowned Strength and Conditioning Coach, A.T. Rajamani, in the presence of V Govindarajan, Founder and Chairman, Aarthi Scans.

The centre will help individuals go beyond routine & conventional health checkups to understand their body from three critical dimensions namely structural, chemical, and functional. Through advanced diagnostics like DEXA scans, metabolic and blood profiling, strength and balance assessments, Full body MRI imaging and more, the lab will provide a complete view of how one’s body performs and adapts - all under one roof.

Each assessment at Vital Insights is followed by a personalized plan encompassing exercise, nutrition, supplementation, and lifestyle recommendations, enabling individuals to proactively take charge of their health and optimize performance.

A.T. Rajamani, Founder of Raccelerate, said, “True performance comes from understanding your body, not just pushing it harder. Vital Insights helps people see clearly how their body works and where it needs support. Whether you are an athlete, a professional, or someone who simply wants to stay healthy, this knowledge allows you to train wisely, recover well, and perform at your best for longer."

Mr Govindarajan, Founder of Aarthi Scans and Labs, said, “When I started Aarthi Scans over 25 years ago, my mission was to make essential diagnostics affordable and accessible to everyone. I believed that the cost to diagnose a disease should never be a barrier to treatment. Today, with Vital Insights, we take that mission a step further, from diagnosing illness to unlocking human potential. By combining advanced tools like DEXA, VO2 Max testing, comprehensive blood biomarkers, strength and balance testing, and full-body MRI- This will be the most comprehensive performance, and longevity assessment available anywhere in the world. This is about proactive, precision-driven health. Helping people not just live longer, but live stronger and perform at their best.”

With the launch of the Anna Nagar branch, Vital Insights strengthens its mission to bring data-driven performance and longevity to more individuals, empowering them to live with clarity, control, and confidence.

About Aarthi Scans and Labs

Founded in 1988 by Mr. V Govindarajan, Aarthi Scans and Labs is India's largest integrated diagnostics provider. With over 70 MRI scanners, 71 CT scanners, and 20 processing labs, Aarthi serves more than 8000 patients daily across cities like Chennai, Hyderabad, Mumbai, Delhi, Pune, Kolkata and Bangalore. Renowned for its affordable pricing, quality imaging, and ethics, Aarthi Scans is pioneering a new model of healthcare—where cost never comes at the cost of care.